இதழ்கள்
நாகர்கோவிலில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க சாலை விரிவாக்கம் அவசியம்: காங்கிரஸ் விவசாயப் பிரிவு மாநிலச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் வலியுறுத்தல்!
நாகர்கோவில்,டிசம்பர் 13: நாகர்கோவில் மாநகரத்தில் நாளுக்கு நாள் பெருகிவரும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காண, சாலைகளை விரிவாக்கம் செய்வது காலத்தின் கட்டாயம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி விவசாயப் பிரிவு மாநிலச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “நாகர்கோவில் நகரம் கடந்த 01.03.2019 அன்று மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. சுமார் 49.10 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநகரம், இயல்பாகவே குறுகிய சாலைகளையே கொண்டுள்ளது. தற்போதைய சூழலில் சாலைகள் விரிவாக்கம்…
திருநெல்வேலி பாளையங் கோட்டையில் உள்ள, மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவல் துறையினருக்காக நடைபெற்ற, கட்டணமில்லா மருத்துவ பரிசோதனை முகாம்!
திருநெல்வேலி,டிச.13:-திருநெல்வேலி பாளையங் கோட்டையில் உள்ள, மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில், திருநெல்வேலி மாவட்ட காவல்துறை மற்றும் திருநெல்வேலி தனியார் மருத்துவமனை இணைந்து நடத்திய, கட்டணமில்லா மருத்துவ பரிசோதனை முகாம், இன்று (டிசம்பர். 13) நடைபெற்றது. காவலர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்குமாக, காலை 9 மணி முதல், பிற்பகல் 2 மணிவரையிலும், நடைபெற்ற, இந்த இலவச முகாம், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை.சிலம்பரசன் உத்தரவின்படி, நடைபெற்றது. இந்த முகாமில், உடல் பரிசோதனை, இரத்த சர்க்கரை அளவு (RBS), இரத்த அழுத்த…
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் SQI பெந்தகோஸ்தே பேராயத்தின்கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
மதுரை மாவட்டத்தில் SQI பெந்தகோஸ்தே பேராயத்தின் கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது இவ்விழாவில் SQI பேராயத்தின் தமிழ்நாடு பேராயர் எம் .மாசிலாமணி தலைமையில், SQIநேஷனல் ஒருங்கிணைப்பாளர் பேராயர்.எம் ஜான் ஜெயராமன்,மதுரை மாவட்டபேராயர் கே.சி. டேனியல் இருவரது முன்னிலை தாங்கி நடத்தினார்கள். கிறிஸ்துமஸ் சிறப்பு செய்தியை SQI யின் ஆசிய பேராயர். B.ரமேஷ்பாலன் அவர்கள் கொடுத்தார்கள் இந்த விழாவில் அனைத்து தலைமை பேராயர்கள் , மண்டல பேராயர்கள் ,மாவட்ட பேராயர்கள், ரெவரன்ட்,…
பொது அமைதியை நிலைநாட்டுவதே அரசின் முக்கியப் பணி.
தீபம் எங்கே ஏற்ற வேண்டும் என்பதை கோவில் நிர்வாகம்தான் முடிவு செய்ய முடியும்அரசுத் தரப்பு வாதம் தர்கா அருகில் உள்ளது தீபத்தூண் என்பதற்கான எந்த ஆவணங்களையும் மனுதாரர்கள் தாக்கல் செய்யவில்லை எந்த ஆவணங்களையும் தாக்கல் செய்யாத நிலையில், எப்படி தீபத்தூண் என முடிவு செய்யப்பட்டது?* தனி நீதிபதி சுவாமிநாதனின் உத்தரவுகளில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி அரசுத் தரப்பு வாதங்களை முன்வைக்கிறது இந்த வழக்கு முழுவதும் ஒரு புதிய பழக்கத்தை கொண்டு வருவதற்காக தொடரப்பட்டது கோயில் சொத்துகள் தொடர்பாக…
திண்டுக்கல் 250 மாணவர்கள் ஒரே நேரத்தில் பாலின சமத்துவம் குறித்த ஓவியத்தினை வரைந்து நத்தம் ரோடு தனியார் கல்லூரியில் உலக சாதனை
கல்லூரி மாணவ மாணவியர் 250க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு 15 நிமிடத்தில் கலர் அட்டையில் பென்சில்கள் கொண்டு பாலின சமத்துவம் குறித்த லோகோவை ஓவியமாக வரைந்து உலக சாதனை படைத்தனர். தமிழகத்தில் இதுவரை பாலின சமத்துவம் குறித்த உலக சாதனை நிகழ்ச்சி 15 நிமிடத்தில் இதுவரை யாரும் செய்திடாத நிலையில் 250 மாணவர்கள் ஒரே இடத்தில் கூடி பாலின சமத்துவம் குறித்த லோகோ வரைந்து சாதனை படைத்தது இதுவே முதன்முறை குறிப்பிட்டு வேர்ல்ட் ஒன்டேர்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்…
தாடகை மலை அடிவாரத்தில் சர்வதேச மலைகள் தின விழிப்புணர்வு பேரணி..
