Headlines
புழல் பகுதியில் ரியல் எஸ்டேட் அலுவலக திறப்பு விழா

புழல் பகுதியில் ரியல் எஸ்டேட் அலுவலக திறப்பு விழா

பெருநகர சென்னை மாநகராட்சி, புழல் லட்சுமி அம்மன் கோயில் தெருவில் முனிஸ்வரர் ரீயல் எஸ்டேட் அலுவலகத்தின் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. 24வது வட்ட துணைச்செயலாளர் அந்தோணி அவர்களின் ஏற்பாட்டில் 24வது வட்ட திமுக செயலாளர் புழல் சுந்தரேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திறந்து வைத்தார். இந்நிகழ்வில் அகிலா அந்தோணி, சிஜெ ரவி, குணாநீதி, நாகராஜன், கேபிஎஸ் அன்பரசு, மற்றும் பலர் உடனிருந்தனர்.

Read More
வாணியம்பாடியில் நகைக்கடை உரிமையாளர் கடன் தொல்லையால் தூக்கிட்டு தற்கொலை.

வாணியம்பாடியில் நகைக்கடை உரிமையாளர் கடன் தொல்லையால் தூக்கிட்டு தற்கொலை.

வாணியம்பாடி,அக்.21- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மிட்னாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் நகைக்கடை அதிபர் தினகரன் (47). இவருக்கு கோமதி என்ற மனைவியும், இரண்டு மகன்கள் உள்ள நிலையில் இவர் வாணியம்பாடி சி.எல் சாலையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக லட்சுமி ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் இவர் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் அதிகமாக கடன் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.இவருக்கு கடன் சுமை அதிகமானதால் ஏற்கனவே கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மனமுடைந்து தற்கொலைக்கு…

Read More
திருப்பத்தூர் அருகே பேக்கரி கடையில் மைக்ரோவேவ் ஓவனில் மின்சாரம் தாக்கி கூலித்தொழிலாளி உயிரிழப்பு.

திருப்பத்தூர் அருகே பேக்கரி கடையில் மைக்ரோவேவ் ஓவனில் மின்சாரம் தாக்கி கூலித்தொழிலாளி உயிரிழப்பு.

வாணியம்பாடி, அக்.20- திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சின்ன கடை தெருவில் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் (28)என்பவர் சொந்தமாக நீல்கிரீஸ் பேக்கரி கடையை நடத்தி வருகிறார். இந்த பேக்கரி கடையில் திருப்பத்தூர் அடுத்த புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சேகர் வயது (32) என்பவர் கடந்த ஆறு மாதமாக வேலை செய்து வருகிறார் இந்த நிலையில் இன்று மைக்ரோவேவ் ஓவனிலிருந்து பப்ஸ் எடுக்கும்போது திடீரென மின்சாரம் தாக்கி கீழே விழுந்துள்ளார். பின்னர் அங்கிருந்தவர்கள் இவரை…

