“தமிழக தேர்தல் களம் தகித்துக் கொண்டிருக்கும் வேளையில், ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளின் பார்வையும் இப்போது தென் மாவட்டங்களை குறி வைக்க தொடங்கியுள்ளது.
ஒருகாலத்தில் அதிமுகவின் எஃகு கோட்டையாக இருந்த தென் மண்டலம், இப்போது யாருடைய வசம்?
எடப்பாடி பழனிசாமிக்கு செக் வைக்க திமுக போடும் ‘மைக்ரோ பிளான்’ என்ன? சசிகலா – ஓபிஎஸ் எனும் இரட்டை சவால்களை அதிமுக எப்படி எதிர்கொள்ளப் போகிறது? இதுகுறித்த ஒரு விரிவான செய்தித் தொகுப்பை பார்க்கலாம்.”
“2021 சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு தென் மாவட்ட அரசியல் களம் தலைகீழாக மாறியிருக்கிறது.
ஜெயலலிதா காலம் வரை அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டையாக இருந்த தென் மண்டலத்தில், இன்று சாதி ரீதியான அடையாளங்களும், உட்கட்சி மோதல்களும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
குறிப்பாக, அதிமுக ‘ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கான கட்சி’ என்ற பிம்பத்தை உடைக்க எடப்பாடி பழனிசாமி போராடி வரும் வேளையில், அவருக்கு முட்டுக்கட்டை போடப் பலமுனைகளில் வியூகம் வகுக்கப்படுகிறது.”
சசிகலா – ஓபிஎஸ் குறி வைக்கும் பழிவாங்கும் கணக்கில் பல திட்டங்களை வகுத்து வருகின்றனர்.
“பாஜகவின் சமரச முயற்சியால் டிடிவி தினகரன் அதிமுக கூட்டணிக்குள் வந்தாலும், சசிகலாவும் ஓபிஎஸ்ஸும் தனித்து விடப்பட்டுள்ளனர்.
ஆனால், இதுவே அதிமுகவுக்கு வினையாக மாறக்கூடும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
இதில், சசிகலாவின் வியூகம் ‘நான் கோட்டைக்கு போவதை விட, எடப்பாடியை கோட்டைக்கு போக விடாமல் தடுப்பதே இலக்கு’ என களமிறங்கியுள்ள சசிகலா, முக்குலத்தோர் வாக்குகள் அதிகம் உள்ள தொகுதிகளில் சொந்த செலவில் வேட்பாளர்களை நிறுத்தி, அதிமுகவின் வெற்றி வாய்ப்பைப் பறிக்கத் திட்டமிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து திமுகவின் மைக்ரோ ப்ளான் மறுபுறம், ஓபிஎஸ் மற்றும் கருணாஸ் போன்றவர்களை முன்னிறுத்தி, ‘முக்குலத்து தலைவர்களை திமுக கைவிடாது’ என்ற பிம்பத்தை தென் மாவட்டங்களில் விதைக்கத் தொடங்கியிருக்கிறது அறிவாலயம்.
” திமுகவின் மைக்ரோ பிளானில் “வெறும் பேச்சுடன் நின்றுவிடாமல், களத்தில் மைக்ரோ லெவல் வேலைகளை முடுக்கிவிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
கடந்த முறை தினகரனுக்குப் பக்கபலமாக இருந்த SDPI கட்சியைத் தன் பக்கம் இழுத்தது. சமுதாய அமைப்புகளை வரிசையாக அறிவாலயம் வரவழைத்து ஆதரவு திரட்டுவது.
எடப்பாடி மீதான அதிருப்தியில் இருப்பவர்களை ‘ஜஸ்ட் பாஸ்’ மதிப்பெண்ணிலாவது வெற்றி பெற வைப்பது. இவைதான் திமுகவின் தற்போதைய ஃபார்முலா!”
“இத்தனை நெருக்கடிகளுக்கு மத்தியிலும் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கையோடு இருக்கிறார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்து விசுவாசமான வாக்கு வங்கி தங்களை கைவிடாது என்பது அவரது கணிப்பு.
அதுமட்டுமின்றி, திமுக அமைச்சர்களுக்கு எதிராக மத்திய விசாரணை அமைப்புகள் ஏவப்படக் காத்திருக்கும் ‘அம்புகள்’ தேர்தலுக்கு முன் ஆட்டத்தையே மாற்றும் என அதிமுக மலை போல் நம்பிக் கொண்டிருக்கிறது.”
“திமுகவின் மைக்ரோ பிளான் எடுபடுமா? அல்லது அதிமுகவின் கோட்டை மீண்டும் மீட்கப்படுமா? ஓபிஎஸ் – சசிகலா காரணி அதிமுகவின் வெற்றியைப் பாதிக்குமா? என்பது தேர்தல் முடிவுகளில் தெரிந்துவிடும்.