கன்னியாகுமரி மாவட்டம்:-சர்வதேச மலைகள் தினத்தை முன்னிட்டு, கன்னியாகுமரி வனவிலங்கு சரணாலய மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரின காப்பாளர் முனைவர் அன்பு இ.வ.ப. அவர்களின் உத்தரவின்பேரில், பூதப்பாண்டி வனச்சரக அலுவலர் அன்பழகன் தலைமையில் 11.12.2025 அன்று செண்பகராமன்புதாரில் உள்ள கலைவாணர் என்.எஸ்.கே பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஓய்ஸ்கா அமைப்புடன் இணைந்து, அதன் மாநில தலைவர் நல்லப்பெருமாள் மற்றும் வன உயிரின ஆய்வாளர் பேராசிரியை சுதாமதி அவர்களின் ஒருங்கிணைப்பில், கல்லூரியின் நாட்டு நலப்பணி…
கன்னியாகுமரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் — முதல்நிலை சரிபார்ப்பு பணிகள் தீவிரம்!
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் திருமதி ஆர். அழகுமீனா, இ.ஆ.ப., அவர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) முதல்நிலை பரிசோதனை பணிகளை இன்று (11.12.2025) நேரில் ஆய்வு செய்தார். நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தொகுதியில் அமைந்துள்ள EVM கிட்டங்கியிலேயே இந்த பரிசோதனைகள் நடைபெற்றன. இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, மாவட்டத்தில் மொத்தம் 5594 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 4040 கட்டுப்பாட்டு கருவிகள், 2802 VVPAT கருவிகள்…
நேர்முக உதவியாளரா இல்லை மறைமுக எதிர்கட்சிகாரரா ?
திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்ற தொகுதி உறுப்பினரான ஐ.பி.செந்தில்குமாரின் நேர்முக உதவியாளராக இருந்து வருபவர் லோகு என்ற லோகநாதன். பழனி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அரசு மற்றும் திமுக கட்சி சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அதன்படி நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் மக்கள் பிரதிநிதியான எம்.எல்.ஏ செந்தில்குமார் கலந்து கொண்டு மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறார். அரசு மற்றும் திமுக கட்சியின் முக்கிய நிகழ்ச்சிகள் நடத்துவது தொடர்பாக செய்தியாளர்களுக்கு தகவல் வழங்க வேண்டியது சம்பந்தப்பட்ட நேர்முக…
தமிழ் நாடு அமைச்சு பணி விதிகளின் விதி 38(b)(iii) படி ஒரு கிராம நிருவாக அலுவலர், அவர் பணியாற்றும் கிராமத்திலேயே வசிக்க வேண்டும்…
கிராம நிர்வாக அலுவலர், அவர் பணி புரியும் கிராமத்தில் தங்கி இருக்க வேண்டும் ! சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு !! “எந்த கிராமத்திற்கு ஒருவர் கிராம நிருவாக அலுவலராக நியமனம் செய்யப்படுகிறாரோ அந்தக் கிராமத்திலேயே அவர் வசிக்க வேண்டும். அங்கு அவர் அப்பதவியை வகிக்கும் காலம் வரை அப்படியே தொடர்ந்து வசிக்க வேண்டும். இது குறித்து அரசு பிறப்பித்துள்ள குறிப்புரை கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும். கிராம நிருவாக அலுவலர்கள் தங்கள் பதவி இடத்திலேயே வசிக்கிறார்களா என்பதை அவர்களது…
சுகாதாரச் சீர்கேடு: உயிருக்கு உலை வைக்கும் உணவகம்? நாகர்கோவிலில் பரபரப்பு!
நாகர்கோவில், டிசம்பர் 11: குமரி மாவட்டம், வெட்டூர்ணிமடம் – கிறிஸ்து நகர் பகுதியில் செயல்பட்டு வரும் ‘ஹோட்டல் அஸ்பி’ (Hotel Asbie) உணவகம், பொதுமக்களின் உயிருடன் விளையாடும் வகையில் செயல்பட்டு வருவது அப்பகுதி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இங்கு பொதுமக்களின் உடல்நலனைப் பாதிக்கும் வகையில் தரமற்ற முறையில் உணவு தயாரிக்கப்படுவதாகவும்; குடிநீர் கேன்கள், உணவு பரிமாறும் பாத்திரங்கள் மற்றும் கைகழுவும் இடங்கள் ஆகியவை மிகவும் சுகாதாரமற்ற நிலையில் பராமரிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால் உணவருந்த வரும்…
