மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் முதல் நிலைக் காவலர் வெட்டிக்கொலை!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கள்ளபட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் உசிலம்பட்டி காவல் ஆய்வாளரின் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று (மார்ச் 27) பணி முடிந்து முத்தையா பட்டியில் உள்ள டாஸ்மார்க் கடையில் மது அருந்தும் போது, அங்கே மது அருந்திக் கொண்டிருந்த அடையாளம் தெரியாத சிலரிடம் ஏற்பட்ட தகராறில் காவலர் முத்துக்குமார் மர்ம கும்பலால் கல்லால் தாக்கி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவருடன் இருந்த கள்ளபட்டியைச் சேர்ந்த லோடுமேன் ராஜாராம் என்பவரும்…
