Headlines
நாகர்கோவில் போத்தீஸ் நிறுவனத்தில் திடீர் சோதனை

நாகர்கோவில் போத்தீஸ் நிறுவனத்தில் திடீர் சோதனை.

செப் 12 கன்னியாகுமரி நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள போத்தீஸ் ஜவுளி நிறுவனத்தில் இன்று காலை கேரளாவை சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் சுமார் 15 பேர் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சோதனை நடைபெற்று வரும் காரணத்தால், அங்கு யாரும் அனுமதிக்கப்படவில்லை. தொடர்ந்து சோதனை நடைபெற்று வருவதாகவும், சோதனை முடிந்த பின்னர் தான் முழுமையான தகவல்கள் வெளிவரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குமரி மாவட்ட செய்தியாளர் பாவலர் ரியாஸ்.

Read More
நீலகிரி மாவட்டத்தில் உறுப்பினர் கல்வித் திட்டம்.

நீலகிரி மாவட்டத்தில் உறுப்பினர் கல்வித் திட்டம்.

நீலகிரி மாவட்டக் கூட்டுறவு ஒன்றியத்தின் சார்பாக மைனலை மடிதோரை தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தின் செயல் எல்லையில் அமைந்துள்ள மைனலை கிராமத்தில் உறுப்பினர் கல்வி திட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நீலகிரி மண்டல இணைப்பதிவாளர் திருமதி. மரு. தே. சித்ரா அவர்கள் தலைமை தாங்கினார். தனது தலைமையுரையில் கூட்டுறவு இயக்க வரலாறு குறித்தும், கூட்டுறவு சங்கத்தின் நோக்கம், சேமிப்பு,வைப்பு குறித்த விழிப்புணர்வு தொடர்பாகவும், கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் கடன்கள் குறித்தும் விரிவாக எடுத்துத்துரைத்தார். இந்நிகழ்ச்சிக்கு நீலகிரி…

Read More
காரத்தொழுவு கிராமத்தில் திமுக கிளைக் கழக செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

காரத்தொழுவு கிராமத்தில்திமுக கிளைக் கழக செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

மடத்துக்குளம் கிழக்கு ஒன்றியம் காரத்தொழுவு திமுக கிளைக் கழக செயற்குழு மற்றும் வாக்குச்சாவடி குழு கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா, தந்தை பெரியார் பிறந்த நாள் விழா மற்றும் கழக ஆக்கப் பணிகள் குறித்து பல்வேறு ஆலோசனைகள் நடத்தப்பட்டது.கூட்டத்திற்கு கிளைக் கழக அவைத்தலைவர் கே.கே.சொக்கலிங்கம் தலைமை வகித்தார். கிளை கழக செயலாளர் எம்.ஜான்சா அலி வரவேற்புரை ஆற்றினார். திருப்பூர் தெற்கு மாவட்ட கழக பொருளாளர் கே.எம்.முபாரக் அலி, மடத்துக்குளம் கிழக்கு ஒன்றிய கழக…

Read More
பரபரப்பு விபத்து – கன்னியாகுமரியில் இருவர் பலி

பரபரப்பு விபத்து – கன்னியாகுமரியில் இருவர் பலி.

செப் 12 கன்னியாகுமரி கன்னியாகுமரி ரயில்வே நிலையம் முன்பு பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் துயரச் சம்பவம் நடந்தது. மது போதையில் ஜேசிபி வாகனத்தை கட்டுப்பாட்டை இழந்து தாருமாறாக ஓட்டிய ஓட்டுநர், சாலையில் சென்றவர்களை மோதி விபத்து ஏற்படுத்தினார். இதில் இருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். உயிரிழந்தவர்களில் ஒருவர், கன்னியாகுமரி பேரூராட்சி பகுதி தமிழக வெற்றிக்கழக நிர்வாகி முஹம்மது ஷான், மற்றொருவர் அப்பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் உள்ளூர் மக்களிடம் பெரும்…

Read More
மலைவாழ் பள்ளிக் குழந்தைகளுக்கு எழுத்தும் திட்ட முகாம் நடைபெற்றது !

மலைவாழ் பள்ளிக் குழந்தைகளுக்கு எழுத்தும் திட்ட முகாம் நடைபெற்றது !

திருப்பூர் மாவட்டம், உடுமலை ஸ்ரீ ஜி.வி.ஜி விசாலாட்சி மகளிர் கல்லூரி பொருளாதார துறை விரிவாக்க திட்டத்தின் கீழ் பொருளாதார துறை மூன்றாம் ஆண்டு மாணவிகள் கோடந்தூர் மலைவாழ் பள்ளி மாணவ மாணவியருக்கு எழுத்து திட்டத்தின் கீழ் முதல் பருவத் தேர்வுக்கான வினாக்களை பாடல் பாடியும் , ஆடியும் மாணவ மாணவியருக்கு கற்பித்தனர். இந்நிகழ்ச்சியை வனக்காப்பாளர் பா.சேட்கருப்பசாமி துவக்கி வைத்தார். தலைமை ஆசிரியர் கா.ஜோதிபாசு வரவேற்புரையாற்றினர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ஸ்ரீ ஜி.வி.ஜி விசாலாட்சி மகளிர் கல்லூரி பொருளாதார துறை…

Read More
கோவை அரசு கலை அறிவியல் கல்லூரியில் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கணபதி ராஜ்குமார் அவர்களிடம் கல்லூரிக்கு தேவையான சில பணிகள் செய்து தருமாறு கோரிக்கை !

