Headlines
சமூக சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.

சமூக சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.

தனக்கு வேண்டும் என்பது தேவை!! எல்லோருக்கும் வேண்டும் என்பது சேவை!!என்ற கொள்கை மனப்பான்மையோடு தன்னுடைய ஊதியம் கொண்டும் நண்பர்களின் உதவியுடனும் பல்வேறு சமூகப் பணிகளைச் செய்து வருகிறார் மதுரை சேர்ந்த ஆசிரியரும் சமூக ஆர்வலருமான நூருல்லாஹ். இஸ்லாமியராக இருந்தாலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சாலையோர மக்களும் பண்டிகை நல்ல முறையில் கொண்டாடுவதற்காக அவர்களுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கியும், நண்பர்களின் உதவியோடு மாற்றுத்திறனாளிகளுக்கும், முதியவர்களுக்கும், மாணவர்களுக்கும் புத்தாடைகள் மற்றும் பட்டாசுகள் வழங்கியுள்ளார். மேலும் தீபாவளி அன்று சாலையோர…

Read More
சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக் மீது அரசு பஸ் மோதி விபத்து.

சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக் மீது அரசு பஸ் மோதி விபத்து.

தக்கலை அக்டோபர் 27, திருவிதாங்கோடு நடுக்கடை சந்திப்பு பகுதியில் முகமாத்தூர் பகுதியை சேர்ந்த சதீஷ் (41) என்பவர் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு மெடிக்கல் கடையில் மருந்து வாங்க சென்றுள்ளார் அப்போது குளச்சலில் இருந்து குலசேகரம் நோக்கி சென்ற அரசு பேருந்து (தடம் எண் 332) சாலையின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது, இதில் பைக் உருகுலைந்தது தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த தக்கலை காவல்துறையினர் பஸ் மற்றும் இருசக்கர வாகனத்தை…

Read More
கன்னியாகுமரியில் ‘Youth Talks’ — கனிமொழி எம்.பி மாணவர்களுடன் ஊக்கப்பேச்சு.

கன்னியாகுமரியில் ‘Youth Talks’ — கனிமொழி எம்.பி மாணவர்களுடன் ஊக்கப்பேச்சு.

அக் 27 கன்னியாகுமரி தக்கலை: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை நூருல் இஸ்லாம் பல்கலைக்கழக வளாகத்தில் “Youth Talks” என்ற தலைப்பில் மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் கழக துணை பொதுச் செயலாளர் மற்றும் மண்டல பொறுப்பாளர் திருமிகு கனிமொழி கருணாநிதி எம்.பி. அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, இளைஞர்களின் எதிர்காலம், கல்வி, சமூகப் பொறுப்பு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் மாணவர்களுடன் நேரடியாக உரையாடினார். நிகழ்வில் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் திரு. மனோ தங்கராஜ்,…

Read More
திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்வு: கந்த சஷ்டி விழா...

திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்வு: கந்த சஷ்டி விழா…

திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்வு கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வாகும், இதில் முருகப்பெருமான் அசுரனான சூரபத்மனை வதம் செய்கிறார். இன்று 27, 2025 அன்று மாலை 4:30 மணிக்கு கடற்கரையில் இந்நிகழ்வு நடைபெற்றது. இது முருகப்பெருமானின் அருளாற்றலை வெளிப்படுத்தும் ஒரு கோலாகலமான நிகழ்வாகும். கந்த சஷ்டி விழாவின் உச்சக்கட்டமாக, முருகப்பெருமானின் ஜெயந்திநாதர் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்வு. இந்த நிகழ்வு, ஆணவத்தையும் தீய சக்திகளையும் அழித்து நற்கதி தரும் பரம்பொருள் முருகப்பெருமானின் ஆற்றலை உணர்த்துகிறது. சூரபத்மனை…

Read More
குமரி மாவட்டம் தக்கலை அருகே சொகுசு காரில் மினிபஸ் மோதி விபத்து!

குமரி மாவட்டம் தக்கலை அருகே சொகுசு காரில் மினிபஸ் மோதி விபத்து!

தக்கலை அக்டோபர் 27, மார்த்தாண்டத்தில் இருந்து தக்கலை நோக்கி வந்த மினி பஸ் மணலி பகுதி அருகே வரும்போது முன்பே சென்ற சொகுசு காரில் மோதி விபத்து காரில் இருந்தவர்கள் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சம்பவ இடத்திற்கு வந்த தக்கலை போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்குளம் தாலுக்கா நிருபர் அன்ஷாத் மாலிக்.

Read More
திருநெல்வேலியில் நடைபெற்ற, மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய, மாவட்ட ஆட்சித்தலைவர் சுகுமார்!

திருநெல்வேலியில் நடைபெற்ற, மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய, மாவட்ட ஆட்சித்தலைவர் சுகுமார்!

திருநெல்வேலி,அக்.27:- நெல்லை கொக்கிரகுளம் பகுதியில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள, மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில், “மக்கள் குறைதீர்க்கும் நாள்” கூட்டம், இன்று (அகடோபர். 27) நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. சுகுமார், இந்த கூட்டத்திற்கு தலைமை வகித்து, மாவட்ட மக்களிடமிருந்து, “கோரிக்கை” மனுக்களை பெற்றார். இந்த கூட்டத்தில், பொதுமக்களின் கோரிக்கைகளின் தன்மைகளுக்கேற்ப, மனுக்கள் பதிவு செய்யப்படுவதுடன், அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம், நேரில் அளிக்கும் வகையிலும், முக்கிய கோரிக்கைகள் மற்றும்…

Read More
நாகர்கோவிலில் பெண்களுக்கு தனி பார் – சமூகத்தில் பரபரப்பு!

நாகர்கோவிலில் பெண்களுக்கு தனி பார் – சமூகத்தில் பரபரப்பு!

நாகர்கோவில், அக்.27: நாகர்கோவில் மாநகரில் மீனாட்சிபுரம் அண்ணா பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு மதுக்கடை (எண் 4747) எதிரில், பெண்களுக்கென தனிப்பட்ட பார் வசதி இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை ஒட்டியபடி, பெண்கள் மது அருந்திவிட்டு கிடக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருவதால், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது. “இது நமது சமூக ஒழுக்கத்தை சீர்குலைக்கும் செயல். இதுபோன்ற மதுக்கடைகள் நகர மையப் பகுதிகளில் இயங்குவது பொருத்தமல்ல,” என்று…

Read More
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், ஊழல் தடுப்பு விழிப்புணர்வு: உறுதிமொழி எடுத்துக்கொண்ட காவல்துறையினர்!

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், ஊழல் தடுப்பு விழிப்புணர்வு: உறுதிமொழி எடுத்துக்கொண்ட காவல்துறையினர்!

திருநெல்வேலிஅக்.27:-பாளையங்கோட்டை, மிலிட்டரி லைன் பகுதியில் உள்ள, நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், இன்று ( அக்டோபர்.27) காலையில், “ஊழல் தடுப்பு, விழிப்புணர்வு உறுதிமொழி!” எடுத்துக் கொள்ளப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை.சிலம்பரசன், தலைமையில் அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் ஆகியோர், தங்களுக்கிடையே ஊழல் தடுப்பு, விழிப்புணர்வினை ஏற்படுத்திக் கொள்ளும் வகையில், இந்த உறுதிமொழியை, மனப்பூர்வமாக எடுத்துக் கொண்டனர். “நமது நாட்டின் பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு, ஊழல் ஒரு முக்கிய தடையாக உள்ளதாக, நான்…

Read More
விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு மற்றும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு மற்றும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்ட புதிய அலை மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு அறக்கட்டளை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணர்வு மற்றும் கலந்தாய்வு கூட்டம் விழுப்புரத்தில் மாம்பழபட்டு சாலையில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட தலைவர் சி.மாரிமுத்து அவர்கள் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக ஒன் ஸ்டெப் யூனிட்டி காப்பாளர் விவேக் கிராம மேம்பாட்டு பவுண்டேஷன் ஆப் இந்தியா ஆலோசகர் அறவழி மாநில பொதுச்செயலாளர் எஸ் அண்ணாமலை உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் மாற்றுத்திறனாளிகளுக்கான நலவாய்ந்த நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெறவுள்ளது….

Read More
திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அருகே, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இறங்கிய அரசுப்பேருந்து! அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை!

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அருகே, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இறங்கிய அரசுப்பேருந்து! அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை!

திருநெல்வேலி,அக்.27:-திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், ராதாபுரத்தை அடுத்துள்ள “கூடங்குளம்” அருகே, இன்று ( அக்டோபர். 27) காலையில் நிகழ்ந்த சாலை விபத்து, மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூடங்குளத்திலிருந்து 30 பயணிகளுடன், நாகர்கோவில் நோக்கிச் சென்று கொண்டிருந்த, “தமிழ்நாடு அரசு” போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமான, திருநெல்வேலி பணிமனைப் “பயணிகள் பேருந்து”, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த பள்ளத்தில் இறங்கி, விபத்துக்குள்ளானது. இந்த விபத்தினால், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. ஆனாலும், ஒரு சில பயணிகள் சிறு-சிறு காயங்களுடன்,…

Read More