இதழ்கள்
மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தப்பட்ட சின்ன உடைப்பு பகுதி மக்கள், இன்னும் இரண்டு வாரங்களுக்குள் தங்கள் இடங்களை காலி செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
சுமார் 350 குடும்பங்கள் வசித்து வரும் இந்தப் பகுதியில், நிலத்திற்கான இழப்பீடு ஏற்கனவே வழங்கப்பட்டு விட்ட போதிலும், முறையான மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு வசதிகள் செய்து தரப்படவில்லை எனக் கூறி மக்கள் வெளியேற மறுத்து வந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு, “அரசு ஏற்கனவே பெருங்குடியில் 2 செண்ட் நிலமும், ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் வீடும் கட்டித் தர முன்வந்துள்ள நிலையில், மக்கள் தொடர்ந்து முட்டுக்கட்டை போடுவது முறையல்ல”…
புதிய நியாய விலைக் கடை திறப்பு விழா.
ஊட்டி பிப்ரவரி நீலகிரி மாவட்டம், உதகை சட்டமன்ற உறுப்பினர் ஆர். கணேஷ் எம் .எல். ஏ அவர்களின் தொகுதி மேம்பாடு நிதியின் கீழ் (2024 -2025) 27 வது வார்டு தீட்டுக்கல் பகுதியில் நியாய விலை கடை கட்டப்பட்டது. இப்பகுதி பொதுமக்கள் கடந்த ஐம்பது ஆண்டு காலமாக மூன்று நான்கு கிலோ மீட்டர் தூரம் சென்று ரேஷன் பொருட்களை வாங்கி வந்தார்கள். இப்பிரச்சினைக்கு தீர்வு காண 27ஆவது வார்டு நகர மன்ற உறுப்பினர் திருமதி. ஆர். ஜெயலட்சுமி…
நாகர்கோவில் : காயமடைந்த அரிய வகை ‘கூகை’ ஆந்தை மீட்பு, இரவிலும் விரைந்தோடிய வனத்துறையினர்!
கன்னியாகுமரி, பிப் 25 : கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார், சின்ன அரிப்புத் தெரு பகுதியில் காயமடைந்து பறக்க முடியாமல் தவித்த அரிய வகை கூகை (Barn Owl) ஆந்தையை பொதுமக்கள் உதவியுடன் வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். இப்பகுதியில் இரவு 11 மணி அளவில் அடிபட்டு சோர்வாகக் கிடந்த இந்தப் பறவையைப் பார்த்த பொதுமக்கள், உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். பூதப்பாண்டி வன சரக அலுவலர் அன்பழகன் தலைமையில் வேட்டை தடுப்பு காவலர் ராஜன் மற்றும்…
தேர்தல் 2026 இலட்சினை (Icon) அறிமுக விழா
மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் சட்டமன்ற பொது தேர்தலை 2026ஐ முன்னிட்டு தேர்தல் Icon இருவாச்சி பறவை (hornbil) வடிவமைப்பில் அமைக்கப்பட்டதை மாவட்ட ஆட்சித்தலைவர் / மாவட்ட தேர்தல் அலுவலர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் அறிமுகப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். கோவைமாவட்ட செய்தியாளர் : சம்பத்குமார்
பழனி பெருநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
பழனி நகராட்சி ஆண்கள் பள்ளி வளாகத்தில் செயல்படும் அறிவுசார் ஆற்றல் மையத்தில் மகளிருக்கான கழிப்பறையில் கதவுகள் உடைந்து பயன்படுத்த முடியாத நிலையிலும் உள்ளது. இதுபற்றி சம்பந்தப்பட்ட நிர்வாகத்துக்கு தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால் அங்கு படிக்க வரும் கிராமப்புற மாணவிகள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? பழனி நிருபர் நா.ராஜாமணி.
