இதழ்கள்
விழுப்புரம் மாவட்டம் காவல்துறை போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மின்மாற்றியை மாற்றி அமைத்த காவல் அளிநர்களுக்கு நன்றி சான்றிதழ்.
விழுப்புரம் நகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட விழுப்புரம் ரயில் நிலையம் அருகில் புதுச்சேரி விழுப்புரம் சாலையில் இருந்து மின்மாற்றி பொதுமக்களுக்கு போக்குவரத்துக்கும் இடையூறாக இருந்ததால் அடிக்கடி விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.திரு..ப. சரவணன்.இ.கா.ப. அவர்கள் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர்.தி.ரு.ஷே.ஷேக். அப்துல் அவர்களின் உத்தரவின் பெயரில் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். திரு. லட்சுமணன் அவர்களின் உதவியுடன் விழுப்புரம் உட்கொண்ட உதவி காவல் கண்காணிப்பாளர்.திரு. ரவிந்திர குமார் குப்தா .இ.காப அவர்கள் தலைமையில்…
நடிகர் ரோபோ சங்கர் காலமானார் !
பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர்(46) உடல் நலக்குறைவால் காலமானார். சென்னையில், நேற்று ஷூட்டிங்கின்போது மயங்கி விழுந்த அவர் தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சற்றுமுன் அவரது உயிர் பிரிந்தது. இவர், விஸ்வாசம், மாரி, வேலைக்காரன், புலி உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
ஒரு கோடி கையெழுத்து இயக்கம்” – நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சி தொடங்கி வைத்தது.
மத்திய பாஜக அரசு வாக்கு திருடியதை கண்டித்து கன்னியாகுமரி மாநகர காங்கிரஸ் கட்சியின் சார்பில் “ஒரு கோடி கையெழுத்து இயக்கம்” இன்று (வியாழக்கிழமை) தொடங்கப்பட்டது. நாகர்கோவில் டெரிக் சந்திப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் நவீன்குமார் தலைமையேற்றார். பொதுமக்கள் இடையே பாஜக அரசின் எதிர்மறை செயல்பாடுகளை வெளிச்சமிட்டுக் காட்டும் வகையில் கையெழுத்து சேகரிப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் குமரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கையெழுத்து இயக்கத்தை…
கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் வட்டம் புதுப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஊட்ட சத்து பொருட்கள் வழங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் வட்டம் புதுப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள்* 1.பேரிச்சம்பழம்2.ஹெல்த் மிக்ஸ் பவுடர்3.முட்டை4.கொண்டைக்கடலை5.பச்சைப்பயிறு6.மணிலா7.மொச்சை பயறு8.அவில் வழங்கும் விழா… இன்று 18-09-2025 நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ரங்கப்பனூர் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி R.M.S.K #அர்ச்சனாகாமராஜன் அவர்கள் சுமார் 20 காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் சம்பத்குமார் அவர்களின் தலைமையில் மருத்துவ அலுவலர்கள் முத்துக்குமரன் மருத்துவர் ரஞ்சிதா அவர்கள் நோயாளிகளுக்கு காச நோய் தடுப்பு…
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்ந ல்லூர் மணக்குலவிநாயகர் மருத்துவ மனையில் உணவு வழங்கினார்கள்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் வட்டம் மணக்குல விநாயகர் மருத்துவ மனையில் சர்க்கரை மற்றும் ரத்தகோதிப்புக்கு உணவு முறையை போது மக்களுக்கு தெளிவு படுத்தி அதற்கு உண்டான உணவை வழங்கினார்கள். இதில் ஏராளமான போது மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். விழுப்புரம் மாவட்ட நிருபர் – அந்தோனிசாமி
திண்டுக்கல், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் – ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியே காத்திருப்பு அறையை அமைச்சர் ஐ.பெரியசாமி, சச்சிதானந்தம் ஆகியோர் திறந்து வைத்தனர்.
திண்டுக்கல், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுடன் மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியே காத்திருப்பு அறையை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் ஆகியோர் திறந்து வைத்தனர். இந்நிகழ்வில் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார், மாநகராட்சி மேயர் இளமதி, துணை மேயர்.ராஜப்பா, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர், மருத்துவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தந்தை பெரியார் அவர்களின் 147 – ஆவது ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தல் .
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 147 ஆவது ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு கோவை காந்திபுரத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் எக்ஸ் எம்எல்ஏ அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அவர்களுடன் கழக நிர்வாகிகள் தந்தை பெரியார் தியாகிகள் கழக நிர்வாகிகள் மாமன்ற உறுப்பினர்கள் திராவிட இயக்க தோழர்கள் கழகத் தொண்டர்கள் மரியாதை செலுத்தினர். தமிழக விடியல் கோவை செய்தியாளர் – ல. ஏழுமலை
திண்டுக்கல் பேகம்பூர், சிக்னல் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த பெண்ணிடம் அதிவேக இருசக்கர வாகனத்தில் வந்த முகத்தில் கர்சீப் கட்டிய மர்ம நபர்கள் 2 – பேர் செயின் பறிக்க முயற்சி !
பெண் கீழே விழுந்ததால் செயினை பறிக்க முடியாமல் கொள்ளையர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பி ஓட்டம். சம்பவ இடத்தில் நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
நெடுஞ்சாலை ரோந்து தலைமை காவலருக்கு பொதுமக்கள் பாராட்டு.
வேடசந்தூர் அருகே உள்ள லட்சுமணன்பட்டியில் பழுதாகி நின்றிருந்த லாரியின் பின்னால் சேலத்தில் இருந்து மதுரையை நோக்கி பெயிண்ட் ஏற்றி சென்ற லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில் லாரியில் இருந்த பெயிண்ட் ரோட்டில் கொட்டி இருந்தது. அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் வழுக்கி விழுந்து காயம் அடைந்தனர். இதனை பார்த்த வேடசந்தூர் நெடுஞ்சாலை ரோந்து போலீஸ் தலைமை காவலர் ராஜேந்திரன் களத்தில் இறங்கி தனக்கு பணி நேரம் முடிந்தும் வீட்டுக்குச் செல்லாமல் பெயிண்டை அப்புறப்படுத்தி மேலும்…
கடலூரில் ராமசாமி படையாட்சியார் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.
கடலூரில் ஆ.தி. மு. க, சார்பில் சுதந்திர போராட்ட தியாகி,முன்னாள் அமைச்சர் ராமசாமி படையாட்சியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மணி மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு முன்னாள் அமைச்சர் சம்பத் தலைமையில்,மாவட்ட செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன், எம். எல். ஏ. பாண்டியன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செளித்தினர்.பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
