இதழ்கள்
வெற்றி அறக்கட்டளை நிலவன் டிவி இணைந்து வழங்கும் நலத்திட்ட உதவிகள் மற்றும் விருது வழங்கும் விழா நடைபெற்றது…
மதுரை பெரியார் பஸ் நிலையம் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலை அருகில் யூசி பள்ளியில் நடைபெற்ற வெற்றி அறக்கட்டளை நிலவன் டிவி இணைந்து வழங்கிய நலத்திட்ட உதவிகள் மற்றும் விருது வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஸ்டார் பிரண்ட்ஸ்அறக்கட்டளை நிறுவனர், டி.குருசாமி தலைமையில் நடைபெற்றது. இடை காட்டூர் பள்ளி தலைமை ஆசிரியர் பிரபாகர் முன்னிலை வகித்தார் மற்றும் கட்சி பிரதிநிதிகள், காவல்துறை ஆய்வாளர்கள் ,வழக்கறிஞர்கள், தொழிலதிபர்கள், கலந்து கொண்டு சமூக ஆர்வலர்களுக்கான விருது மக்கள் நலப்பணி விருது மற்றும்…
முதல்வர் வருகையும் முக்காடு போடும் காலி மனைகளும்: குமரியில் ‘மோடி மாடலை’ கையில் எடுத்த திராவிட மாடல்!
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வருகை தரவுள்ள நிலையில், அவரை வரவேற்க நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகம் செய்துள்ள ஒரு ‘பிரம்மாண்ட’ ஏற்பாடே தற்போது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. முதல்வரின் பயண வழித்தடங்களில் உள்ள தனியார் காலி மனைகளைத் தேடிப்பிடித்து, ஆளுயரத் திரைகளால் மூடும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குஜராத் மாநிலத்துக்கு வந்தபோதும், 2023…
கல்விக்குக் கரம்கொடுக்கும் திராவிட மாடல் அரசு.
கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 80வது வார்டில் உள்ள செல்வபுரம் மாநகராட்சிப் பள்ளியில் ரூ.96 இலட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறைகள் திறப்பு விழா! மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலில், “இல்லம் தேடி கல்வி” முதல் “முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்” வரை கல்வித்துறையில் தமிழகம் ஒரு பொற்கால ஆட்சியைச் சந்தித்து வருகிறது. அந்த வகையில், கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட 80-வது வார்டு செல்வபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் கல்வி மேம்பாட்டிற்காக ஒரு முக்கிய…
அரசு சுவற்றில் அரசியல் விளம்பரம் செய்யும் த.வெ.க.!
#பழனி சட்டமன்ற தேர்தலையொட்டி தவெக கட்சியினருக்கு விசில் சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம் பழனி வ.உ.சி பேருந்து நிலையத்தில் பெருநகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் த.வெ.கவினர் விசில் சின்னம் வரைந்துள்ளனர். அரசு சுவற்றில் சுவர் விளம்பரம் செய்யாதீர் மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த அறிவிப்பை பொருட்படுத்தாமல் நமது சின்னம் விசில் என்ற முத்திரையை அச்சிட்டு விதிமுறைகளை த.வெ.கவினர் மீறியதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். இதுசம்பந்தமாக பழனி…
கோட்டார்–மணக்குடி சாலை அவசர திருத்தம் : மாவட்ட நிர்வாகத்திற்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் முஜீப் ரஹ்மான் கண்டனம்.
கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பல சாலைகள் குண்டும் குழியுமாக இருந்து, கடுமையாக சேதமடைந்துள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் தினமும் அவதியுறுகின்றனர். இந்த நிலைமை குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கும், குறிப்பாக மாவட்ட ஆட்சியருக்கும் தெரியாதா? அல்லது தெரிந்தும் தெரியாதது போல் அலட்சியம் காட்டப்படுகிறதா? என மனிதநேய ஜனநாயக கட்சி கேள்வி எழுப்புகிறது. தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, முதலமைச்சர் பயணம்…
அதிமுக அரசின் அல்லி ராணியான கோமளவள்ளியின் மூடநம்பிக்கை!…
தமிழ்நாட்டை ஆண்டுவிட்டுப்போன அதிமுக அரசின் அல்லி ராணியான கோமளவள்ளியின் மூடநம்பிக்கையான செயலுக்காய், நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை..மனித உயிர்களை படுகொலை செய்த வரலாற்று துக்கத்தை..கருப்பு நாளைப்பற்றி பேசியே ஆகவேண்டும் இன்று. 18.02.1992. கால் நூற்றாண்டுக்கு முன், இதே தேதியில்.. கும்பகோணம் கும்பேசுவரர் கோவிலில் 12 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகம் விழா. கோவிலின் குளத்தில் நீராடினால் பாவங்கள் விலகுமென்று திரண்டுவந்த மக்களுக்கு..தங்களில் நூற்றுக்கு மேற்பட்டவர்களுக்கு அதுதான் இறுதி நாளென்பது தெரியாது. ராஜீவ் படுகொலை தந்த பரிசால் ..முதன்முறையாக…
பழனி கோட்டம் கால்நடை பராமரிப்பு துறை சார்பாக நவீன தொழில் நுட்ப பயிற்சி.
தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு துறை சார்பாக திண்டுக்கல் மாவட்டம் பழனி கோட்டம் சார்பில் பழனி ஒன்றியத்தில் உள்ள கால்நடை விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பில் தற்போதைய முன்னேற்றம் மற்றும் நவீன தொழில் நுட்ப பயிற்சி நெய்காரபட்டி கால்நடை மருந்தகத்தில் இன்று 18-2-26 அன்று உதவி இயக்குனர் கால் நடை பராமரிப்பு துறை பழனி கோட்டம் தலைமையில் மற்றும் கால்நடை உதவி மருத்துவர் மரு.கார்த்திகேயன்,மரு.செந்தில் குமார் மரு.கௌசல்யா,மரு நந்த குமார் கலந்து கொண்டு கால்நடை களுக்கு தொழில் நுட்ப…
புதிய மாவட்டச் செயலாளர் மற்றும் மாவட்ட துணைச் செயலாளர் அறிமுகக் கூட்டம் – அமைப்பு பலப்படுத்த தீர்மானம்.
நாகர்கோவில்; 18 விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதி மாவட்ட செயலாளர் சௌத்ரி மற்றும் மாவட்ட துணை செயலாளர் ஷேக் முகமது ஆகியோரின் அறிமுகக் கூட்டம் நேற்று மாலை ப்ளூ ரெசிடென்சி ஹோட்டலில் நடைபெற்றது. கன்னியாகுமரி–நாகர்கோவில் மண்டல துணை செயலாளர் சிறுத்தை தாஸ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கட்சியின் கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி நடவடிக்கைகள் குறித்து விரிவான ஆலோசனைகள் இடம்பெற்றன. கருத்தியல் பரப்புரை மாநில துணை செயலாளர் கோட்டார் யூசுப், மாவட்ட செயலாளர்…
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்திட்ட உதவிகளை உடனடியாக வழங்க வேண்டும் – அதிகாரிகளுக்கு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் உத்தரவு…
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் குறள் கூட்டரங்கில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் மாவட்ட அளவிலான வன்கொடுமை தடுப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டதுடன், ஆதிதிராவிடர் நலக்குழு மற்றும் மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றுதல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர்களின் கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களால் விளக்கமளிக்கப்பட்டது….
நாகர்கோவில் அருகே மனநிலை பாதித்த யாசகர் மீட்பு.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் சாலையோரத்தில் யாசகம் செய்து கொண்டு இருந்த ஒருவரை கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையின் ‘நிமிர்’ மீட்புக் குழுவினர் ஒன்றிணைவோம் அறக்கட்டளை, நாம் ஒருவர் அறக்கட்டளை மற்றும் அவர் பவுண்டேஷன் இணைந்து மீட்டனர். சில ஆண்டுகளாக நாகர்கோவில் நகரில் சுற்றித் திரிந்து யாசகம் செய்து வந்ததாகக் கூறப்படும் இவர் குறித்து பொதுமக்கள் தகவல் அளித்தனர். இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் IPS அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், ‘நிமிர்’…