ஜப்பானை சேர்ந்த முருக பக்தர்களின் வேல் தீர்த்த யாத்திரை, பழனியில் புலிப்பாணி சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ஸ்ரீமத் போகர் பழனி ஆதீனம் சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள் தலைமையில் ஜப்பானை சேர்ந்த முருக பக்தர்களின் வேல் தீர்த்த யாத்திரை நடைபெற்றது. முன்னதாக இந்நிகழ்வில் ஜப்பானை சேர்ந்த 50 முருக பக்தர்கள் புலிப்பாணி ஆசிரமத்தில் இருந்து பால்குடம் ஏந்தியவாறு யாத்திரியை தொடங்கி, திரு ஆவினன்குடி முருகனை தரிசித்து பாலபிஷேகம் செய்தனர். தொடர்ந்து மாலை வேலையில் நடைபெற்ற தேர் திருவிழாவில் தேர் இழுத்து மாரியம்மனுக்கு நடைபெறும் மாசி திருவிழாவில் தேர் இழுத்து தீச்சட்டி…
“ தமிழ்நாடு தலைகுனியாது” பரப்புரை நிகழ்வு…
நேற்று(24.02.26)கோவை சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் திரு,துரை.செந்தமிழ் செல்வன் தலைமையில்,நடைபெற்ற “தமிழ்நாடு தலைகுனியாது” பரப்புரை நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர், Dr.கனிமொழி என்.வி.என்.சோமு அவர்கள், பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஐயா மகாத்மா காந்தி, நஞ்சுண்டாபுரம் பகுதியில் பேரறிஞர் அண்ணா, சிங்காநல்லூர் பகுதியில் அமைந்துள்ள ஐயா தியாகி.என்.ஜி. ராமசாமி, ஒண்டிப்புதூர் பகுதியில் கர்மவீரர் காமராஜர் ஆகியோரின் திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் பகுதி கழக செயலாளர்கள் திரு,எஸ். எம். சாமி, திரு,ம….
வெற்றி அறக்கட்டளை நிலவன் டிவி இணைந்து வழங்கும் நலத்திட்ட உதவிகள் மற்றும் விருது வழங்கும் விழா நடைபெற்றது…
மதுரை பெரியார் பஸ் நிலையம் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலை அருகில் யூசி பள்ளியில் நடைபெற்ற வெற்றி அறக்கட்டளை நிலவன் டிவி இணைந்து வழங்கிய நலத்திட்ட உதவிகள் மற்றும் விருது வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஸ்டார் பிரண்ட்ஸ்அறக்கட்டளை நிறுவனர், டி.குருசாமி தலைமையில் நடைபெற்றது. இடை காட்டூர் பள்ளி தலைமை ஆசிரியர் பிரபாகர் முன்னிலை வகித்தார் மற்றும் கட்சி பிரதிநிதிகள், காவல்துறை ஆய்வாளர்கள் ,வழக்கறிஞர்கள், தொழிலதிபர்கள், கலந்து கொண்டு சமூக ஆர்வலர்களுக்கான விருது மக்கள் நலப்பணி விருது மற்றும்…
முதல்வர் வருகையும் முக்காடு போடும் காலி மனைகளும்: குமரியில் ‘மோடி மாடலை’ கையில் எடுத்த திராவிட மாடல்!
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வருகை தரவுள்ள நிலையில், அவரை வரவேற்க நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகம் செய்துள்ள ஒரு ‘பிரம்மாண்ட’ ஏற்பாடே தற்போது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. முதல்வரின் பயண வழித்தடங்களில் உள்ள தனியார் காலி மனைகளைத் தேடிப்பிடித்து, ஆளுயரத் திரைகளால் மூடும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குஜராத் மாநிலத்துக்கு வந்தபோதும், 2023…
கல்விக்குக் கரம்கொடுக்கும் திராவிட மாடல் அரசு.
கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 80வது வார்டில் உள்ள செல்வபுரம் மாநகராட்சிப் பள்ளியில் ரூ.96 இலட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறைகள் திறப்பு விழா! மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலில், “இல்லம் தேடி கல்வி” முதல் “முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்” வரை கல்வித்துறையில் தமிழகம் ஒரு பொற்கால ஆட்சியைச் சந்தித்து வருகிறது. அந்த வகையில், கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட 80-வது வார்டு செல்வபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் கல்வி மேம்பாட்டிற்காக ஒரு முக்கிய…
