இதழ்கள்
நாஞ்சில் கலையக ஆண்டு விழாவில் தவப்புதல்வி விருதுகள் வழங்கப்பட்டன.
செப் 8 கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டம் பொற்றயடி சாய்பாபா அரங்கில், நாஞ்சில் கலையக ஆண்டு விழா盛ாக நடைபெற்றது. இதில் நூல் வெளியீடு, கவியரங்கம், நூல் ஆய்வு, பாராட்டு விழா, விருது விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. நீயே உன்னால் உனக்காக அறக்கட்டளையின் தவப்புதல்வி அமைப்பு சார்பில், கலைத்துறையில் சிறந்து விளங்கும் பலர் சிறப்பு விருதுகளை பெற்றனர். இவ்விருதுகளை அமைப்பின் நிறுவனர் மற்றும் தலைவர் பேராசிரியர் சுபத்ரா செல்லத்துரை வழங்கினார். விருது பெற்றவர்களில் கவுன்சிலர் குறமகள் அசோக்,…
ஆரல்வாய்மொழி காவல் நிலையம் சிறந்த நிலையமாக தேர்வு – கேடயம் வழங்கி பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS அவர்கள் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் இன்று (08.09.2025) மாவட்ட ஆயுதப்படையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு பணிகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும், குற்றங்களை தடுப்பது, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவது, போக்சோ வழக்குகளில் விரைவான குற்றப்பத்திரிகை தாக்கல், திருட்டு வழக்குகளில் குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்தல் ஆகியவற்றில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என காவல் கண்காணிப்பாளர் வலியுறுத்தினார்….
திருநெல்வேலியில் நடைபெற்ற கபடி போட்டியில் பத்ரு ஸ்போர்ட்ஸ் கிளப் வல்லம் இரண்டாம் இடம் பிடித்து சாதனை.
தென்காசி செப்டம்பர் 8 தென்காசி மாவட்டம் வல்லத்தில் பல வருடங்களாக பத்ரு ஸ்போர்ட்ஸ் கிளப் என்னும் பெயரில் இளைஞர்களுக்கான கபடி பயிற்சி நடைபெற்று வருகிறது இந்த இளைஞர்கள் குழுவானது பல வருடங்களாக திறமையான விளையாட்டு வீரர்களை உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது. தற்போதைய கால சூழ்நிலையில் இளைஞர்கள் தவறான பாதைகளில் சென்று விடாமல் இதுபோல பாரம்பரியமிக்க உடல் வாகை திறம்படுத்தக்கூடிய விளையாட்டுகளில் இப்பகுதியில் உள்ள மாணவச் செல்வங்கள் ஈடுபட்டு வருவது இப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இதில்…
காங்ரீட் சாலை அமைத்துக் கொடுத்த. திமுக நகரமன்ற உறுப்பினரும் தலமை கழக பேச்சாளருமான ஜாகீர் உசேனுக்கு பொதுமக்கள் பாராட்டு.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து ஜயப்பன் கோவில் , உழவர் சந்தை செல்லும் சாலை நீண்டகாலமாக குண்டும் குழியுமாக காணப்பட்டதால் குன்னூர் நகரமன்ற கூட்டத்தில் பல முறை கவுன்சிலர் ஜாகீர் உசேன் குன்னூர் நகராட்சி ஆனையாளரிடம் தொடர்ந்து சாலை அமைத்து கொடுக்க வேண்டும் என முறையிட்டதால் பொதுமக்கள் நலன் கருதி நகராட்சி ஆனையாளர் ஜாகீர்உசேன் கோரிக்கையை ஏற்று தரமான காங்ரீட் சாலை அமைக்க அனுமதி வழங்கினார். தற்போது காங்ரீட் சாலை பணி துவங்கி உள்ளதால் உழவர் சந்தை…
கடையநல்லூரியில் பெண்களுக்கான இலவச மருத்துவ முகாம் : சேர்மன் ஹபீபுர் ரஹ்மான் துவக்கி வைத்தார் :
கடையநல்லூர் செப்: 09 தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகரத்தை சார்ந்த KFA1986டிரஸ்ட் மற்றும் தாருஸ்லாம் கல்வி குழுமம் மற்றும் மதுரை அப்பல்லோ சிறப்புமருத்துவமனை இணைந்து நடத்தும் பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை கடையநல்லூர்நகர் மன்றதலைவர் மூப்பன்ஹபீபுர்ரஹ்மான் துவக்கி வைத்தார். உடன் 24 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் முஹம்மது மற்றும் 33வது நகர மன்ற உறுப்பினர் செய்த அலி பாத்திமா திமுக கேபிள் அயூப் நகர இளைஞரணி துணை அமைப்பாளர் சுகுமார் மற்றும் முருகானந்தம் அப்சரா…
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் சேதம் – சுற்றுலாப் பயணிகள் அச்சம் !
