இதழ்கள்
பழனி PSKL குழுமம் உரிமையாளர் செல்வி.ஹர்ஷினி பேட்மிண்டன் போட்டியில் வெற்றி பெற்று கேரளா மாநில அணிக்கு தேர்வு.
திண்டுக்கல் மாவட்டம் பழனி ராமராஜ்யா தெருவை சேர்ந்த செல்வி.ஹர்ஷினி கேரளா மாநிலம் வயநாட்டில் நடைபெற்ற பேட்மிண்டன் போட்டியில் U17 இரட்டையர் மகளிர் பிரிவில் கலந்துகொண்டு சாம்பியன்ஷிப் பட்டம் வென்றுள்ளார். அதைதொடர்ந்து வெற்றிபெற்ற பழனியை சேர்ந்த செல்வி.ஹர்ஷினி கேரளா மாநில பேட்மிண்டன் அணிக்கு தேர்வாகியுள்ளார். தமிழக விடியல் குழுமம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறோம்.
குமரலிங்கம் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் குமரலிங்கம் பேரூராட்சியில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல் படி, வருவாய் கோட்டாட்சியர் குமார் வழிகாட்டுதலின் படி, வட்டாட்சியர் குணசேகரன் தலைமையில், தனி வட்டாட்சியர் கௌரிசங்கர், குமரலிங்கம் பேரூராட்சி செயல் அலுவலர் கந்தசாமி, பேரூராட்சி மன்ற தலைவர் சர்மிளா பானு ஆகியோர் முன்னிலையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் 14/10/25 அன்று நடைபெற்றது.. முகாமில் பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 923 விண்ணப்பங்கள் பெறப்பட்டது.. இதில் 52 விண்ணப்பங்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.. நிகழ்வில்…
பாளையங்கோட்டை சிறையில் அதிர்ச்சி! போக்சோ கைதி தூக்கிட்டு தற்கொலை!
திருநெல்வேலி,அக்14:- தென்காசி மாவட்டம், காசி தர்மம், அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மாரியப்பன் மகன் வினோத் குமார் (வயது. 29). இவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கடந்த மாதம் (செப்டம்பர்) 29-ம் தேதி முதல், பாளையங்கோட்டை மத்திய சிறையில், விசாரணைக் கைதியாக, அடைக்கப்பட்டிருந்தார். சிறையில் அடைககப்பட்ட நாளில் இருந்தே, வினோத்குமார் மன உளைச்சலுடனும், விரக்தியுடனும் கணப்பட்டதாக, கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று ( அக்டோபர். 14) காலையில், சிறையில் உள்ள குளியல் அறையில், தன்னுடைய…
ஆட்சியாளரிடமிருந்து சமூக சேவகர் விருது.
மதுரையில் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற உரிமை மீட்பு சங்கம் சார்பாக நடைபெற்ற தீபாவளி பெருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.K.J.பிரவீன் குமார் அவர்கள் கலந்து கொண்டார் இந்த விழாவில் சே.ஷேக் மஸ்தான் அவர்களுக்கு சமூக ஆர்வலர் விருது வழங்கப்பட்டது மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி
திருநெல்வேலி மாநகராட்சியில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்! துணை மேயர், அதிகாரிகள் பங்கேற்று, மாநகர மக்களிடமிருந்து, மனுககளை பெற்றனர்…
திருநெல்வேலி,அக்.14:- தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 25 மாநகராட்சிகளிலும், செவ்வாய்க்கிழமை தோறும், மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம், நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலகத்தில், இன்று (அக்டோபர். 14) “மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்” நடைபெற்றது. மாநகராட்சி துணை மேயர் கே.ஆர். ராஜூ தலைமை வகித்து, மாநகர மக்களிடமிருந்து, நேரடியாக மனுக்களை பெற்றுக் கொண்டார். உதவி ஆணையர் நடராஜன், உதவி செயற்பொறியாளர்கள் தங்கப்பாண்டியன், அலெக்சாண்டர், சுகாதார ஆய்வாளர்கள் நடராஜன், அழகர்சாமி, பிரசாந்த் ஆகியோர்…
பண்டிகை காலங்களில் கைத்தறி ஆடைகளுக்கு பொதுமக்கள் ஆதரவை எதிர்பார்க்கும் நெசவு தொழிலாளர்கள்.
