நிதிஷ்குமாருக்கு நடந்ததுதான் தமிழ்நாடில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்-மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
ஓபிஎஸ் என்று சொன்னால் முதலில் ஞாபகம் வரும் சொல் விசுவாசம். அதற்காக ஜெயலலிதாவால் பாராட்டப்பட்டவர். எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவர்.
எம்.ஜி.ஆர். உருவாக்கிய அதிமுக யாருக்கோ அடிமை சேவகம் செய்ய போனதால், தாய்க் கழகம் திரும்பிய உங்களை, திமுகவின் தலைமை தொண்டனாக வரவேற்கிறேன்.
அதிமுகவை அடமானம் வைத்துள்ள இபிஎஸ், பாஜக தனக்கு நல்லது செய்யும் என நினைக்கிறார்; உண்மையில் அதிமுகவின் ரத்தத்தைதான் பாஜக உறிஞ்சப் போகிறது.
எடப்பாடி பழனிசாமிக்கு பதிலாக வேறு ஒருவரை பொதுச்செயலாளராக ஏற்கனவே பாஜக தேர்வு செய்து வைத்துள்ளது.
தேர்தலுக்குப் பின் அவரை மாற்றிவிடுவார்கள். பாஜகவுடன் கூட்டணி வைக்க மறுத்திருந்தால் முன்பே அவரை மாற்றியிருப்பார்கள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி
