இதழ்கள்
கன்னியாகுமரியில் சாலைப் பாதுகாப்பு குறித்து கலந்தாலோசனை கூட்டம்..
செப் 24 கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக குறள் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ஆர். அழகுமீனா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் சாலைப் பாதுகாப்பு குறித்த கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. ஸ்டாலின், இ.கா.ப., நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் திரு. நிஷாந்த் கிருஷ்ணா, பத்மநாபபுரம் சார்ஆட்சியர் திரு. வினய்குமார் மீனா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி. சுகிதா, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் செல்வி. எஸ். காளீஸ்வரி…
பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் புகைப்படத்திற்கு தமிழக விடியல் இதழ் சார்பில் மரியாதை.
பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 90-வது பிறந்தநாள், தமிழக விடியல் இதழ் சார்பில் மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி மதுரையில் உள்ள தினத்தந்தி அலுவலகத்தில் பத்ம ஸ்ரீ டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனாரின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.
நரேந்திர மோடி ஜீ – அவர்களின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு., மருத்துவ முகாம்..
நீலகிரி மாவட்டம் உதகை நகர பாஜக சார்பாக உயர்திரு பாரத பிரதமர் உலகம் போற்றும் உத்தமர் நரேந்திர மோடி ஜீ அவர்களின் 75 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இரு வார சேவை நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக உதகை நகரில் உள்ள காந்தல் பெனட் மார்க்கெட் பகுதியில் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் மாநில,மாவட்ட ,மண்டல நிர்வாகிகள் ,கிளை தலைவர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது…..
நவராத்திரியின் இரண்டாம் நாளில் நவ துர்கைகளில் பிரம்மச்சாரிண்யை தேவியை தான் வழிபடுகின்றோம்.
நவராத்திரியின் இரண்டாம் நாளில் நவ துர்கைகளில் பிரம்மச்சாரிணியை தேவியை தான் வழிபடுகின்றோம். பிரம்மச்சாரிணி தேவிக்கு சிவப்பு நிற ஆடை அணிவிக்கப்பட்டு அவளுக்காக அர்ப்பணிக்கப்படும் பூஜைகளில் பக்தர்கள் ஈடுபடுவார்கள். பிரம்மசாரணி என்ற சொல்லுக்கு பிரம்மச்சாரி என்ற வார்த்தையில் இருந்து வந்தது அதாவது தவம் செய்தல் என்று பொருள் .இன்று இந்த பிரம்மசாரிணி அம்மனை வழிபடுவதால் துணிவு, பொறுமை, ஒழுக்கம், தீவிர கவனம் இவற்றை அடையலாம். இன்று மூன்றாம் பிறை பார்த்துவிட்டு பிரம்மசாரிணி அம்மனை மனசில் நினைத்து வேண்டினால் மனதில்…
சிறுமலை வனப்பகுதியிலிருந்து சுமார் 5 கிலோ மதிப்பிலான சந்தன மரத்துண்டுகள் பிடிபட்டது.
திண்டுக்கல், செப் : 24 திண்டுக்கல் சிறுமலை, தாழக்கடையை சேர்ந்தவர் மீனா (45).இவரின் உறவினர் சங்கர் (25).இருவரும் சிறுமலை வனப்பகுதியிலிருந்து சுமார் 5 கிலோ மதிப்பிலான சந்தன மரத்துண்டுகளை வெட்டி பேக்கில் போட்டு மோட்டார் சைக்கிளில் எடுத்து வந்தனர் இதையடுத்து மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் உத்தரவின் பேரில், சிறுமலை வனச்சரக அலுவலர் பாஸ்கரன் தலைமையிலான வனத்துறையினர் அவர்கள் 2 பேரையும் பிடித்து தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.மேலும் அவர்களிடமிருந்து சந்தன துண்டு கட்டைகள் பறிமுதல்…
நாகர்கோவிலில் வணிக வளாக உரிமையாளர்களுடன் காவல் துறையின் சிறப்பு கலந்துரையாடல்.
