தமிழ்நாடு
திருநெல்வேலியில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் நேரடியாக பங்கேற்று, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சித்தலைவர்!
திருநெல்வேலி, நவ.4:- திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், இன்று [நவ.9] மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கா.ப.கார்த்திகேயன் தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில், பொதுமக்களின் கோரிக்கையின் தன்மைக்கேற்ப, மனுக்கள் பதிவு செய்யப்பட்டதோடு, அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அளிக்கும் வகையிலும், முக்கிய கோரிக்கைகள் மற்றும் பொதுப்பிரச்சனைகள் தொடர்பான மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட வருவாய் ஆலுவலரிடம்?அளிப்பதற்கான வசதிகளும், செய்யப்பட்டிருந்தன. மேலும்…
உளுந்தூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பு 12ஆம் வகுப்பு 144 மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதி வண்டியினை உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் வழங்கினார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 144 மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு உளுந்தூர்பேட்டை சட்டமன் உறுப்பினர் மணிகண்ணன் தலைமை தாங்கி 144 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கி சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் உளுந்தூர்பேட்டை நகர மன்ற தலைவர் திருநாவுக்கரசு துணை தலைவர் வைத்தியநாதன் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் டேனியல் ராஜ், துணைத் தலைவர் பிரகாஷ், பொருளாளர் ரவி, நகர மன்ற உறுப்பினர்…
உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி 2024-25 ஆம் ஆண்டுக்கான கலை திருவிழா வட்டார நிகழ்ச்சி நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் நடைபெற்ற 2024 -2025 ஆண்டிற்கான கலைத் திருவிழா வட்டார நிகழ்ச்சியில் உளுந்தூர்பேட்டை தொகுதியை சார்ந்த அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் இருந்து ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு மாணவ மாணவிகளின் கலை, மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வட்டார வளமையம் மேற்பார்வையாளர் சக்திவேல் வரவேற்பு உரையாற்றினார் சிறப்பு விருந்தினராக உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கணன் அவர்கள் கலந்துகொண்டு…
பழனியை அடுத்துள்ள காவலபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பொந்துபுளி கிராமம் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கியது!
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்துள்ள காவலப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பொந்துபுளி கிராமத்தில் கடந்த மூன்று நாட்களாக மின்விநியோகம் இல்லாததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுசம்பந்தமாக சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்த நிலையில் கிராம பொதுமக்கள் சார்பாக மின்வாரிய உதவி செயற்பொறியாளரிடம் நேரில் வந்து புகார் அளித்தால் மட்டுமே மின்விநியோகம் தடைபட்டுள்ளதை சரிசெய்ய முடியும் என்பதாக கூறியுள்ளனர். SS2 டிரான்ஸ்பார்மர் முழுவதுமாக பழுதடைந்துள்ளதை சீரமைத்து தர கோரி பொதுமக்கள் கடந்த சில நாட்களாக கூறிவந்த நிலையில் மின்வாரிய…
ரங்கப்பனூர் வட்டம் மல்லாபுரம் ஊராட்சியில் பணிபுரியும் அனைவருக்கும் தீபாவளி பரிசு தொகுப்பினை ஊராட்சி மன்ற தலைவர் வழங்கினார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் ரங்கப்பனூர் மல்லாபுரம் ஊராட்சியில் ரிஷிவந்தியம் சட்ட மன்ற உறுப்பினர் வசந்தம்கார்த்திகேயன் ஆலோசனைப்படி ரங்கப்பனூர் மல்லாபுரம் ஊராட்சியில் பணிபுரியும் அனைவருக்கும் ஊராட்சி மன்ற தலைவர் அர்ச்சனா காமராஜ் தீபாவளி தொகுப்பு பரிசினை வழகினார் இதில் ஒன்றிய கவுன்சிலர் வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி செயலர் பத்திரிக்கை நண்பர்கள் கணினி இயக்குனர் அரசு ஒப்பந்ததாரர் மற்றும் பணித்தள பொறுப்பாளர்கள் துப்புரவு பணியாளர்கள் தூய்மை காவலர் டேங்க் ஆப்ரேட்டர்கள் அனைவருக்கும் தீபாவளி தொகுப்பு பரிசினை பட்டாசு பாக்ஸ்…
நடப்புப் பிசானப்பருவ சாகுபடிக்காக, திருநெல்வேலி மாவட்டத்தில், பாபனாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு ஆகிய, 3 அணைகளில் இருந்து, ஒரே நேரத்தில் தண்ணீர் திறப்பு! தமிழக சபாநாயகர் அப்பாவு, திறந்து வைத்தார்!