செப் 8, கன்னியாகுமரி : கன்னியாகுமரி :சர்வதேச சுற்றுலாத்தலமாக விளங்கும் கன்னியாகுமரியில், கடல் நடுவே நிறுவப்பட்டுள்ள கண்ணாடி கூண்டு பாலத்தில் கண்ணாடி விரிசல் விழுந்து சேதம் ஏற்பட்டுள்ளது. ஆபத்தை உணராமல் சுற்றுலாப் பயணிகளை அந்தப் பாலத்தில் அனுமதித்து வருவதாக மாவட்ட நிர்வாகம் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், உடனடியாக வல்லுநர் குழுவை அமைத்து பாலத்தை ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி, வேகமாக வைரலாகி வருகின்றன. கன்னியாகுமரி நகர…
விடியல் ஆட்சியில் வக்புச் சொத்து திருட்டு பரபரப்பு.
கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு முஸ்லிம் ஜமாத்தின் கீழ் வரும் சுமார் 45 கோடி மதிப்பிலான வக்புச் சொத்து, ரியல் எஸ்டேட் மாஃபியாக்களுக்கு லஞ்சம் பெற்று போலி பத்திரம் செய்து கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நடவடிக்கையில், வேர்க்கிளம்பி பூவாங்கோடு பத்திர பதிவாளர் கௌரிசங்கர் தொடர்புடையவர் என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதையடுத்து, அவர்மீது உடனடியாக துறை ரீதியான நடவடிக்கை எடுத்து கைது செய்து போலி பத்திரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், இல்லையெனில் பெரிய அளவிலான போராட்டம்…
கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஆசிரியர்களை சந்தித்து உரையாடிய எம்.எல்.ஏ.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ குவைத் நாட்டில் நந்தவனம் அமைப்பு சார்பில் நடத்தப்படும் தமிழ் வகுப்பில் பயிலும் குழந்தைகளையும், ஆசிரியர்களையும், நிர்வாகிகளையும் சந்தித்தார். கடல் கடந்து தமிழ் வளர்க்கும் அவர்களின் தமிழ் தொண்டினை பாராட்டியதோடு, அவர்களின் முயற்சிக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி என்றும் துணை நிற்கும் என்று உறுதி அளித்தார். பண்ருட்டி செய்தியாளர்R. விக்னேஷ்
நகைகளை திருடிய சட்ட கல்லூரி மாணவி கைது.
செப் 8, கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வழக்கறிஞரின் வீட்டில் இருந்து நகைகள் திருடிய வழக்கில், சட்ட கல்லூரி மாணவி கைது செய்யப்பட்டார். நாகர்கோவில் அருகே வசிக்கும் வழக்கறிஞரிடம் தோழியாக பழகி வந்த அர்ஷிதா டிப்னி (23) என்பவர், அவர் இல்லத்திற்கு சென்ற போது 12 பவுன் நகைகளை திருடியதாக போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், அர்ஷிதா டிப்னியை கைது செய்து மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர். குமரி மாவட்ட செய்தியாளர்…
கன்னியாகுமரி மாவட்டம் தம்மத்துக்கோணம் அனைத்து சமுதாய வகை திரு குளத்தங்கரை ஆலமரத்தடி அழகன் மன்னராஜா குலைவாழை இசக்கி அம்மன் திருக்கோவில் முதல் கொடை விழா நடைபெற்றது.
செப் 7, கன்னியாகுமரி இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர். மாதவன் அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். மேலும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். குமரி மாவட்ட செய்தியாளர் பாவலர் ரியாஸ்.
