Headlines
தழிஞ்சி மலைவாழ் பள்ளி மாணவர்களுக்கு இலவச சுகாதார அட்டை: ஜி.வி.ஜி. விசாலாட்சி கல்லூரி சார்பில் கல்வி நலத்திட்ட உதவிகள் வழங்கல்!

தழிஞ்சி மலைவாழ் பள்ளி மாணவர்களுக்கு இலவச சுகாதார அட்டை: ஜி.வி.ஜி. விசாலாட்சி கல்லூரி சார்பில் கல்வி நலத்திட்ட உதவிகள் வழங்கல்!

தழிஞ்சி மலைவாழ் மக்கள் தொடக்கப் பள்ளியில், உடுமலை ஸ்ரீ ஜி.வி.ஜி. விசாலாட்சி மகளிர் கல்லூரியின் பொருளாதாரத் துறை சார்பில் சிறப்பு விரிவாக்கத் திட்ட முகாம் மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது. இம்முகாமில், பள்ளி மாணவ-மாணவியருக்கு இணையதளம் வாயிலாக இலவசமாக சுகாதார அட்டைகள் (Health Cards) பதிவு செய்து வழங்கப்பட்டன. தொடர்ந்து, தமிழக அரசின் ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தின்கீழ், மாணவர்களின் கற்றல் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் ஆடல், பாடல் மற்றும் கதைகள் மூலம் எளிய முறையில்…

Read More
பழனி அருகே 60 கிலோ தடை செய்யப்பட்ட போதைப்பொருள் பறிமுதல்: வாலிபர் கைது!

பழனி அருகே 60 கிலோ தடை செய்யப்பட்ட போதைப்பொருள் பறிமுதல்: வாலிபர் கைது!

பழனி: பழனி அருகே பாப்பம்பட்டியில் சட்டவிரோதமாகத் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், தாலுகா காவல் துறை சார்பில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. 60 கிலோ போதைப்பொருள் பறிமுதல் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில், பழனி டிஎஸ்பி தேவராஜ் தலைமையில் தனிப்படை அமைத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தாலுகா காவல் ஆய்வாளர் சத்தியமூர்த்தி தலைமையிலான போலீசார் பாப்பம்பட்டி பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, விற்பனைக்காகப் பதுக்கி…

Read More
மதுரையில் புதிய தனியார் ஹெலிகாப்டர் சேவை தொடக்கம்: 30 நிமிடங்களில் திருச்செந்தூர், கொடைக்கானல் செல்லலாம்!

மதுரையில் புதிய தனியார் ஹெலிகாப்டர் சேவை தொடக்கம்: 30 நிமிடங்களில் திருச்செந்தூர், கொடைக்கானல் செல்லலாம்!

மதுரை: ஆன்மிக மற்றும் சுற்றுலா நகரமாக வேகமாக வளர்ந்து வரும் மதுரையை மையமாகக் கொண்டு, முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கு விரைவாகச் செல்வதற்காக புதிய தனியார் ஹெலிகாப்டர் சேவை தொடங்கப்பட்டுள்ளது. அமைவிடம் & பயண நேரங்கள் மதுரை விமான நிலையம் அருகே அமைந்துள்ள ஒரு தனியார் கல்லூரி வளாகத்தில் இதற்கான ஹெலிகாப்டர் இறங்கு தளம் (Helipad) அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சேவையின் மூலம் முக்கிய நகரங்களுக்கான பயண நேரம் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது: கட்டணம் மற்றும் இயக்க நேரம் தென் தமிழகத்தின்…

Read More
கல்லூரி அருகே தேநீர் கடை: மாணவர்களுக்கு புகையிலைப் பொருட்கள் விற்பனையா? சமூக ஆர்வலர்கள் புகார்; அதிகாரிகள் விசாரணை நடத்த கோரிக்கை!

கல்லூரி அருகே தேநீர் கடை: மாணவர்களுக்கு புகையிலைப் பொருட்கள் விற்பனையா? சமூக ஆர்வலர்கள் புகார்; அதிகாரிகள் விசாரணை நடத்த கோரிக்கை!

நாகர்கோவில், ஆக. 28: நாகர்கோவில் செட்டிகுளம் பகுதியில் இந்து கல்லூரி அருகே புதிதாக செயல்பட்டு வரும் தேநீர் கடையில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு சிகரெட், பீடி உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் கட்டுப்பாடின்றி விற்பனை செய்யப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்தக் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், அவற்றின் உண்மைத் தன்மை மற்றும் கடையில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதா என்பது அதிகாரப்பூர்வமாக…

Read More
கன்னியாகுமரியின் முதல் கிராண்ட் மாஸ்டர்: சாதனை படைத்த நாகர்கோவில் இளைஞர் அஸ்வத்!

கன்னியாகுமரியின் முதல் கிராண்ட் மாஸ்டர்: சாதனை படைத்த நாகர்கோவில் இளைஞர் அஸ்வத்!

நாகர்கோவில்,ஆக 28,2026 : கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் கோட்டாறு செட்டித் தெருவைச் சேர்ந்த செஸ் பயிற்சியாளர் சிவாவின் மகனும், ‘கேப் செஸ் அகாடமி’யின் (Cape Chess Academy) மாணவருமான அஸ்வத், சர்வதேச அளவில் சாதனை படைத்து ‘கிராண்ட் மாஸ்டர்’ (Grandmaster) பட்டம் பெற்றுள்ளார். இதன் மூலம் கன்னியாகுமரி மாவட்டத்தின் 1-வது கிராண்ட் மாஸ்டராகவும், தமிழ்நாட்டின் 38-வது மற்றும் இந்தியாவின் 98-வது கிராண்ட் மாஸ்டராகவும் உருவெடுத்து வரலாற்றுச் சாதனை புரிந்துள்ளார். தமது 3 வயதிலிருந்தே தந்தையிடம் சதுரங்கம் பயின்று…

Read More
குழந்தைகள் பாதுகாப்புக்கு விழிப்புணர்வு: ஆசாரிபள்ளம் பகுதியில் ‘நிமிர் – The Rising Team’ பிரசாரம்.

குழந்தைகள் பாதுகாப்புக்கு விழிப்புணர்வு: ஆசாரிபள்ளம் பகுதியில் ‘நிமிர் – The Rising Team’ பிரசாரம்.

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின் IPS அவர்களின் சிறப்பு வழிகாட்டுதலின் கீழ் செயல்படும் ‘நிமிர் – The Rising Team’ சார்பில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வு பிரசாரம் ஆசாரிபள்ளம் பகுதியில் நடைபெற்றது. திருமதி ஜெயந்தி, திருமதி சுமதி, திருமதி ஆஷா ஆகியோர் பொதுமக்களை நேரில் சந்தித்து, குழந்தைகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்து விளக்கினர். தவறான தொடுதல், பாலியல் வன்கொடுமை, குழந்தைத் திருமணம், கடத்தல், குழந்தைத்…

Read More
FQL செயலி மூலம் பணம் இரட்டிப்பாகும் என பல கோடி மோசடி: நத்தம் அருகே முகவர்கள் வீடுகள் முற்றுகை – போலீஸ் வேன் மீது கல்வீச்சு!

FQL செயலி மூலம் பணம் இரட்டிப்பாகும் என பல கோடி மோசடி: நத்தம் அருகே முகவர்கள் வீடுகள் முற்றுகை – போலீஸ் வேன் மீது கல்வீச்சு!

