இதழ்கள்
இந்திய பாரம்பரிய வைத்தியர்கள் சங்கம் சார்பாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
கோவை: பாரம்பரிய சித்த மருத்துவத்தை தமிழக அரசு அங்கீகரிக்க வேண்டும் என வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்டம் கோவை மாவட்டம் திருப்பூர் மாவட்டம் என பல மாவட்டங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாரம்பரிய வைத்தியர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பாரம்பரிய மருத்துவர்களை அங்கீகரிப்பது, வைத்தியர்களின் வயிற்றில் அடிக்காதே, முதல்வர் அண்ணாச்சி கடந்த தேர்தல் அறிக்கை என்னாச்சு, பாரம்பரிய வைத்தியர்களை ஏமாற்றாதே! பாரம்பரிய வைத்தியர்களை தாசில்தார்களைக் கொண்டு கணக்கெடுத்து பதிவு செய்து…
சோதனைகளை சாதனைகளாக மாற்றிய மதுரை மாநகராட்சியின் முதல் பெண் ஆணையாளர் “சித்ரா விஜயன்” (IAS)…
மதுரை மாநகராட்சி கடந்த சில ஆண்டுகளாக அரசியல் தலையீடுகள், நிர்வாக குழப்பங்கள், சொத்து வரி முறைகேடு குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களால் கடுமையான நெருக்கடியை சந்தித்து வந்தது. குறிப்பாக 2021 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் மட்டும் ஐந்து மாநகராட்சி ஆணையாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்ட சம்பவம், அந்த நிர்வாகச் சிக்கல்களின் தீவிரத்தைக் காட்டும் முக்கிய நிகழ்வாக பார்க்கப்பட்டது. இதன் காரணமாக மதுரை மாநகராட்சிக்கு ஆணையாளராக பொறுப்பேற்கவே சில ஐஏஎஸ் அதிகாரிகள் தயக்கம் காட்டியதாகவும் கூறப்பட்டது. இத்தகைய சவாலான…
கோவை மாநகராட்சி 80-வது வார்டில் 4 ஆண்டுகால சாதனை கூட்டம்.
கோவை மாநகராட்சி 80-வது வார்டில் 4 ஆண்டுகால சாதனை பயணம்! – பகுதி சபா கூட்டத்தில் பட்டியலிட்ட பொது சுகாதார குழு தலைவர்! கோவை மாநகராட்சி மத்திய மண்டலம், 80-வது வார்டுக்கு உட்பட்ட செட்டி வீதி மற்றும் கொங்கு மஹாலில் பகுதி சபா கூட்டம் 07-02-2026 மாலை வெகு சிறப்பாக நடைபெற்றது. 80-வது வார்டு மாமன்ற உறுப்பினரும், பொது சுகாதார குழு தலைவருமான திரு. பெ.மாரிசெல்வன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கடந்த 4 ஆண்டுகளில் வார்டில்…
மறவன்குடியிருப்பு தேவாலய பங்கு பேரவையில் பல கோடி முறைகேடு குற்றச்சாட்டு – மக்கள் போராட்டம், போலீஸ் குவிப்பு.
மறவன்குடியிருப்பு பகுதியில் உள்ள புனித தஸ்நேவிஸ் மாதா தேவாலய பங்கு பேரவையில் பல கோடி ரூபாய் நிதி மற்றும் சொத்து முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து, ஊர் மக்கள் மற்றும் பக்தர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பக்தர்கள் வழங்கிய நன்கொடைத் தொகைகள் மற்றும் சொத்துக்கள் பங்கு பேரவையின் அதிகாரப்பூர்வ கணக்கில் சேர்க்கப்படாமல், தனியாக தொடங்கப்பட்ட டிரஸ்ட் மூலம் வரவு வைக்கப்பட்டு முறைகேடு செய்யப்பட்டதாக நிர்வாகிகள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க…
தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு திட்டம் விரிவாக்கம் — நாகர்கோவிலில் அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கல்.