கோவை அரசு கலை அறிவியல் கல்லூரியில் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கணபதி ராஜ்குமார் அவர்களிடம் கல்லூரிக்கு தேவையான சில பணிகள் செய்து தருமாறு கோரிக்கை !

கோவை அரசு கலை அறிவியல் கல்லூரியில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து பணிகள் செய்து தரும்படி கோரிக்கை வைத்தனர். அதனை தொடர்ந்து இன்று அரசு கலை அறிவியல் கல்லூரியில் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கணபதி ராஜ்குமார் அவர்கள் நேரில் பார்வையிட்டு செய்யப்பட வேண்டிய பணிகள் குறித்து கேட்டறிந்தார். உடன் அரசு கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர்கள் உடன் இருந்தனர். தமிழக விடியல் கோவை செய்தியாளர் ல. ஏழுமலை

Read More
கோவை மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் தலைமை செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் கழகச் செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் :

கோவை மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் தலைமை செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் கழகச் செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் :

கோவை மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் பகுதி கழகச் செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் அனைத்து சார்பு அணிகளின் அமைப்பாளர்கள் கூட்டம் மாநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் செப்டம்பர் 15 பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் ஓரணியில் தமிழ்நாடு வாக்குச்சாவடி அளவிலான உறுதிமொழி முன்மொழி கூட்டங்கள் நடத்துவது பற்றியும் கலந்து ஆலோசிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கோவை மாநகர் மாவட்ட செயலாளர் நா. கார்த்திக் எக்ஸ்…

Read More
நாகர்கோவிலில் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் !

நாகர்கோவிலில் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் !

செப் 12 கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அறிஞர் அண்ணா விளையாட்டரங்கம் முன்பு 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் சங்கத்தினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அகவிலை படி கூட இல்லாமல் தினமும் 12 மணி நேரத்திற்கு மேல் உழைத்து வரும் பணியாளர்களுக்கு 30% ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும், 16% ஊதிய உயர்வில் 10% மட்டுமே வழங்கி விட்டு, மீதமுள்ள 6% ஊதியத்தை தமிழக அரசு மற்றும் தனியார் நிறுவனம்…

Read More
கருங்கல் அருகே 42 நாட்கள் ஆன பெண் குழந்தையை கொன்ற தாய் கைது :

கருங்கல் அருகே 42 நாட்கள் ஆன பெண் குழந்தையை கொன்ற தாய் கைது :

செப் 12, கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியைச் சேர்ந்த பெனிட்டா ஜெயஅன்னாள் (20), மதுரையைச் சேர்ந்த கார்த்திக் (21) இருவரும் காதலித்து திருமணம் செய்தனர். இவர்களுக்கு 43 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. நேற்று (வியாழக்கிழமை) அதிகாலை 3 மணியளவில் குழந்தை உயிரிழந்தது. இதுகுறித்து கருங்கல் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. பின்னர், குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற பிரேத பரிசோதனையில், குழந்தையின் வாயில் டிஸ்யூ பேப்பர் திணிக்கப்பட்டதால் உயிரிழந்தது தெரியவந்தது….

Read More
ஆலங்குளத்தில் - தமிழ்நாடு அரசு மற்றும் "சர்தார் ராஜா பொறியியல் கல்லூரி" இணைந்து நடத்திய "மாபெரும் தமிழ் கனவு" நிகழ்ச்சி !

ஆலங்குளத்தில் – தமிழ்நாடு அரசு மற்றும் “சர்தார் ராஜா பொறியியல் கல்லூரி” இணைந்து நடத்திய “மாபெரும் தமிழ் கனவு” நிகழ்ச்சி !

தென்காசி : செப் – 12- தென்காசி மாவடம் ஆலங்குளத்தில் தமிழ்நாடு அரசு மற்றும் சர்தார் ராஜா பொறியியல் கல்லூரி இணைந்து நடத்திய ‘மாபெரும் தமிழ்க்கனவு நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியில் தமிழ் மொழியின் பெருமையையும் அதன் வளர்ச்சி கனவையும் எடுத்துரைக்கும் வகையில், அரசு சார்ந்த சிறப்பு நிகழ்ச்சி “மாபெரும் தமிழ்க் கனவு” சர்தார் ராஜா பொறியியல் கல்லூரியில் வைத்து சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சொற்பொழிவாளர் கவிஞர் நெல்லை ஜெயந்தா தென்காசி மாவட்டவருவாய் அலுவலர் சீ….

Read More