காங்கிரஸ் கட்சிக்கு பூத் கமிட்டி போடக்கூட ஆளில்லை: மதுரை திமுக எம்எல்ஏ தளபதி விமர்சனம்.
மதுரையில் நடந்த நிகழ்ச்சியில், திமுக வடக்கு எம்எல்ஏ கோ.தளபதி பேசியதாவது: “காங்கிரஸ் நண்பர்கள் ஒரு சில பேர் இருக்கிறார்கள். மாணிக்கம் தாகூர், ஜோதிமணி இருக்கிறார்கள். அவர்கள் எம்பி ஆகிவிட்டார்கள். இனி வருபவர்கள் எம்எல்ஏ ஆனா என்ன? ஆகவில்லை என்றால் எனச் சொல்லி, அதில் பங்கு வேண்டும்? இதில் பங்கு வேண்டும் என்று சொல்கிறார்கள். இதையெல்லாம் தலைமை புரிந்து, அடுத்து இவர்களுக்கு சீட் கொடுக்கக் கூடாது. நம்ம கொடுக்க விடக்கூடாது. எதற்காக இதை சொல்கிறேன் என்றால், நம்ம உணர்வோடு,…
