அரசியல்
கன்னியாகுமரி கண்ணாடிக் கூண்டு பாலம் – அதிமுக எம்எல்ஏ தளவாய் சுந்தரம் ஆய்வு.
செப் 9 கன்னியாகுமரி கண்ணாடி கீறல் சம்பவம் – அரசுக்கு கண்டனம் கன்னியாகுமரி கடல் நடுவே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடிக் கூண்டு பாலத்தில் கண்ணாடி கீறல் ஏற்பட்டதை தொடர்ந்து, அதிமுக எம்எல்ஏ திரு. எண். தளவாய் சுந்தரம் அவர்கள் அரசின் அலட்சியத்தை கண்டித்து, பொதுமக்களுக்கு ஏற்பட்ட அச்சத்தை போக்க தவறியதற்காக கடும் கண்டனம் தெரிவித்தார். நேரில் ஆய்வு மேற்கொண்ட தளவாய் சுந்தரம் பராமரிப்பு பணிகளின் போது சுத்தியல் விழுந்து கண்ணாடி சேதமடைந்ததை அடுத்து, தளவாய் சுந்தரம் அவர்கள் கழக…
மகளிர் தொண்டரணி பொறுப்பாளர்கள் சந்திப்பு :
கோவை வடக்கு மாவட்ட மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளராக புதிதாக பொறுப்பு ஏற்றுக்கொண்ட சுமதி ரமேஷ் , மாநில மகளிர் தொண்டரணி துணைசெயலாளர், நா.மாலதி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். உடன் கழகத்தின் மூத்த நிர்வாகியும் மகளிரணியின் மாவட்ட துணை அமைப்பாளருமாகிய பார்வதி, கோவை வடக்கு மாவட்டதுணைசெயலாளர் ஜெயந்தி, மகளிரணி மகளிர் தொண்டரணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் நாகரத்தினம், ஜெனிபர்,மற்றும், நீதிமணி ஆகியோர் உடன் இருந்தனர். கோவை மாவட்ட செய்தியாளர் : சம்பத்குமார்
நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் சுகாதார அவலம் !
நாகர்கோவில் : 09-09-2025 நாகர்கோவில் மாநகராட்சி அண்ணா பேருந்து நிலையம் சுகாதார சீர்கேட்டால் பாதிக்கப்பட்டு, தொற்றுநோய் பரவும் ஆபத்தான நிலை உருவாகியுள்ளது. சுகாதார அதிகாரிகள் மெளனம் பேருந்து நிலையத்தில் குப்பை, கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசும் நிலையில், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். ஆனால், சுகாதார அதிகாரிகள் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெளனம் காக்கின்றனர் என பொதுமக்கள் குற்றச்சாட்டு எழுப்புகின்றனர். “இந்த அவலநிலையை கருத்தில் கொண்டு நாகர்கோவில் மாநகராட்சி மற்றும் மாநகராட்சி ஆணையர் தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுப்பார்களா?”…
நீலகிரி மாவட்டத்தின் கட்டிடங்கள் கட்டுமான வரைவிதிகளுக்காக மாண்புமிகு வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி அவர்களிடம் ஆலோசனை மேற்கொண்டார் அரசு தலைமை கொறடா கா. ராமச்சந்திரன் :
நீலகிரி மாவட்டத்தில் 1993 ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சி காலத்தில் முதன்மை திட்டத்தின் அடிப்படையில் கொண்டு வரப்பட்ட கட்டிடங்கள் கட்டுமான வரை விதி சட்டத்தின் மூலமாக நீலகிரி மாவட்டத்தில் ஏழை எளிய மக்கள் கட்டிடங்களுக்கு அனுமதி பெற மிகக் கடினமான விதிமுறைகள் இருந்ததின் காரணமாக மாவட்டம் முழுவதும் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் அனுமதி பெறாமல் பொதுமக்கள் கஷ்டப்படுகின்றனர். இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மாண்புமிகு திராவிட மாடல் ஆட்சிநாயகர் தமிழ்நாடு முதல்வர் தளபதியார் அவர்களின்…
விடியல் ஆட்சியில் வக்புச் சொத்து திருட்டு பரபரப்பு.
கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு முஸ்லிம் ஜமாத்தின் கீழ் வரும் சுமார் 45 கோடி மதிப்பிலான வக்புச் சொத்து, ரியல் எஸ்டேட் மாஃபியாக்களுக்கு லஞ்சம் பெற்று போலி பத்திரம் செய்து கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நடவடிக்கையில், வேர்க்கிளம்பி பூவாங்கோடு பத்திர பதிவாளர் கௌரிசங்கர் தொடர்புடையவர் என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதையடுத்து, அவர்மீது உடனடியாக துறை ரீதியான நடவடிக்கை எடுத்து கைது செய்து போலி பத்திரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், இல்லையெனில் பெரிய அளவிலான போராட்டம்…
கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஆசிரியர்களை சந்தித்து உரையாடிய எம்.எல்.ஏ.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ குவைத் நாட்டில் நந்தவனம் அமைப்பு சார்பில் நடத்தப்படும் தமிழ் வகுப்பில் பயிலும் குழந்தைகளையும், ஆசிரியர்களையும், நிர்வாகிகளையும் சந்தித்தார். கடல் கடந்து தமிழ் வளர்க்கும் அவர்களின் தமிழ் தொண்டினை பாராட்டியதோடு, அவர்களின் முயற்சிக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி என்றும் துணை நிற்கும் என்று உறுதி அளித்தார். பண்ருட்டி செய்தியாளர்R. விக்னேஷ்
தென்காசியில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக செயல்படும் நகர் மன்ற தலைவர் சாதிரையும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் மாபெரும் கண்டனம் ஆர்ப்பாட்டம் :
தென்காசி :செப்-07 தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தூய மிக்கேல் அதிதூதர் திருத்தலமான து 400 ஆண்டுகளுக்கு மேல் அனைத்து மதத்தினருக்கும் அருள்பாலித்து புதுமைகள் பல புரிந்து கொண்டிருக்கும் ஆலயம் ஆனது தென்காசி திருநெல்வேலி செல்லும் சாலை தினசரி மார்க்கெட் அருகில் அமைந்துள்ளது. இந்த மார்க்கெட் கட்டிடம் ஆனது கடந்தாண்டு இடிக்கப்பட்டு புதிய கட்டிடங்கள் கட்டுமான நடைபெற்று வந்த நிலையில் இதற்கான வாயில்கள் ஆலயத்தின் எதிர்புறம் பெரிய அளவில் அமைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் ஆலய நிர்வாகம் சென்னை…
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மதுரையில் செய்தியாளர் சந்திப்பு :
பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது அவசரப்பட்டு எடுத்த முடிவு அல்ல : நிதானமாக எடுத்த முடிவு 2026இல் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார் என கூறியதற்காக அவருடன் கூட்டணி என்பதா? – டிடிவி தினகரன் கூட்டணி குறித்து டிசம்பரில்தான் முடிவு அறிவிப்பேன் – டிடிவி தினகரன் ஓ.பன்னீர்செல்வத்தை பிரதமர் மோடி சந்திக்காத விவகாரத்தில் நயினார் பதில் ஆணவமானது – டிடிவி தினகரன் அண்ணாமலை தலைவராக இருந்தவரை கூட்டணியை நல்ல முறையில் கையாண்டார் டிடிவி தினகரன் மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில்…
குளச்சல் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் !
செப்6, கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் :கடந்த 60 ஆண்டுகளாக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நடத்தப்பட்டு வந்த ஆயுத பூஜை விழா இந்த ஆண்டு நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. வரும் அக்டோபர் 1-ஆம் தேதி ஆயுத பூஜை கொண்டாடப்பட உள்ள நிலையில், விழாவை நடத்த வேண்டும் என வலியுறுத்தி குளச்சல் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு அண்ணா தொழிற்சங்கம் மற்றும் பி.எம்.எஸ். சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் நிர்வாகிகள்…
செக்கிழுத்த செம்மல் வ உ சி சிதம்பரனார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துதல் :
செக்கிழுத்த செம்மல் சுதந்திர போராட்ட வீரர் வ உ சிதம்பரம் பிள்ளை 154 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கோவை அவிநாசி சாலையில் உள்ள வ உ சி பூங்கா மைதானத்தில் அமைந்துள்ள செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் திருவருவ சிலைக்கு மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நான் கார்த்திக் இ எக்ஸ் எம்எல்ஏ அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இந்நிகழ்வில் கழக நிர்வாகிகள் திமுக தீர்மானகுழு உறுப்பினர் மு இரா செல்வராஜ் கலை இலக்கிய பகுத்தறிவு…
