இதழ்கள்
அருணாச்சலா ஹைடெக் கல்லூரி நிர்வாக அலட்சியம் – பொதுமக்கள் கண்டனம்!
அக் 11; கன்னியாகுமரி – கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் சாஜித் மீது அருணாச்சலா ஹைடெக் பொறியியல் கல்லூரி டிரைவர் சஜின் கொடூரமாக தாக்குதல் நடத்திய சம்பவம் மாணவர்கள் வட்டாரத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நாள் திருவிதாங்கோடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் “கேம்பஸ் விசிட்” என்ற பெயரில் அருணாச்சலா ஹைடெக் கல்லூரிக்கு அழைத்து செல்லப்பட்டனர். அப்போது, இரு மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட சிறிய கருத்து வேறுபாட்டில் தாமாகவே…
பாதாளசாக்கடை சரிசெய்யும் பணியினை மாவட்ட துணை செயலாளர் – உதகை நகரமன்ற துணை தலைவர்.ஜே.ரவிகுமார் பார்வை..
உதகை மெயின் பஜார் பகுதியில் சாலைகளில் பாதாளசாக்கடை வழிந்தோடிக்கொண்டு இருந்த நிலையில், அதனை, சரிசெய்யும் பணியினை மாவட்ட துணை செயலாளர் – உதகை நகரமன்ற துணை தலைவர் ஜே.ரவிகுமார் பார்வையிட்டு, ஆய்வு செய்தபோது.
50-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் உலக சாதனை..
பொள்ளாச்சி விசுவதித்தி மேல்நிலைப் பள்ளியில் 50 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் உலக சாதனை நிகழ்வு சிலம்பம் கொண்டு நடைபெறுகிறது. சுமார் 222 மாணவர்கள் ஒன்றிணைந்து 50 மணி நேரம் 50 நிமிடங்கள் 50 நொடிகள் சிலம்பம் சுற்றும் மாபெரும் உலக சாதனை நிகழ்வு பொள்ளாச்சி நகரமன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் துவக்கி வைத்தார். பள்ளியின் முதல்வர் ஜாய் கரிப்பாய் மற்றும் சோழ உலக சாதனை நிறுவனர் நீலமேகம் நிமிலன் மற்றும் ஆர்த்திகா காளீஸ்வரன் செயலர்,…
காவல் நிலைய விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழப்பு..!
மதுரை: காவல் நிலைய விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழப்பு விவகாரம் அண்ணாநகர் காவல் ஆய்வாளர் பிளவர்ஷீலா ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றம் மதுரை யாகப்பா நகர் பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார் என்ற இளைஞரை நேற்று அதிகாலை அண்ணாநகர் காவல் ஆய்வாளர் பிளவர்ஷீலா மற்றும் தனிப்படை காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். இந்நிலையில் தினேஷ்குமார் வண்டியூர் வைகையாற்று கால்வாயில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட நிலையில் அண்ணா நகர் காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் தொடர்ந்து…
பாளையங்கோட்டை வடக்கு ஹைகிரவுண்ட் சாலை,” தமிழ் அறிஞர்” தொ. பரமசிவன் சாலை என்று அழைக்கப்படும்! மாநகராட்சி கூட்டத்தில், மேயர் ராம கிருஷ்ணன் அறிவிப்பு!
திருநெல்வேலி,அக்.10:-திருநெல்வேலி மாநகராட்சி, மைய அலுவலக ராஜாஜி மண்டபத்தில், “மாமன்ற கூட்டம்” இன்று (அக்டோபர். 10)காலையில், மேயர் கோ.ராமகிருஷ்ணன் தலைமையில், ஆணையாளர் டாக்டர்.மோனிகா ராணா, துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் முன்னிலையில், நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மேயர் பேசுகையில்:- “திருநெல்வேலி மாநகராட்சி, பாளையங்கோட்டை மண்டலம், தமிழறிஞர் தொ.பரமசிவன், பாளையங் கோட்டையில் படித்த பள்ளி மற்றும் கல்லூரி ஆகியவை அமைந்துள்ள, வடக்கு ஹைகிரவுண்ட் சாலை சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு உள்ளது. இதில், பாளையங்கோட்டை பேருந்து நிலையம், கட்டபொம்மன்…
திருநெல்வேலி மாவட்டத்தில், விடியல் பயணம் திட்டத்தின் மூலம், நகரப் பேருந்துகளில் 18,76,98,703 மகளிர் பயணம் செய்து, பயன் பெற்றுள்ளனர்! மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் இரா.சுகுமார் தகவல்!