உடுமலை: அக்டோபர் 14. தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் கைத்தறி ஆடைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து மக்கள் வாங்கினால் பல்வேறு இடையூறுகளை சந்தித்தும் பாரம்பரியமாக கைத்தறி நெசவு செய்யும் தங்கள் குடும்பத்தினருக்கு பயனுள்ளதாக இருக்கும் என நெசவுத் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். உடுமலை, வாளவாடி, பூளவாடி, மலையாண்டிபட்டினம், புக்குளம், குரல் குட்டை, உள்ளிட்ட கிராமங்களில் பாரம்பரியமான கைத்தறி நெசவில் நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.வருவாய் குறைவு, அங்கீகாரம் இல்லாத மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகள் முறையாக கிடைக்காமல் பல்வேறு பாதிப்புகளை…
மடத்துக்குளத்தில் தீயணைப்பு துறையினர் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி.
தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் மடத்துக்குளம் நிலையம் சார்பாக கற்றுக்கொள்வோம் வாருங்கள் என்ற நிகழ்ச்சியின் மூலம் பொது மக்களுக்கு தீ தடுப்பு விழிப்புணர்வு மற்றும் பேரிடர் காலங்களில் எச்சரிக்கை நடவடிக்கை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது இதில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்..
நகராட்சி ஆணையாளர் போர்கால அடிப்படையில் அதிரடி நடவடிக்கை.
குன்னூர் : அக்டோபர் : 14 ரேலியா டேம் நீர்மட்டம் குறைந்த நிலையில் வறண்ட பகுதியில் தேங்கியுள்ள சேறு சகதிகளை அகற்றீ நீர்நிலையை ஆழப்படுத்தும் பணிகள் நடைபெற்றுவருகிறது. குன்னூர் நகராட்சிக்கு சொந்தமான ரேலியா டேம் நீர்மட்டம் குறைத்துள்ளதை நகராட்சி ஆணையாளர் இளம்பரிதி தலைமையில் நகராட்சி பொறியாளர், பணி மேற்பார்வையாளர் மற்றும் ஒப்பந்ததாரருடன் இணைந்து சமீபத்தில் ஆய்வு செய்யப்பட்டது. கடந்த மாதங்களில் மழை இல்லாத காரணத்தால், தற்போதைய நீர் இருப்பு 43 அடியிலிருந்து 20 அடியாக குறைந்துள்ளது. தற்போது,…
கடைசி புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு: வெகு விமர்சியாக பஜனை நிகழ்ச்சி..
உடுமலை தேசிய நெடுஞ்சாலை அருகில் அமைந்துள்ள அந்தியூர் பகுதியில் 24 மனை தெலுங்கு செட்டியார் சமூகம் கோத்திரம் அந்தியூர் பூர்வீக மம்முடியார்களின் குலதெய்வம் ஸ்ரீ பெருந்தேவியர் சமயோத ஸ்ரீ வரதராஜா ஸ்ரீ கன்னியம்மன் திருக்கோவில் கடைசி புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு வெகு விமர்சியாக பஜனை நிகழ்ச்சி நடைபெற்றது.
உடுமலையில் தக்காளி விலை தொடர் சரிவு- குளிர்பதன கிடங்கு ஜாம் தொழிற்சாலை அமைக்க கோரிக்கை..
உடுமலை, அக்டோபர் 12- திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் காளிசாகுபடி ஆண்டுதோறும் விவசாயிகள் செய்து வருகின்றனர். தக்காளி சாகுபடிக்கு தக்காளி நாற்று , உரம் கூலி மற்றும் களை எடுத்தல் உட்பட ஏக்கருக்கு 50 ஆயிரத்துக்கு மேல் செலவு ஆகும் நிலையில் உடுமலை தினசரி சந்தைக்கு தக்காளி பழங்களை கொண்டு விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்கள் இருந்து தக்காளி பழங்கள் அதிக…
