யார் இந்த லாரன்ஸ்?
பதவிக்காக அல்ல… கொள்கைக்காக வாழும் காங்கிரஸ் போராளி! அன்பு கலந்த வணக்கங்கள்! அரசியலில் பலர் பதவிக்காக வருகிறார்கள்.சிலர் புகழுக்காக வருகிறார்கள். சிலர் வாய்ப்பு கிடைத்தால் மட்டுமே கட்சியோடு இருப்பார்கள். ஆனால், சிலர் மட்டும் கொள்கைக்காக வாழ்கிறார்கள்… கொடியுக்காக ரத்தம் சிந்துகிறார்கள்… தங்கள் வாழ்க்கையையே இயக்கத்திற்காக அர்ப்பணிக்கிறார்கள். அப்படிப்பட்ட அரிதான அரசியல் மனிதர்களில் ஒருவர்தான் கன்னியாகுமரியின் உண்மையான காங்கிரஸ் போராளி — R. லாரன்ஸ் அவர்கள். காங்கிரஸ் என்பது அவருக்கு ஒரு கட்சி அல்ல… ஒரு உயிர் உறவு…