நத்தம்: நத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் FQL செயலி மூலம் குறுகிய காலத்தில் பணம் இரட்டிப்பாகும் எனக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முகவர்களின் வீடுகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதுடன், அவர்களை அழைத்துச் சென்ற காவல் துறை வாகனத்தின் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தியதால் அப்பகுதியே போர்க்களமாக மாறியது. ரூ.54,000 முதலீடு செய்தால் இரட்டிப்பு: மாய வலையில் வீழ்ந்த…

Read More
பழனி மாவட்ட அரசு மருத்துவமனையில் தூய்மை பணி ஒப்பந்தம் செய்துள்ள ஸ்மித் நிறுவன உரிமையை ரத்து செய்ய வேண்டும் இல்லை என்றால் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெறும் விசிக அதிரடி அறிவிப்பு...

பழனி மாவட்ட அரசு மருத்துவமனையில் தூய்மை பணி ஒப்பந்தம் செய்துள்ள ஸ்மித் நிறுவன உரிமையை ரத்து செய்ய வேண்டும் இல்லை என்றால் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெறும் விசிக அதிரடி அறிவிப்பு…

திண்டுக்கல் மாவட்டம் பழனி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தூய்மை பணியில் ஈடுபட்டு வந்த 17 நபர்களை ஸ்மித் என்ற தனியார் நிறுவனம் வேலையில் அமர்த்தப்படாமல் காலம் தாழ்த்தி வருகின்றது. தொடர்ந்து பல்வேறு மருத்துவத் துறை அதிகாரிகளிடம் மனுக்கள் கொடுத்தும் நீதிமன்றம் சென்று அனுமதியானை வாங்கிய பின்பும் கூட இதுவரை அவர்களை பணி நியமனம் செய்யாமல் காலம் தாழ்த்தி வரும் ஸ்மித் என்ற தனியார் நிறுவன உரிமையை ரத்து செய்ய வேண்டும்…

Read More
பழனியில் புண்ணிய நதியான சண்முகநதியை சீரமைக்க இளைஞர்கள் தீவிர தூய்மைப் பணி: 6 மாதங்களில் பழைய பொலிவுக்கு கொண்டுவர திட்டம்!

பழனியில் புண்ணிய நதியான சண்முகநதியை சீரமைக்க இளைஞர்கள் தீவிர தூய்மைப் பணி: 6 மாதங்களில் பழைய பொலிவுக்கு கொண்டுவர திட்டம்!

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு வருகை தரும் லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் காவடி எடுக்கும் பக்தர்கள் புனித நீராடும் முதன்மை நதியாக சண்முகநதி விளங்கி வருகிறது. இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க புண்ணிய நதியை மீட்டெடுக்கும் நோக்கில், ‘We The Leaders’ அமைப்பின் சார்பில் தீவிர தூய்மைப் பணித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கனகராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில், ஏராளமான இளைஞர்களும் தன்னார்வலர்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு நதிக்கரையிலும் நீரிலும் தேங்கிக்கிடந்த பிளாஸ்டிக் கழிவுகள், பாட்டில்கள் மற்றும்…

Read More
மதுரை அலங்காநல்லூர் அருகே ஆசிரியர் திட்டியதால் மனமுடைந்த 11-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை: உருக்கமான கடிதம் சிக்கியது; பள்ளியை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்!

மதுரை அலங்காநல்லூர் அருகே ஆசிரியர் திட்டியதால் மனமுடைந்த 11-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை: உருக்கமான கடிதம் சிக்கியது; பள்ளியை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்!

மதுரை, ஆக. 27: மதுரை மாவட்டம் சமயநல்லூர் பர்மா காலனியைச் சேர்ந்த அந்தீஸ்வரன் – ஆனந்த லெட்சுமி தம்பதியின் மகள், அலங்காநல்லூர் அருகே உள்ள கொண்டையம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், 10-ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவி, தற்போது 11-ஆம் வகுப்பில் படிப்பில் பின்தங்கியதாகத் தெரிகிறது. மேலும், சக மாணவர் ஒருவரைக் காதலித்து வந்த தகவலை நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்திருந்ததைப் பார்த்த ஆசிரியரும், குடும்பத்தினரும்…

Read More