பொதுவுடமை வீரர் ப.ஜீவானந்தம் 63-வது நினைவு நாள்: நாகர்கோவிலில் மரியாதை.
நாகர்கோவில், ஜன.18 :பொதுவுடமை வீரர் ப.ஜீவானந்தம் அவர்களின் 63-வது நினைவு நாளை முன்னிட்டு, இன்று (18.01.2026) கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வேப்பமூடு பகுதியில் அமைந்துள்ள அவரது மணி மண்டபத்தில், அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா ஆகியோர் முன்னிலையில் மரியாதை நிகழ்வு நடைபெற்றது. மேலும், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், துணை மேயர் மேரி பிரின்சி…
