கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மதவெறி கருத்துகள் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனிதநேய ஜனநாயகக் கட்சியினர் மனு.
செப் 17 கன்னியாகுமரி – கன்னியாகுமரி மாவட்ட மனிதநேய ஜனநாயகக் கட்சியினர், அதன் மாவட்ட செயலாளர் முஜீப் தலைமையில் மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்தனர். அந்த மனுவில், “அறிவுசால் ஆன்மீக கல்விக் கழகம்” என்ற அமைப்பு, குமரி மாவட்டம் முழுவதும் “இந்து சமய வகுப்பு” என்ற பெயரில் இளம் பிஞ்சுகளின் மனங்களில் மதவெறி, சிறுபான்மையினர் மீது வெறுப்பு கருத்துகளைப் பரப்பி வருகிறது எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அண்மையில், நாகர்கோவிலின் இருளப்பபுரம் பகுதியில் உள்ள சீதாலட்சுமி திருமண மண்டபத்தில்,…
