இதழ்கள்
மத்திய பா.ஜ.க அரசின் அழுத்தத்தில் செயல்படுகிறது என்று கூறப்படும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள SIR தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையை கண்டித்து, நீலகிரி மாவட்ட திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் உதகையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…
உதகை: உதகை ஏ.டி.சி ஜீப் நிறுத்தம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை நீலகிரி மாவட்ட திமுக பொறுப்பாளர் கே. எம். ராஜூ அவர்கள் தலைமையில் நடத்தினார். இந்நிகழ்ச்சியில் திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் பா.மு. முபாரக், கூடலூர் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் பரமேஸ்குமார், தோழமை கட்சிகள் நிர்வாகிகள், மாவட்ட மற்றும் ஒன்றிய அளவிலான பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாளர்கள் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பேசிய தலைவர்கள் கூறியதாவது: “மத்திய பா.ஜ.க அரசின் திட்டமிட்ட அரசியல் முறைகேட்டின் கீழ்,…
நீலகிரி மாவட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
ஒன்றிய பாஜக அரசின் கைப்பாவையாக செயல்படும் இந்தியத் தேர்தல் ஆணையத்தை கண்டித்து! வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர சீராய்வு S-I-R-ஐ எதிர்த்து நீலகிரி மாவட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெற்றது. #தமிழ்நாடு_தலைகுனியாது
கோவை மாவட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
கோவை நவம்பர் : 11 கோவை சிவானந்தா காலனி சந்திப்பில் எஸ் ஐ ஆர்- ஐ எதிர்த்து திமுக தலைமையில், வி.செந்தில் பாலாஜி முன்னிலையில் கழகத்தின் மூன்று மாவட்ட செயலாளராளர்கள், கூட்டணி கட்சித் தலைவர்கள். மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் ஒருங்கிணைந்த மாவட்டம் ஒருங்கிணைந்த மாவட்ட திமுக தோழர்களும் ததிரளாகளகலந்து கொண்டனர். கோவை மாவட்ட செய்தியாளர் :சம்பத் குமார்
திருமூர்த்தி அணையில் படகு சவாரி.. மாவட்ட சுற்றுலாஅலுவலர் தலைமையில்ஆய்வு கூட்டம்….
உடுமலை நவ.12- திருமூர்த்தி அணையில் படகு சவாரி மீண்டும் செயல்படுத்துதல் தொடர்பாக மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்த் குமார் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக திருமூர்த்தி மலை உள்ளது. திருமூர்த்தி மலை சுற்றுலா பகுதியில் அமணலிங்கேஸ்வரர் கோவில், பஞ்சலிங்க அருவி மற்றும் திருமூர்த்தி அணை போன்ற பல்வேறு சுற்றுலாத்தலங்கள் உள்ளது. பல்வேறு சுற்றுலாப் பயணிகள் தினந்தோறும் வந்து செல்கின்றனர். திருமூர்த்தி மலை அணை பகுதியில் செயல்பட்டு வந்த படகு இல்லம்…
உடுமலையில் லெப்டினன்ட் சுபாஷ் ரேணுகா தேவி அறக்கட்டளையில் பெண்களுக்கான தன்னம்பிக்கை வாரம் கொண்டாட்டம்..
உடுமலைநவம்பர் 11. உடுமலை பொள்ளாச்சி ரோட்டில் உள்ள லெப்டினன்ட் சுபாஷ்,ரேணுகாதேவி அறக்கட்டளை வளாகத்தில் நிறுவனர் கே ஆர் எஸ் செல்வராஜ் வழிகாட்டுதலின்படி காவலர்களுக்கான பயிற்சி வகுப்பு அரசு தேர்வுகள் எழுதுவதற்கான பயிற்சி வகுப்பு மற்றும் பெண்களுக்கான சுய வேலைவாய்ப்பு பயிற்சிகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகிறது. தற்போது அவரது நினைவில் வாழும் துணைவியார் ரேணுகாதேவி பிறந்தநாளை ஒட்டி பெண்களுக்கான தன்னம்பிக்கை வாரம் அறக்கட்டளை சார்பில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை நிறுவனர் கே.ஆர்.எஸ் செல்வராஜ் தலைமை வகித்தார். அறங்காவலர்கள் பிரபாகரன்,…
உடுமலையில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த நடவடிக்கைக்கு எதிராக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்…
உடுமலைநவம்பர் 11. திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை நகராட்சி அலுவலகம் முன்பு திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த நடவடிக்கைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டமானது பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக திருப்பூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளருமான ஈஸ்வரசாமி தலைமையில் நடைபெற்றது. சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த நடவடிக்கைகளுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. கண்டன ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் திரளாக பங்கேற்றனர். பேட்டி -1பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர்…
குமரி மாவட்டத்தில் ஊழல் ஒழிப்பு, சமூகநீதி கோரி ஆர்ப்பாட்டம்!அல் காலித் தலைமையில் மீனாட்சிபுரத்தில் பெரும் தர்ணா!