திருநெல்வேலி, அக்.28:-திருநெல்வேலி மாவட்டத்தின் பிரதான அணைகளான பாபனாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு ஆகிய 3 அணைகளில் இருந்தும், இன்று [அக்.28] காலையில் ஒரேநேரத்தில், நடப்புப் பிசானப்பருவ சாகுபடிக்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. தமிழக சட்டமன்ற பேரவைத்தலைவர் [சபாநாயகர்] மு.அப்பாவு, சிறப்புப் பூஜைகளுக்குப் பின்னர், இந்த அணைகளில் இருந்து முறைப்படி தண்ணீரை, திறந்து வைத்தார். இந்த அணைகளின் கீழுள்ள, வடக்குக் கோடை மேல் அழகியான், தெற்கு கோடை மேல் அழகியான், நதியுண்ணி, கன்னடியன், திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டை ஆகிய 7…
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின், 31-வது பட்டமளிப்பு விழா! தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேரடியாக பங்கேற்று, பட்டங்களை வழங்கினார்! தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் புறக்கணிப்பு!
திருநெல்வேலி – அக்.26 : திருநெல்வேலி “மனோன்மணியம்” சுந்தரனார் பல்கலைக்கழகத்தின், 3-வது பட்டமளிப்பு விழா, திருநெல்வேலி அபிஷேகப்பட்டியில் உள்ள, பல்கலைகழக வளாகத்தில் அமைந்துள்ள, வ.உ.சிதம்பரனார் கலையரங்கில், இன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது. இந்த விழாவில், பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்நாடு ஆளுநருமான ஆர்.என். ரவி, நேரடியாக பங்கேற்று, “தங்கப்பதக்கம்” பெற்ற 14 ஆண்கள், 97 பெண்கள் என, 111 பேர்களுக்கும், “முனைவர்” பட்டம் பெற்ற 83 ஆண்கள், 377 பெண்கள் என,460 பேர்களுக்குமாக, மொத்தம் 571 பேர்களுக்கு,…
சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த, திருநெல்வேலி வீரவநல்லூர் காவல் உதவி ஆய்வாளர் சுப்பையா !
சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்து, திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் மூளைச்சாவு அடைந்த, திருநெல்வேலி வீரவநல்லூர் காவல் உதவி ஆய்வாளர் சுப்பையாவின் உடல் உறுப்புகள், திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், இன்று [அக்.26] தானமாகப் பெறப்பட்டன. அதனைத் தொடர்ந்து, திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மற்றும் மருத்துவமனை தலைவர் டாக்டர்.C.ரேவதிபாலன் தலைமையில், சுப்பையாவின் உடலுக்கு, அரசு மரியாதை செலுத்தப்பட்டது. திருநெல்வேலி செய்தியாளர் : மேலப்பாளையம் ஹஸன்.
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய 03 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1,05,000/- அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023-ஆம் ஆண்டு 16 வயது சிறுமியை காதலித்து ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முசுவனூத்து பகுதியைச் சேர்ந்த அழகர்சாமி(23) என்பவரை நிலக்கோட்டை காவல் நிலைய போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்…
தமிழக அரசின், “விலையில்லா மிதிவண்டிகள்” வழங்கும் நிகழ்ச்சி, திருநெல்வேலியை அடுத்துள்ள, மேலப்பாளையம் “முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில்” நடைபெற்றது.
தமிழக அரசின், “விலையில்லா மிதிவண்டிகள்” வழங்கும் நிகழ்ச்சி, திருநெல்வேலியை அடுத்துள்ள, மேலப்பாளையம் “முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில்” வைத்து, வியாழக்கிழமை [அக்.24] மாலையில், நடைபெற்றது. முஸ்லிம் கல்வி கமிட்டி செயலாளர் மீரான் முகைதீன் தலைமை வகித்தார். முஸ்லிம் கல்வி கமிட்டி பொருளாளர் அப்துல் மஜீத், அனைவரையும் வரவேற்று பேசினார்.முஸ்லிம் கல்வி கமிட்டி தலைவர் அப்துல் காதர், முஸ்லீம் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மீரா முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். “சிறப்பு” அழைப்பாளராக, பாளையங்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல்…