Read More
திண்டுக்கல்லில்,யுனிமணி பைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட்டின் 312 வது கிளையை இந்தியாவின் யுனிமணி இயக்குனர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் கிருஷ்ணன் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது, தமிழ்நாட்டில் 63 வது மற்றும் இந்தியாவில் 312 வது கிளையை திறப்பது எங்களுக்கு பெருமையான தருணம்.இந்தியா முழுவதும் உள்ள சமூகங்களுக்கு நிதி சேவைகளை இன்னும் அணுகக் கூடியதாக மாற்றுவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது. திண்டுக்கல் அதன் துடிப்பான கலாச்சாரம், மற்றும் செழிப்பான பொருளாதாரத்திற்கு பெயர் பெற்றது.மேலும் அந்நிய செலாவணி சேவைகள், தங்க கடன்கள் அல்லது சுற்றுலா மற்றும் விடுமுறைகள் மூலமாக இருந்தாலும்,தொழில் முறை மற்றும் கவனிப்புடன் உங்கள் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்ய நாங்கள் அர்ப்பணித்துள்ளோம்.இந்த புதிய கிளையானது,இந்த பகுதியின் வளர்ச்சியில் எங்கள் வலுவான நம்பிக்கையை குறிக்கிறது.மேலும் சமூகத்திற்கு சேவை செய்யவும் திண்டுக்கல் மக்களுடன் இணைந்து வளரவும், நாங்கள் எதிர் நோக்குகிறோம்.தொடக்க விழா உடன் தொடர்புடைய சி.எஸ்.ஆர் முன் முயற்சிகளின் ஒரு பகுதியாக யுனிமணி திண்டுக்கல் நகர்ப்புற வீடற்றவர்களுக்கான தங்குமிடத்திற்கு மின்விசிறிகள், மற்றும் இரும்பு கட்டில்கள், திண்டுக்கல் நேருஜி நினைவு மாநகரவை மேல்நிலைப் பள்ளிக்கு தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஆகியவை வழங்குகிறோம்.இது போன்ற சமூக சேவைகளை இந்தியா முழுவதும் தொடர்ந்து செய்து வருவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். வாடிக்கையாளர்கள் அனைவரும் எங்கள் நிறுவனத்திற்கு தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும். இவ்வாறு கூறினார். இந்த திறப்பு விழாவில் யுனிமணி தலைமை குழு மனோஜ் வி மேத்யூ, சதீஷ்குமார்,ரதீஷ் மற்றும் தேசிய வணிக தலைவர்கள் பிரகாஷ் பாஸ்கர், (அன்னிய செலாவணி), ஜான் ஜார்ஜ் (பயணம் மற்றும் விடுமுறைகள்) டைட்டஸ் (தங்க கடன்) மண்டல தலைவர்கள் கார்த்திகேயன் (தமிழ்நாடு தெற்கு), காஜா மைதீன்( மதுரை)ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். நிறைவில் கிளைத் தலைவர் தியாகராஜன் முனியாண்டி நன்றி கூறினார். இதில் வாடிக்கையாளர்கள், பல்வேறு நிறுவனங்களின் பிரதிநிதிகள், நிர்வாக அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல்லில், யுனிமணி பைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் திறப்பு விழா.

திண்டுக்கல்லில்,யுனிமணி பைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட்டின் 312 வது கிளையை இந்தியாவின் யுனிமணி இயக்குனர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் கிருஷ்ணன் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது, தமிழ்நாட்டில் 63 வது மற்றும் இந்தியாவில்312 வது கிளையை திறப்பது எங்களுக்கு பெருமையான தருணம்.இந்தியா முழுவதும் உள்ள சமூகங்களுக்கு நிதி சேவைகளை இன்னும் அணுகக் கூடியதாக மாற்றுவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது. திண்டுக்கல் அதன் துடிப்பான கலாச்சாரம், மற்றும் செழிப்பான பொருளாதாரத்திற்கு பெயர் பெற்றது.மேலும்…

Read More
கொலை மிரட்டல் பழனியில் அகில இந்திய பார்வர்டுபிளாக் கட்சியினர் பரபரப்பு புகார்!

கொலை மிரட்டல் பழனியில் அகில இந்திய பார்வர்டுபிளாக் கட்சியினர் பரபரப்பு புகார்!

முன்னாள் எம்எல்ஏவுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்களை கைது செய்யக்கோரி பழனி துணை காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு. திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் திண்டுக்கல் மேற்கு மாவட்ட பொறுப்பாளராக ஆண்டிச்சாமி என்ற ராஜேஷ் பொறுப்பு வகித்து வருகிறார். முன்னதாக இவர் பழனி காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளார் ,அதில் கூறியிருப்பதாவது .. அகில இந்திய பார்வர்ட் பிளாக் பொறுப்பாளர் திருப்பூர் கர்ணன் என்பவர் சில மாதங்களுக்கு முன்பு கட்சியிலிருந்து…

Read More
ஆம்பூர் அருகே முன்னாள் சென்ற கார் மீது மோதாமல் இருக்க கண்டெய்னர் லாரி பிரேக் போட்டதால், கண்டெய்னர் லாரி மற்றும் மொரம்பு ஏற்றி வந்த லாரிகள் அடுத்தடுத்து மோதி தேசிய நெடுஞ்சாலையில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து. போக்குவரத்து பாதிப்பு.