நாகர்கோவில், பிப். 9: முதலமைச்சர் தொடங்கிய திட்டம் பேரூராட்சிகளுக்கும் விரிவு; கன்னியாகுமரியில் 3,200-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பயன்பெற்றனர். தமிழ்நாடு அரசின் தூய்மை பணியாளர்களுக்கான 3 வேளை இலவச உணவு வழங்கும் திட்டம் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ் தெரிவித்தார். ஏழை, எளியோரின் பசியை போக்கும் நோக்கில் செயல்படும் அரசு இதுவென அவர் பெருமிதம் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்டம் போளிவாக்கத்தில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் தொடங்கி வைத்த திட்ட விரிவாக்கத்தைத் தொடர்ந்து,…
செங்கோட்டை நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை நகர் மன்ற தலைவி ராமலட்சுமி துவக்கி வைத்தார்.
தென்காசி பிப்ரவரி 9 தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் விழா செங்கோட்டை மேலூர் திருமண மண்டபத்தில் துவக்கி வைக்கப்பட்டது. தமிழக அரசின் முத்தான திட்டமான நகராட்சி மாநகராட்சி பேரூராட்சி ஊராட்சி மன்றங்களில் பணி புரியும் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் விரிவாக்கம் இன்று திருவள்ளூர் மாவட்டம் போளி வாக்கத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைக்கப்பட்டதை அடுத்து செங்கோட்டை நகராட்சியில் பணிபுரியும் 100…
விடுதலை சிறுத்தைகள் சார்பில் அம்பேத்கர் – காமராஜர் – பெரியார் சிலைகளுக்கு மாவட்டச் செயலாளர் சகோதரி மாலை அணிவித்து மரியாதை…
நாகர்கோவில் மாநகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இன்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநகர மாவட்ட செயலாளர் சவுத்ரி அவர்கள் அண்ணல் அம்பேத்கர், கர்மவீரர் காமராஜர் மற்றும் தந்தை பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வு கன்னியாகுமரி மண்டல செயலாளர் பாஸ்கர் பகலவன் மற்றும் மண்டல துணைச் செயலாளர் திருமாவேந்தன் முன்னிலையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மகளிர் விடுதலை இயக்க மாநில செயலாளர் கலைச்செல்வி, மாவட்ட துணைச் செயலாளர் சேக் முகமது, குளச்சல் சட்டமன்றத்…
நலம் காக்கும் ஸ்டாலின் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவ முகாம்.
நலம் காக்கும் ஸ்டாலின் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவ முகாம் கோவை மாநகராட்சி 46வது வார்டில் “நலம் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது, கோயம்புத்தூர் மாநகராட்சி , பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இணைந்து நடத்தும் “நலம் காக்கும் ஸ்டாலின்” பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவ முகாம், இரத்தினபுரி, 46-வது வார்டில் உள்ள மாநகராட்சி மேல்நிலப்பள்ளியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. பொது சுகாதார குழு தலைவர் பெ.மாரிசெல்வன் மற்றும் மத்திய மண்டலம் தலைவர்…
கோவை மாநகர் மாவட்ட செயற்குழு கூட்டம்.
கோவை மாநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் வடகோவை மாவட்ட கழக அலுவலகத்தில் கோவை மாநகர் மாவட்ட அவை தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கணபதி ப. ராஜ்குமார் அவர்கள் தலைமையில், தமிழ்நாடு தலைகுனியாது – பரப்புரை கூட்டம் தொடர்பாக, கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் துரை. செந்தமிழ் செல்வன் அவர்கள் ஆலோசனைகள் வழங்கினார். இந்நிகழ்வில் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி கழக பொறுப்பாளர்கள், மாவட்ட அணி…
மதம் மாறிய கிறிஸ்தவர்” குறிப்பு :சாதி சான்றிதழ் மாற்றத்திற்கு எதிர்ப்பு – கன்னியாகுமரியில் கண்டன ஆர்ப்பாட்டம்
கன்னியாகுமரி, பிப் 7 : கன்னியாகுமரி மாவட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், கிறிஸ்தவ சம்பவர் சமூகத்தினருக்கு வழங்கப்பட்ட சாதி சான்றிதழ்களில் 2013 ஆம் ஆண்டு முதல் சாதி குறிப்பு பகுதியில் “மதம் மாறிய கிறிஸ்தவர்” என பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் விவகாரத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த வகையான சாதி குறிப்பு மாற்றம், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் இடஒதுக்கீடு உள்ளிட்ட துறைகளில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சம் சமூகத்தினரிடையே நிலவி வருவதாகவும், இதுகுறித்து மாவட்ட…