நாகர்கோவில், நவம்பர் 10: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மீனாட்சிபுரம் திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகில் இன்று மாலை, ஊழல் ஒழிப்பு, சமூகநீதி, மற்றும் விவசாய வளங்கள் பாதுகாப்பு கோரி அமைதியான தர்ணா ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் நாகர்கோவில் மாநகர மாவட்ட செயலாளர் அல் காலித் தலைமையில் நடைபெற்றது. இதில் பூர்வகுடி கார்த்திகாவிற்கு ரூ.5 கோடி நிதி வழங்குதல், விவசாயிகளின் போர்வையில் நடைபெறும், ஆயிரம் கோடி மதிப்பிலான வண்டல் மண் முறைகேடுகளை தடுக்குதல், பட்டியல் இனத்தை சேர்ந்த…
நாகர்கோவிலில் பரபரப்பு கடல் உணவு தொழிற்சாலையா அல்லது தொழிற்கூடமா, அடர்ந்த பகுதியில் வாழும் பொதுமக்கள் அச்சம்!!!
நாகர்கோவிலில்; நவ.10 குமரி மாவட்டம் நாகர்கோவில் இடலாக்குடி பகுதியில், பொதுமக்கள் அடர்த்தியாக வசிக்கும் இடத்தில், சமீப காலமாக ஒரு கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தக் கட்டிடம், குமரி மாவட்டத்தை தலைமையகமாகக் கொண்டு, திருநெல்வேலி மாவட்டத்தின் ராதாபுரம் பகுதியில் இயங்கி வந்த ஒரு பிரபல மீன் மற்றும் மீனிலிருந்து தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தின் புதிய தொழிற்கூடமாக அமைந்துவருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் திறந்த வெளிப் பகுதியில் இயங்கி வந்த அந்த…
நாகர்கோவில் 39வது வார்டில் “SIR” படிவம் பதிவு செய்யும் பணி– மாமன்ற உறுப்பினர் ரிஸ்வானா ஹிதாயத் முன்னெடுப்பு.
நாகர்கோவில் மாநகராட்சி 39வது வார்டைச் சார்ந்த தி.மு.க. மாமன்ற உறுப்பினர் திருமதி ரிஸ்வானா ஹிதாயத், பொதுமக்களின் வசதிக்காக “SIR” படிவத்தை பதிவு செய்ய உதவுவதற்காக சிறப்பு முகாமை தனது மாமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்துள்ளார். பதிவுகளில் தவறுகள் ஏற்படாமல் இருக்கவும், பொதுமக்களின் சந்தேகங்கள் மற்றும் குழப்பங்களை தீர்க்கவும், 39வது வார்டைச் சார்ந்த இளைஞர்கள் இணைந்து பணியாற்றி வருகின்றனர். இந்த முயற்சிக்கு பொதுமக்கள் பெருமளவில் ஆதரவு தெரிவித்ததுடன், உறுப்பினர் ரிஸ்வானா ஹிதாயத்துக்கு வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளனர். தமிழக…
இந்திய தேர்தல் ஆணையத்தின் சிறப்பு திருத்தம் படிவங்களை வழங்கி பூர்த்தி செய்யும் பணியினை..: அ.தி.மு.க மாவட்ட கழகச் செயலாளர் கப்படச்சி.D.வினோத் மேற்பார்வையிட்டார்..
அனைத்திந்திய அண்ணா திராவிடம் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட கழகச் செயலாளர் கப்படச்சி D வினோத் அவர்கள் தலைமையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் சிறப்பு திருத்தம் படிவங்களை உதகை நகரத்திற்கு உட்பட்ட புது மந்து பகுதியில் BLO அலுவலர் அவர்களுடன் அதிமுக பூத் பொறுப்பாளர்கள் இணைந்து பொது மக்களுக்கு படிவத்தினை வழங்கி பூர்த்தி செய்யும் பணியினை மேற்பார்வையிட்டார். உதகை நகர கழகத்தின் செயலாளர் க. சண்முகம், நகர மன்ற உறுப்பினர் தனலட்சுமி, எம்ஜிஆர் மன்ற தலைவர் ஜெயராமன், நகர…
