அரசியல்
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கூடலூர் ஏரியா கமிட்டியின் சார்பாக கூடலூர் பேருந்து நிலையத்தில் பயணிகள் பயன்பாட்டிற்கு போதுமான அளவு இருக்கைகளை அதிகப்படுத்த வேண்டும் என்கின்ற கோரிக்கையை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…
இந்த நிகழ்ச்சிக்கு கூடலூர் ஏரியா தலைவர் தோழர் ரபீக் அவர்கள் தலைமை தாங்கினார். ஏரியா செயலாளர் தோழர் நெஃபல் அவர்கள் அவர்கள் முன்னிலை வகித்தார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நீலகிரி மாவட்ட செயலாளர் தோழர் இராசி இரவிக்குமார் விளக்க உரையாற்றினார். தோழர் ஹசைன் அவர்கள் கோரிக்கையில் விளக்க கோஷங்களை எழுப்பினார். இதில் தோழர்கள் நிஷாத் , ஷாஜி,மோகன் பி.சி.,யோக சசி,விஷ்ணு தாசன், தங்கராஜ்,தாசன்,அமிர்தகுமாரி,ஆகியோர் கலந்து கொண்டனர்.
நீலகிரி பாஜக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கோத்தகிரியில் நடைபெற்றது..
கோத்தகிரி, அக்டோபர் 24:பாரதிய ஜனதா கட்சியின் நீலகிரி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று கோத்தகிரி HRM ஹாலில் சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டம், மாவட்டத் தலைவர் டாக்டர் ஏ. தருமன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் மரியாதைக்குரிய A. பி. முருகானந்தம் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு உரையாற்றி சிறப்பித்தார். செயற்குழு உறுப்பினர் இட்டகல் போஜராஜன் முனனிலையில் நடைபெற்ற கூட்டத்தின் போது, மாவட்ட அளவிலான அமைப்பு முன்னேற்றம், வரவிருக்கும் தேர்தல் நடவடிக்கைகள், உறுப்பினர் சேர்க்கை, சமூக…
திருநெல்வேலியில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற, விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்! நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன!
திருநெல்வேலி,அக்.24:- நெல்லை கொக்கிரகுளம் பகுதியில் உள்ள, மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், மாதத்தின் 4-வது வெள்ளிக்கிழமையான இன்று (அக்டோபர்.24) காலையில், மாதாந்திர “விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” நடைபெற்றது. இநத கூட்டத்திற்கு தலைமை வகித்த, “மாவட்ட ஆட்சித்தலைவர்” டாக்டர் இரா. சுகுமார், கூறியதாவது:- “திருநெல்வேலி மாவட்டத்தில், சென்ற மாதம் (செப்டம்பர்) முடிய மொத்தம் 14.80 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இது இதே காலத்தில், இம்மாவட்டத்தில் வழக்கமாக பெய்யும் மழையளவான 30.20 மில்லி மீட்டர் மழையளவை…
மறைந்த சுகாதார ஆய்வாளருக்கு துணை மேயர் அஞ்சலி…
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் சுகாதார ஆய்வாளராக பணி புரிந்த கிருஷ்ணராஜ் பணியின் போதே உயிரிழந்த நிலையில், பஃண்ருட்டியில் அவரது உடலுக்கு கடலூர் மாநகராட்சி துணை மேயர் பா. தாமரைச்செல்வன் இன்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். மேலும் கடலூர் ஒன்றிய பொருளாளர் சம்பத்,சத்யராஜ், காலிதாஸ் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர். கடலூர் மாவட்ட செய்தியாளர்: R. விக்னேஷ்.
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் மழைபொழிவு குறித்து ஆய்வு மேற்கொள்ள, வருகை தந்த மாவட்ட பொறுப்பு அமைச்சர் மாண்புமிகு மு.பெ.சாமிநாதன் அவர்கள்….
உதகைக்கு வருகை தந்த மாவட்ட பொறுப்பு அமைச்சர் மாண்புமிகு மு.பெ.சாமிநாதன் அவர்களை, உதகை தமிழகம் அரசு விருந்தினர் மாளிகையில், நீலகிரி மாவட்ட கழக பொறுப்பாளர் கே.எம்.ராஜூ அவர்கள், கழக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் பா.மு.முபாரக் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் வரவேற்றபோது. உடன் மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் தம்பி இஸ்மாயில், உதகை நகர செயலாளர்கள் ஜார்ஜ், ரமேஷ், கீழ் கோத்தகிரி ஒன்றிய செயலாளர் பிமன்,…
ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு சிறப்பு செய்தல்..
தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்கவும், மேற்கு மண்ட மண்டல பொறுப்பாளர், திரு, செந்தில் பாலாஜி அவர்களின் அறிவுறுத்தல்படியும், கோவை வடக்கு மாவட்ட செயலாளர், திரு ரவி அவர்களின் வழிகாட்டுதலின்படியும, இடையபாளையம் பகுதி செயலாளர் திரு மதியழகன்முன்னிலையில், 35 வது, வட்ட செயலாளர் திரு,குமரேசன், மற்றும் வார்டு செயலாளர் திரு, சம்பத்,தலைமையில்,ஓரிணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையில் சிறப்பாக பணியாற்றிய 35வது, வார்டு,பாகம், முகவர்கள், பொறுப்பாளர்கள் BLA-2, BDA, மற்றும்,மகளிர் அணி, இளைஞர் அணி ஆகியோர்களுக்கு பாராட்டு விழா, பரிசளிப்பு, மற்றும்…
தவெகவை தடை செய்ய முடியாது: நீதிமன்றம்
விஜயின் தவெக அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல என்பதால் அதன் அங்கீகாரத்தை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் பதில். கரூர் துயர சம்பவத்தைத் தொடர்ந்து தவெகவின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என, மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார் என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார் மதுரை மாவட்ட செய்தியாளர் – சின்னத்தம்பி
உடுமலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ ஆர்பாட்டம்..
திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே வழங்கிட வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோரிக்கை அட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் 16/10/2025 அன்று நடைபெற்றது. தமிழ் வர்ணன் தலைமையில், ஆசிரியர் அமைப்பை சேர்ந்த தங்கவேல்,குமார், ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் வேலுமணி, பாலசுப்பிரமணியன் ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு உறுப்பினர் அம்சராஜ், தங்கப்பாண்டி உள்ளிட்டோர் உரையாற்றினர். இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது..
பாளையங் கோட்டையில் நடைபெற்ற, “மகிழ்வித்து மகிழ்வோம்!”-தீபாவளி சிறப்பு விழா! தமிழ்ச்சான்றோர்கள் பங்கேற்று, ஆதரவற்றோருக்கு இனிப்புகள், புத்தாடைகள் வழங்கி, மகிழ்வித்தனர்!
திருநெல்வேலி,அக்.16:- திருநெல்வேலி, சிவப்பிரகாசர் நற்பணி மன்றம் மற்றும் வேணுவனம் ரோட்டரி சங்கம் ஆகியன இணைந்து, பாளையங்கோட்டை மகாராஜா நகர், “புனித அன்னாள்” மனவளர்ச்சிக் குன்றியோர் இல்லம் மற்றும் ஆதரவற்ற முதியோர் இல்லம் ஆகிய இடங்களில், “மகிழ்வித்து மகிழ்வோம்!”-என்னும், தீபாவளி சிறப்பு விழாவினை, நடத்தின. அதன் ஒருபகுதியாக, இந்த இல்லங்களில் உள்ளவர்களுக்கு, விலையில்லா புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் ஆகியவற்றை வழங்கி, தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்து, மகிழ்ச்சி அடைந்தனர். நிகழ்விற்கு, “மூத்த வழக்கறிஞர்” கே.ஜெயபாலன் தலைமை வகித்தார். “கலை பதிப்பகம்”…
திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் ஒன்றியம், “விஜயாபதி” கிராமத்தில், 14 கோடியே 77 லட்சம் ரூபாயில் சர்வதேச தரத்திலான விளையாட்டு அரங்கம் மற்றும் பயிற்சி மையம்: “காணொளி” காட்சி வாயிலாக, அடிக்கல் நாட்டிய “துணை முதலமைச்சர்”…
திருநெல்வேலி,அக். 16:- திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள, கடலோரக் கிராமங்களில் வாழும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் ஆகியோரிடம் உள்ள, விளையாட்டுத் திறமைகளைக் கண்டறிந்து, அவற்றை மேம்படுத்திடும் வகையில், 14 கோடியே 77 லட்சம் ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட உள்ள, சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானம் மற்றும் பயிற்சி மையம் ஆகியவற்றிற்கு, “தமிழக துணை முதலமைச்சர்” உதயநிதி ஸ்டாலின், சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடியே, காணொளி காட்சி வாயிலாக, இன்று ( அக்டோபர்.16) காலையில், அடிக்கல் நாட்டி, கட்டுமான பணிகளை,…
