Headlines

சுசீந்திரம் ஆஸ்ரமத்தில் சபரிமலை அன்னதான ஆரம்ப விழா முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம் துவக்கி வைத்தார்…

சுசீந்திரம் ஆஸ்ரமத்தில் சபரிமலை அன்னதான ஆரம்ப விழா முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம் துவக்கி வைத்தார்...

சுசீந்திரம்; நவ.22:-

அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் சுசீந்திரம் ஆஸ்ரமத்தில் சபரிமலை விழாக்கால அன்னதான ஆரம்ப விழா கோலாகலமாக நடைபெற்றது.

இவ்விழாவில் முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான திரு. என். தளவாய்சுந்தரம் அன்னதானத்தை துவக்கி வைத்தார்.

ஆண்டுதோறும் நடைபெறும் இந்த அன்னதானம், இவ்வருடம் நவம்பர் 21 முதல் ஜனவரி 15 வரை—தினமும் நடைபெற உள்ளது. ஐயப்ப பக்தர்களுக்கு உணவு மற்றும் தங்கும் வசதி வழங்கி வருவது பாராட்டத்தக்க தொண்டாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

கட்டிட சுற்றுச்சுவர் அமைப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர் சி.வி. சண்முகம் ரூ.15 லட்சம் நிதி வழங்கியதையும் அவர் நன்றியுடன் குறிப்பிட்டார்.

மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

-தமிழக விடியல் குமரி மாவட்ட நிருபர் பாவலர் ரியாஸ்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *