இதழ்கள்
மாநில ஆக்கிப் போட்டிக்கு உடுமலை அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு.
அக்டோபர் 10 : உடுமலை இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமத்தின் சார்பில் கோவை மண்டல அளவிலான ஹாக்கி அணிக்கான தேர்வு போட்டி நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடந்தது. இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் பெதப்பம் பற்றிய அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் இளையோர் பிரிவில் ராஜேஷ். தீனா. ஆகியோர் மற்றும் மூத்தோர் பிரிவில் கௌதம். மிகவும் மூத்தோர் பிரிவில் யோகேஸ்வரன், திவாகர் .பொன்ராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் சிவகங்கை அரியலூர் விழுப்புரம்…
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிரான காலணி வீச்சு சம்பவம் — நாகர்கோவில் வழக்கறிஞர்கள் கடும் கண்டனம்!
அக் 09; கன்னியாகுமரி நாகர்கோவில் : உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அவர்களின் மீது வழக்கறிஞர் ஒருவர் காலணி வீசியது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நீதிமன்றம் முன்பு, அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் இன்று மதிய உணவு இடைவேளையில் திரண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். “நீதித்துறையின் மரியாதை காக்கப்பட வேண்டியது அவசியம். நீதிபதி மீது தாக்குதல் நடத்தும் சம்பவம் கண்டனத்துக்குரியது….
உடுமலைப் பகுதிகளில் அரசாணிக்காய் அறுவடை.
செப் 09 : உடுமலை உடுமலை பகுதிகளில் அரசாணிக்காய் அறுவடை துவங்கியுள்ள நிலையில், மழையில்லாததால் மகசூல் குறைந்துள்ளது. உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில், ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், அரசாணிக்காய் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மூன்று மாத சாகுபடி பயிரான, இக்காய் நாட்டு ரகமாக உள்ளது. கேரளா மற்றும் வட மாநில மக்கள் அதிகளவு உண்ணும் காயாக உள்ளதால், உடுமலையில் விளைவிக்கப்படும், அரசாணிக்காய், உள்ளூர் சந்தை மட்டுமின்றி, கேரளா, ஹரியானா, ராஜஸ்தான், ஒடிசா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு விற்பனைக்குச்செல்கிறது….
ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா.
உடுமலை அக்.9- உடுமலை குறிஞ்சேரியில் ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் கோவில் உள்ளது இது கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா திருக்கல்யாண உத்சவவிழாநடந்தது. இதை ஒட்டி இதை ஒட்டி நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு விளக்கு ஏற்றுதல் கோ பூஜை தேவதாஅனுக்ஞை விசுவக்சேன ஆராதனை விசேஷ ஹோமங்கள் நடைபெற்றன. இவ்விழாவில் குறுஞ்சேரி சுற்று பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்
மதுபோதையில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வீட்டிற்கு மிரட்டல் விடுத்த இளைஞர்!
ஆக் 09; கன்னியாகுமரி குமரி மாவட்டம் இடலாக்குடி பகுதியை சார்ந்தவர் சபீக். இவர் சென்னையில் புரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு த.வெ.க தலைவர் விஜய் வீட்டிற்கு மிரட்டல் விடுக்கும் வகையில் சென்னை மாநகர உதவி கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தொலைபேசி வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விட்டதாக தெரிய வருகிறது. இந்நிலையில் இவர், நேற்று புலனாய்வு குற்றவியல் காவலர்களால் சென்னையில் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சபீக் த.வெ.க தலைவர் விஜய் குமரி…
திண்டுக்கல் மாவட்டம் சிறப்பாக செயல்பட்டு இருந்தாலும், சில பணிகளில் தொய்வு இருப்பதை கண்டறிந்துள்ளோம். – துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி…
திண்டுக்கல் – திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் 52 துறையுடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். பின் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, முதலமைச்சர் உத்தரவின் பேரில் ஒவ்வொரு மாவட்டமாக சென்று மாவட்ட அமைச்சர்கள், அனைத்து துறை அரசு அலுவலர்களையும் வரவழைத்து அரசின் திட்டப் பணிகள் எவ்வாறு செயல்பட்டு உள்ளது. என்ன வாக்குறுதிகள் கொடுத்திருக்கிறோம். என்ன பணிகள் முதலமைச்சர் அறிவித்துள்ளார். எந்தப் பணிகள் தொடங்கி இருக்கிறது. எந்த பணிகளில் தொய்வு இருக்கிறது. எந்த…
திருநெல்வேலியில், முதலமைச்சர் கோப்பைக்கான, கல்லூரி மாணவிகளுக்கு இடையேயான, மாநில அளவிலான ஹாக்கி போட்டிகளை, துவக்கி வைத்த சபாநாயகர் அப்பாவு..
திருநெல்வேலி, அக். 8:- முதலமைச்சர் கோப்பைக்கான, கல்லூரி மாணவிகளுக்கு இடையேயான, மாநில அளவிலான ஹாக்கி போட்டிகள், இன்று (அக்டோபர். 8) திருநெல்வேலியில், தொடங்கின. துவக்க நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. சுகுமார், தலைமை வகித்தார். திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் வழககறிஞர் சி. ராபர்ட் புரூஸ், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் “ரூபி”ஆர். மனோகரன், நெல்லை மாநகராட்சி மேயர் கோ. ராம கிருஷ்ணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் ஆகியோர், முன்னிலை வகித்தனர்….
தி.மு.க–வை கடுமையாக விளாசிய அன்புமணி ராமதாஸ்.!
கன்னியாகுமரி, அக். 08 : “உரிமை மீட்க தலைமுறை காக்க” என்ற பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலமெங்கும் நடைபெறும் நடை பயணத்தின் ஒரு பகுதியாக, நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு இன்று மாலை மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய பா.ம.க மாநிலத் தலைவர் அன்புமணி ராமதாஸ், கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் மணல் கொள்ளை, மலை கொள்ளை போன்ற சட்டவிரோத செயல்களை கடுமையாக விமர்சித்தார். மேலும், தி.மு.க அரசின் செயல்பாடுகளைத் தாக்கி, “தி.மு.கவிற்கு ஏன் வாக்களிக்க…
திருநெல்வேலியில், காவல்துறை சார்பாக நடைபெற்ற, மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம்கள்.! மாநகர காவல் துணை ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பங்கேற்று, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றனர்!
திருநெல்வேலி,அக்.8:- தமிழ்நாடு காவல்துறை தலைவர் (DGP) உத்தரவுப்படி, மாநிலம் முழுவதிம் உள்ள மாநகர மற்றும் மாவட்ட காவல்துறை அலுவலகங்களில், புதன்கிழமை தோறும், மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்கள், நடைபெற்று வருகின்றன. அதன்படி, பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் பகுதியிலுள்ள, நெல்லை மாநகர் மாவட்ட காவல் ஆணையாளர் அலுவலகத்தில், மாநகர காவல் ஆணையாளர் சந்தோஷ் ஹாதிமணி வழிகாட்டுதல்படி , இன்று (அக்டோபர். 8) புதன் கிழமை மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம், நடைபெற்றது. இதில் மொத்தம் 15 மனுதாரர்கள்…
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முதியோர் இல்லத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி…
மதுரை, சிம்மக்கல் முதியோர் இல்லத்தில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு தவழும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்விற்கு இல்ல மேலாளர் கிரேசியஸ் தலைமை தாங்கினார். செல்வபிரமா ஏஜென்சி நிறுவனர் செந்தில்குமார், முருகேச பாண்டியன், மற்றும் சமூக ஆர்வலர்கள் ஷேக் மஸ்தான் மற்றும் நூருல்லாஹ் ஆகியோர் இணைந்து 30 தவழும் மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர். மாவட்ட செயலாளர் ராவியத் பேகம் ஒருங்கிணைத்தார். நிகழ்வில் பொதுமக்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். மதுரை மாவட்ட செய்தியாளர் –…
