அரசுப் பள்ளியில் மாணவர்களைச் சேர்ப்போம்! புத்தளம் அரசு தொடக்கப் பள்ளியில் மாபெரும் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வுப் பேரணி…
கன்னியாகுமரி மாவட்டம் புத்தளம் அரசு தொடக்கப் பள்ளியில், வருகின்ற கல்வியாண்டிற்கான புதிய மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி, மாபெரும் விழிப்புணர்வுப் பேரணி இன்று (11.03.2026) மிகச் சிறப்பாக நடைபெற்றது. அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் தரமான கல்வி மற்றும் அரசின் விலையில்லா நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்தப் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பள்ளித் தலைமை ஆசிரியர் திரு. M. இராமச்சந்திரன் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திரு. பிரேம் ஆனந்த் ஆகியோர் இந்நிகழ்விற்குத் தலைமையேற்று,…