திருநெல்வேலி,அக்.10:- நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. சுகுமார், இன்று (அக்டோபர்.10) வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், தெரிவித்திருப்பதாவது:-“தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றவுடன், முதலமைச்சர் தன்னுடைய முதல் கையெழுத்தாக, “விடியல் பயணம் திட்டம்”என்னும் புதிய திட்டத்தை, துவக்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம், அரசு நகரப் பேருந்துகளில், அனைத்து மகளிரும், இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம்! என்றும், ஒரு நாளுக்கு எத்தனை முறை வேண்டுமானாலும், பயணிக்கலாம்! என்றும், அறிவித்தார். வேலைக்கு செல்லும் மகளிருக்கு, இந்த புதிய…
தேரூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கு உச்சநீதிமன்ற தடையாணை — மாவட்ட நிர்வாகம் ஏன் அமல்படுத்தவில்லை?
அக் 09; கன்னியாகுமரி – கன்னியாகுமரி மாவட்டம் தேரூர் பேரூராட்சி தலைவர் பதவியிலிருந்து அமுதாராணி அவர்கள் நீக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கில், கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஆனால், அந்தத் தடையாணை பிறப்பிக்கப்பட்டு பல நாட்கள் கடந்தும், மாவட்ட நிர்வாகம் (ஆட்சியர்) அவரை தலைவராக செயல்பட அனுமதிக்காமல் காலம் தாழ்த்தி கொண்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அமுதாராணி அவர்கள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை (அதிமுக) சார்ந்தவர் என்பதாலேயே மாவட்ட ஆட்சியர்…
கோவையில் இருந்து உடுமலை வழியாக கூடுதல் ரயில்களை இயக்க கோரிக்கை.
அக்டோபர் 10 : உடுமலை கோவையில் இருந்து உடுமலை வழியாக கூடுதல் ரயில்களை தெற்கு ரயில்வே இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் நலச் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக சங்கம் சார்பில் தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கோவை அல்லது போத்தனூரில் இருந்து திருச்செந்தூர் வரை இரவு நேரம் முன்பதிவு ரயில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் அறிமுகப்படுத்தப்படலாம் அதே ரயில் பகல் நேர முன்பதிவு இல்லாத ரயிலாக…
உடுமலை அருகே விவசாய மின் இணைப்பு வழங்க கோரி விவசாயி குடும்பத்துடன் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி பரபரப்பு.
அக்டோபர் 10 : உடுமலை திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மூங்கில் தொழவு ஊராட்சி சிக்கனுத்து கிராமத்தில் வசிக்கும் கோவிந்தராஜ் என்ற விவசாயி தனக்கு சொந்தமான விளை நிலத்தில் விவசாய மின் இணைப்பு கேட்டு பெதப்பம்பட்டி உப கோட்டம் ராமச்சந்திராபுரம் மின்வாரிய பிரிவு அலுவலகத்திற்கு விண்ணப்பம் செய்திருந்தார் .இந்த நிலையில் கடந்தாண்டு மின் இணைப்பு வழங்க மின்வாரியம் ஒதுக்கீடு வழங்கியது .ஆனால் அருகில் உள்ள வெங்கடாசலம் முத்துசாமி செல்லமுத்து ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்ததால் மின்வாரிய அதிகாரிகள் பலமுறை…
உடுமலையில் 5ம் ஆண்டு மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி நாளை காலை துவங்குகிறது.
அக்டோபர் 10 : உடுமலை உடுமலையில் திருப்பூர் மாவட்ட அளவிலான சைலாத் சிலம்ப சங்கம் நடத்தும் 5வது மாவட்ட அளவிலான சிலம்ப போட்டிகள் நாளை 11ம்தேதி சனிக்கிழமை நடக்கிறது. பகத்சிங் சிலம்பம் களரி மார்ஷியல் ஆர்ட்ஸ் & கல்ச்சுரல் சாரிட்டபிள் டிரஸ்ட் திருப்பூர் மாவட்ட சைலாத் சிலம்பச்சங்கம் மற்றும் லெட்டினட்சுபாஷ் ரேணுகா தேவி நினைவு அறக்கட்டளை இணை நடத்தும் 5வது மாவட்ட அளவிலான சிலம்ப போட்டிகள் பொள்ளாச்சி ரோட்டில் உள்ள லெப்டினன்ட் சுபாஷ் ரேணுகா தேவி நினைவு…
