Headlines

உடுமலையில் பூட்டிய கோவிலை திறக்க கோரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மணுகொடுக்க திரண்ட பொதுமக்கள்..

உடுமலையில் பூட்டிய கோவிலை திறக்க கோரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மணுகொடுக்க திரண்ட பொதுமக்கள்..

உடுமலை
நவம்பர் 13.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள பெரியவாளவாடியில் உள்ள பூட்டபட்ட 5 கோவில்களை திறக்ககோரி வருவாய்கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரியவாளவாடி கிராமத்தில் முருகன் கோவில் விநாயகர் கோவில் மாரியம்மன் கோவில் ரேனுகா தேவி கோவில் உச்சிமாகாளியம்மன் கோவில் ஆகியவை ஒரே இடத்தில் அமைந்துள்ளதாகவும் இதனை சின்னராஜ் நாயக்கர் தேவராஜ் மற்றும் லட்சுமி நாராயனன் என்பவர்கள் பரம்பரை பரம்பரையாக திருகோவிலை பராமரித்து வருவதாகவும் இதனிடையே கோவில் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டசிலர் பராமரிப்பிற்கு நன்கொடை பெற்று தங்கள் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் வங்கியில் டெபாசிட் செய்ததாகவும் மேலும் பூஜை நேரத்தை வழக்கத்திற்கு மாறாக தங்கள் விருப்பத்திற்கு தகுந்தார் போல் மாற்றியமைத்ததாகவும் இதனால் அவர்களுக்கும் தங்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டபோது காவல்துறையினர் தலையிட்டு வருவாய் கோட்டாட்சியரிடம் கவனத்திற்கு கொண்டு சென்று கோவில் பூட்டபட்டு சாவி வருவாய் துறையினரிடம் உள்ளதாகவும் எனவே, பூட்டிய கோவிலை திறப்பதோடு பராமரிப்புகாக வசூலிக்கபட்ட பணம் கோவில் கணக்கில் கொண்டுவரப்படவேண்டுமென வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்த்திற்கு வந்த அவர்கள் கூறினர்.

வருவாய் கோட்டாட்சியர் இல்லாததால் பொறுப்பிலுல்ல அலுவலரிடம் அவர்கள் மனு கொடுத்து சென்றனர்

பூட்டபட்ட கோவிலை திறக்க கோரி பொதுமக்கள் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது..

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *