இதழ்கள்
மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஓ.பன்னீர் செல்வம் ஏற்பாட்டில் 50,000 பேர் திமுகவில் இணையும் நிகழ்ச்சிக் கூட்டம்.
நிதிஷ்குமாருக்கு நடந்ததுதான் தமிழ்நாடில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்-மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு. ஓபிஎஸ் என்று சொன்னால் முதலில் ஞாபகம் வரும் சொல் விசுவாசம். அதற்காக ஜெயலலிதாவால் பாராட்டப்பட்டவர். எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவர். எம்.ஜி.ஆர். உருவாக்கிய அதிமுக யாருக்கோ அடிமை சேவகம் செய்ய போனதால், தாய்க் கழகம் திரும்பிய உங்களை, திமுகவின் தலைமை தொண்டனாக வரவேற்கிறேன். அதிமுகவை அடமானம் வைத்துள்ள இபிஎஸ், பாஜக தனக்கு நல்லது செய்யும் என நினைக்கிறார்; உண்மையில் அதிமுகவின் ரத்தத்தைதான் பாஜக உறிஞ்சப்…
ரஷ்ய எண்ணெய் விவகாரம்: அமெரிக்காவின் ‘அனுமதி’க்காகக் காத்திருக்கும் நிலையிலா இந்தியா?
நடுக்கடலில் தேங்கியுள்ள ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்கிக்கொள்ள, இந்தியாவிற்கு அமெரிக்கா 30 நாட்கள் தற்காலிக அனுமதி வழங்கியுள்ளது. உலகளாவிய பொருளாதார நலன் சார்ந்த இந்த அறிவிப்பு, தற்போது இந்தியாவின் உள்நாட்டு அரசியலில் இறையாண்மை சார்ந்த பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. “சுதந்திர நாடான இந்தியா, தனது நாட்டு மக்களின் தேவைக்கான கச்சா எண்ணெயை யாரிடம், எப்போது வாங்க வேண்டும் என்பதற்கு அமெரிக்காவிடம் ஏன் அனுமதி பெற வேண்டும்?” என்ற கேள்வி தற்போது அரசியல் களத்திலும், சமூக வலைத்தளங்களிலும் வலுவாக…
அறிவுசார் குறைபாடுகள் உள்ள மாணவர்களுக்கு தினமும் மதிய உணவு வழங்கும் நட்சத்திர நண்பர்கள் தொண்டு நிறுவனர் குருசாமி..
நட்சத்திர நண்பர்கள் தொண்டு நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் உயர் திரு. குருசாமி அவர்கள் 228 வது நாளாக இன்று அச்சீவர்ஸ் சிறப்பு பள்ளியில் பயிலும் அறிவுசார் குறைபாடுடைய மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கி அவர்களுக்கு பசியாற்றிவரும் அன்னதான பிரபு, மதுரையின் வைகை நாயகன், கருணை கடல், கல்வி தந்தை, எழுச்சி நாயகன், புரட்சி தலைவர், கலியுகத்தின் கடவுள், தர்மத்தின் தலைவன், இளைய தலைமுறையினர்களின் வீரத்தை விளையாட்டு போட்டியின் மூலமாக இந்த உலகத்திற்கு வெளிக்காட்டி விருது…
கோழிக் கழிவுகளை ஏற்றி வந்த டெம்போ பறிமுதல், அனுமதியின்றி இயங்கும் பண்ணைக்கு கொண்டு சென்றதாக குற்றச்சாட்டு!
கன்னியாகுமரி, மார்ச் 7: கன்னியாகுமரி மாவட்டம் கடையல் மேலே முக்கு பகுதியில் கோழிக் கழிவுகளை ஏற்றி வந்த டெம்போ ஒன்றை வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடியாகச் சிறைபிடித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். அதிகாரிகளைக் கண்டதும் வாகன ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். சிறைபிடிக்கப்பட்ட இந்தக் கோழிக் கழிவுகள், ஆலஞ்சோலை பகுதியில் எவ்வித அனுமதியுமின்றி சட்டவிரோதமாக இயங்கி வரும் பன்றிப் பண்ணை ஒன்றிற்கு கொண்டு செல்ல முயன்றபோது அதிகாரிகளால் பிடிபட்டதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும் கடையல் பேரூராட்சித் தலைவர்,…
ஆதரவற்ற முதியவர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட பட்டதாரி இளைஞர் மீட்பு…
ஆசிரமத்தில் அனுமதித்த நிமிர் மற்றும் தன்னார்வலர்கள்மனிதநேயம் நாகர்கோவில்,மார்ச் 7: கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆதரவின்றி தவித்த பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட முதியவர் ஒருவரும், போதைக்கு அடிமையாகி மனநலம் பாதிக்கப்பட்ட பொறியியல் பட்டதாரி இளைஞர் ஒருவரும் தன்னார்வலர்களால் மீட்கப்பட்டு, தோவாளையில் உள்ள அன்னை ஆசிரமத்தில் பாதுகாப்பாக அனுமதிக்கப்பட்டனர்.₹41,050-த்துடன் மீட்கப்பட்ட முதியவர். குருந்தன்கோடு பகுதியில், சுமார் 55 வயது மதிக்கத்தக்கப் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு வாய் பேச இயலாத முதியவர் ஒருவர் ஆதரவின்றி உருட்டு வண்டியில் அலைந்து திரிவதாகத் தகவல் கிடைத்தது. குமரி மாவட்ட…
புத்தளம் அரசு தொடக்கப் பள்ளியில் 80-வது ஆண்டு விழா:கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் கொண்டாட்டம்!
கன்னியாகுமரி, மார்ச் 8: கன்னியாகுமரி மாவட்டம், புத்தளம் அரசு தொடக்கப் பள்ளியின் 80-வது ஆண்டு விழா கடந்த வெள்ளிக்கிழமை (06.03.2026) மாலை 4.30 மணியளவில் பள்ளி வளாகத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு ராஜாக்கமங்களம் வட்டாரக் கல்வி அலுவலர் திரு. இசக்கியப்பன் M.Sc., B.Ed., அவர்கள் தலைமை தாங்கினார். பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக (PTA) தலைவர் திரு. B. பிரேம் ஆனந்த், பள்ளி மேலாண்மைக் குழு (SMC) தலைவர் திருமதி. G. அஜிதா மற்றும் பள்ளியின் முன்னாள்…
அனைத்து மக்கள் நீதிக் கட்சியின் மகளிர் அணி சார்பில் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை..!
மதுரை தத்தனேரி பகுதியில் அமைந்துள்ள சுடுகாட்டு காளியம்மன் கோவிலில் அடிப்படை வசதிகள் செய்யவும் கோவில் நிர்வாகத்தை தமிழக அரசு ஏற்று நடத்தவும் அனைத்து மக்கள் நீதி கட்சியின் மகளிரணி சார்பில் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளர்கள் காளி என்றாலே உக்கிரமானவள், காளி என்றாலே அதீத சக்தி வாய்ந்தவள் என்று பக்தர்கள் பயம் கொள்வது உண்டு. எப்படி தன் பிள்ளைக்கு அநீதி நடப்பதை பார்த்துக் கொண்டு ஒரு தாய் அமைதியாக இருக்க முடியும். அப்படி தட்டி கேட்பது தான்…
குமரி மாவட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சுற்றுப்பயணம்: அம்பேத்கர் சிலையைத் திறந்து வைத்தார்..!
கன்னியாகுமரி, மார்ச் 6: கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகத் தமிழகத் துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வருகை புரிந்தார். இதன் ஒரு பகுதியாக, இறச்சகுளம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சட்டமேதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலையை அவர் விமர்சையாகத் திறந்து வைத்துச் சிறப்புரையாற்றினார். இந்த விழாவில், பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினரும் பால்வளத்துறை அமைச்சருமான திரு. மனோ தங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயரும் திமுக…
கன்னியாகுமரி மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரூ.91.20 கோடி மதிப்பிலான திட்டங்கள்; 7601 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி..
நாகர்கோவில் | மார்ச் 6 கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் நடைபெற்ற அரசு விழாவில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு ரூ.91.20 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் புதிய பணிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் திரு. த. மனோ தங்கராஜ் தலைமையிலும், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர். அழகுமீனா, இ.ஆ.ப. மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஸ்டாலின், இ.கா.ப. ஆகியோர் முன்னிலையிலும் நிகழ்ச்சி…
குற்றத் தடுப்பு விழிப்புணர்வு முகாம்துங்காவி கிராமத்தில் கணியூர் காவல்துறையின் விழிப்புணர்வு – பொதுமக்கள் வரவேற்பு!
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அடுத்துள்ள கணியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட துங்காவி கிராமத்தில், காவல்துறையினர் சார்பில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் யாதவ் கிரிஷ் அசோக் IPS உத்தரவின் பேரில், உடுமலைப்பேட்டை காவல் துணை கண்காணிப்பாளர் திரு. நமச்சிவாயம் DSPன் நேரடி மேற்பார்வையில் இந்த விழிப்புணர்வு முகாம் ஒருங்கிணைக்கப்பட்டது. கணியூர் காவல் ஆய்வாளர் பஞ்சுலட்சுமி தலைமையில், உதவி ஆய்வாளர் கார்த்திக் குமார் மற்றும் காவலர்…