ஆம்பூர் அருகே முன்னாள் சென்ற கார் மீது மோதாமல் இருக்க கண்டெய்னர் லாரி பிரேக் போட்டதால், கண்டெய்னர் லாரி மற்றும் மொரம்பு ஏற்றி வந்த லாரிகள் அடுத்தடுத்து மோதி தேசிய நெடுஞ்சாலையில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து. போக்குவரத்து பாதிப்பு.

வாணியம்பாடி, அக்.19- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் பகுதியில் ஆம்பூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற கண்டைனர் லாரி முன்னாள் சென்ற கார் மீது மோதாமல் இருக்க பிரேக் போட்டதால் பின்னால் கதவாளம் பகுதியில் இருந்து மொரம்பு மண் ஏற்றிக்கொண்டு மாதனூர் நோக்கி சென்ற லாரி அடுத்தடுத்து மோதி கொண்ட விபத்தில் கன்டெய்னர் லாரி பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையிலும், மொரம்பு மண் ஏற்றி வந்த லாரி எதிர் திசையில் சென்று சென்னை பெங்களூர் தேசிய…

Read More
பழனியில் பழங்குடியினர் சாதிச் சான்று வழங்கக்கோரி சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பளியர் இன மக்கள் !...

பழனியில் பழங்குடியினர் சாதிச் சான்று வழங்கக்கோரி சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பளியர் இன மக்கள் !…

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த குதிரையாறு அணை மற்றும் புளியம்பட்டி ஆகிய மலை கிராமங்களில் இருந்து மாணவ மாணவிகள் பெற்றோர்கள் சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றன தொடர்ந்து மலை கிராமங்களில் வசித்து வரும் பொது மக்களுக்கும்பள்ளி மாணவ மாணவிகளுக்கும் வருவாய்த் துறையின் மூலம் பளியர் இன சாதி சான்று வழங்க வேண்டும் என்று பலமுறை விண்ணப்பம் செய்து தொடர்ந்து வருவாய் துறையினர் விண்ணப்பங்களை நிராகரித்து வருகின்றனர். இதனால் பள்ளிகளில் மாணவ மாணவிகள் படிக்க முடியாமல்…

Read More
பழனி அருகே உள்ள அ.கலையம்புத்தூர் கிராம நிர்வாக அலுவலகத்தின் அவல நிலை!

பழனி அருகே உள்ள அ.கலையம்புத்தூர் கிராம நிர்வாக அலுவலகத்தின் அவல நிலை!

பழனியருகே அ. கலையம்புத்தூர் கிராம நிர்வாக அலுவலகம் மேற்கூரை மிகவும் சேதம் அடைந்து உள்ளது. இதனால் புகார் கொடுக்க வரும் பொதுமக்களுக்கும் கிராம நிர்வாக அலுவலர் அவர்களுக்கும் தகுந்த பாதுகாப்பு இல்லாமல் எந்த நேரத்தில் மேற்கூரையில் உள்ள ஓடுகள் உடைந்து மேலே விழும் என்ற உயிர் பயத்தின் அச்சத்தில் இருக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை.

Read More
காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.

காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அடுத்துள்ள காரத்தொழுவு கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுமார் 750க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை அன்று பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.விழாவிற்கு தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். ஆசிரியர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் முதல் பருவத்தேர்வு, காலாண்டு தேர்வில் சிறப்பாக தேர்வு எழுதிய மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளியின் ஆசிரியர் சையது முகமது குலாம்தஸ்தகிர்…

Read More
பழனி அருகே அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்தவர் கைது.

பழனி அருகே அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்தவர் கைது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள கீரனூர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது . இதன் அடிப்படையில் பழனி காவல் துணை கண்காணிப்பாளர் தனஞ்ஜெயன் உத்தரவின் பெயரில் ,கீரனூர் காவல் ஆய்வாளர் ரமேஷ் குமார், தலைமையிலான காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது கோதை மங்கலத்தைச் சேர்ந்த அம்ஜத் கானிடமிருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 16 கிலோ அளவுள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும்…

Read More