செப் 23 கன்னியாகுமரி நாகர்கோவில் மாநகரத்தில் போக்குவரத்து நெரிசல், பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் நலன் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்கும் நோக்கில், நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் டாக்டர். திரு. லலித் குமார்., இ.கா.ப தலைமையில், வணிக வளாக உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் சிறப்பு கலந்துரையாடல் இன்று மாலை நாகர்கோவில் உட்கோட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், வணிக வளாகங்களுக்குச் செல்லும் வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனங்களை வளாகம் முன்பாகவே சாலையில் நிறுத்துவதால் ஏற்படும் போக்குவரத்து தடைகள்…
பொது விநியோக கட்டிடம் கட்டுமான பணி துவக்க நிகழ்வு நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை ஸ்டேஷன் ரோடு ரவுண்டானாவில் அமைந்துள்ள கடை எண் 4க்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு நமது தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி நமது சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் முனைவர் எம் எச் ஜவாஹிருல்லா தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்படவுள்ள பொது விநியோக கடை கட்டுமான பணி துவக்கம் ஸ்டேஷன் ரோடு மணக்காட்டு பள்ளிவாசல் அருகில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. முன்னதாக அத்தாயா மாணவர் கிராத் ஓத முன்னாள் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் பட்டாணி…
திருநெல்வேலி மாவட்டத்தில், சாதிய மோதல்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, மொத்தம் 2 ஆயிரத்து 115 இடங்களில், சாதிய குறியீட்டு அடையாளங்கள் அகற்றம்! மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் தகவல்!
திருநெல்வேலி, செப். 23:-திருநெல்வேலி மாவட்டத்தில், சாதிய ரீதியிலான பிரச்சனைகளைக் கட்டுக்குள் கொண்டுவர, மாவட்டக் காவல்துறையின் சார்பில், பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரப்படுகின்றன. பொது மக்கள் மற்றும் பள்ளி மாணவ- மாணவியர்களிடையே, இது சம்பந்தமாக விழிப்புணர்வு சந்திப்புகள், அடிக்கடி நடத்தப்பட்டும் வருகின்றன.சாதிய ரீதியான மோதல்கள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடும், நபர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து, அவர்களிடம் எடுத்துரைத்து, எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு, படிப்பில் கவனம் செலுத்தி, குற்ற செயல்கள் மற்றும்…
குறுவட்ட அளவில் நடைபெற்ற தடகளப்போட்டிகளில், பதக்கங்களை குவித்த, திருநெல்வேலி நடுக்கல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் !
திருநெல்வேலி, செப். 23:- திருநெல்வேலி புறநகர் மாவட்டம், சேரன்மகாதேவி குறு வட்ட அளவில், இனறு (செப்டம்பர். 23) நடைபெற்ற தடகளப் போட்டிகளில், 2 தங்கம், 7வெள்ளி மற்றும் 12 வெண்கலம் என, மொத்தம் 21 பதக்கங்களைப் பெற்று, வெற்றிகளைக் குவித்த, திருநெல்வேலி பேட்டை நடுக்கல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகளுக்கு , பதக்கம் மற்றும் சான்றிதழ் ஆகியவற்றை வழங்கி, பள்ளித் தலைமையாசிரியை “முனைவர்” ரோகிணி, வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகளைத் தெரிவித்தார்.பள்ளி உதவித் தலைமையாசிரியை மைமூன் நிசா, முன்னிலையில்…
எங்க ஏரியா உள்ள வராத!
வட்ட செயலாளர் vs மாமன்ற உறுப்பினர் வார்த்தை மோதல்கள்! வெளியான ஆடியோ.! கன்னியாகுமரிமாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சி 39-வது வார்டு கவுன்சிலராக பொறுப்பு வகிப்பவர் ரிஸ்வானா பாத்திமா. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமிற்கு வீடு வீடாக சென்று நோட்டீஸ் கொடுத்துள்ளார். அதே வார்டில் உள்ள வட்ட செயலாளர் சையது வீட்டிற்கும் சென்று நோட்டீஸ் கொடுத்துள்ளார். இதுசம்பந்தமாக வட்ட செயலாளர் மாமன்ற உறுப்பினர் ரிஸ்வானாவிடம் தொடர்பு கொண்டு பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி…
