தமிழ்நாடு
ஆலங்குளம் அருகே திருநங்கையின் ஆணுறுப்பை அறுத்து கொலை! இரண்டு திருநங்கைகள் கைது.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே திருநங்கையின் ஆணுறுப்பை அறுத்ததால் ஒரு திருநங்கை உயிரிழந்தார். இது தொடர்பாக இரண்டு திருநங்கைகளை போலீசார் கைது செய்தனர். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள பறும்புநகர் பகுதியில் சுமார் 15 திருநங்கைகள் ஒரே வாடகை வீட்டில் தங்கி வருகின்றனர். இன்று காலையில் அந்த வீட்டில் ரத்தவெள்ளத்தில் ஒரு திருநங்கை இறந்து கிடப்பதாக ஆலங்குளம் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவல் அறிந்து விரைந்து சென்ற ஆலங்குளம் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை…
ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி கட்டுமான பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் மேல் பக்கத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் வீட்டு வசதி மேம்பாட்டு கழகம் சார்பில் ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி கட்டுமான பணியை மாண்புமிகு வனம் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் மேல் பார்வையில் தமிழ்நாடு சட்டமன் பேரவை பொது நிறுவனங்கள் குழு த் தலைவர்..திரு.A.P. நந்தகுமார் அவர்கள் மற்றும் குழு உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்.திரு.ழு.பெ.கி.ரி. அவர்கள் செங்கம்.திரு. துரை. சந்திரசேகரன் அவர்கள் பொன்னேரி.திரு.ம. சிந்தனைச் செல்வன் அவர்கள்…
நீலகிரி மாவட்டத்திற்கு ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வருகை தருவதை முன்னிட்டு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
நீலகிரி மாவட்டத்திற்கு ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வருகை தருவதை முன்னிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஆ இராசா மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு முன்னிலையில் ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது நீலகிரி மாவட்ட வளர்ச்சி திட்டங்கள் மற்றும் பல்வேறு புதிய அறிவிப்புகளை அறிவிக்கவும், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை திறந்து வைக்கவும், ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்க ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் உதகைக்கு வருகை…
கோவை மாநகராட்சி 80வது வார்டில் புதிதாக நவீன பொது கழிப்பிடம் கட்டும் பணியினை மாநகராட்சி பொது சுகாதாரக்குழு தலைவர் பெ.மாரிச்செல்வன் துவக்கி வைத்தார்.
கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 80வது வார்டிற்கு உட்பட்ட உப்புமண்டி பகுதியில் ரூ30 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக நவீன பொது கழிப்பிடம் கட்டும் பணியினை மாநகராட்சி பொது சுகாதாரக்குழு தலைவர் பெ.மாரிச்செல்வன் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் உதவி பொறியாளர் மரகதம், சுகாதார ஆய்வாளர் தனபால், வார்டு செயலாளர் நா.தங்கவேலன், பகுதி துணை செயலாளர் என்.ஜெ.முருகேசன், மற்றும் கழக நிர்வாகிகள் மகளிர் அணியினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கடையநல்லூர் காவல் நிலையத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தென்காசி மாவட்ட எக்ஸ்நோரா அமைப்பின் சார்பில் தொடர்ந்து பல ஆண்டுகளாக நாடு முழுவதும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை தொடர்ந்து செய்து வருகிறார்கள். அதன்படி தென்காசி மாவட்டம் கடைய நல்லூர் காவல்நிலைய வளாகத்தில் எக்ஸ்நோரா அமைப்பின் சார்பில் மரக்கன்றுகள்நடப்பட்டது. கடையநல்லூர் காவல் நிலைய வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட எக்ஸ்நோரா அமைப்பின் மாவட்ட செயலாளர் ப. சங்கரநாராயணன் தலைமையில் கடையநல்லூர் காவல்…
கொட்டாகுளத்தில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை வீடுவீடாக கேக் பாக்ஸ் வழங்கி தொண்டரணி கொண்டாடினர்.
தென்காசி தெற்கு மாவட்டம் கொட்டா குளம் பகுதியில் மாவட்ட திமுக தொண்டரணி சார்பில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு க ஸ்டாலின் 72 வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. தென்காசி மேற்கு ஒன்றியம் கொட்டாகுளம் பகுதியில் நடைபெற்ற தமிழக முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் 72 வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சிக்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக தொண்டரணி அமைப்பாளர் கொட்டாகுளம் இ.இசக்கி பாண்டியன் தலைமை தாங்கினார். தென்காசி தெற்கு மாவட்ட திமுக தொண்டரணி துணை அமைப்பாளர்கள் குற்றாலம்…
கோவையில் ஆதித்யா பிர்லா குழுமத்தின் அல்ட்ராடெக் குடும்ப சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவை ஆதித்யா பிர்லா குழுமத்தின் அல்ட்ராடெக் குடும்ப சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கடந்த வருடம் 10 மற்றும் 12ம் வகுப்பில் சிறந்த மதிப்பெண் எடுத்த கட்டுமான தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு பரிசுகளும் ஊக்கதொகையும் வழங்கப்பட்டது.
தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தலைமையில்மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர். தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து, மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் மூலம் உதவி உபகரணங்கள் வழங்கும்திட்டத்தின் கீழ் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.8.500/- வீதம் ரூ.85,000/- மதிப்பிலான செயற்கை கால்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், வழங்கினார். மேலும் இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா. முதியோர் உதவித்தொகை. அடிப்படை வசதிகள்…
குத்தப்பாஞ்சான் ஊராட்சியில் நியா விலை கடை மற்றும் கிராம நிர்வாக அலுவலகத்தை தமிழக அரசு கட்டி தர கோரிக்கை.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் குத்தப்பாஞ்சான் ஊராட்சியில் . குத்தப்பாஞ்சான், பகுதியில் சுமார் 350 வீடுகள் உள்ளன. இங்கு நியாய விலை கடை மற்றும் கிராம நிர்வாக அலுவலகம் பழுதடைந்து கீழ விழம் தருவாயில் மிக மோசமான நிலையில் உள்ளதால் தற்ப் போது வாடகை கட்டத்தில் நியாய விலை கடை மற்றும் கிராம நிர்வாக அலுவலகம் இயங்கி வருகிறது. அதனை தமிழக அரசு கட்டிடம் கட்டி தர வேண்டுமென அப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.
தென்காசி மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம் முன்பு திராவிட தமிழர் கட்சி சார்பில்ஆர்ப்பாட்டம்.
தென்காசி மாவட்டத்திற்குட்பட்ட ரெங்கநாதபுரம் வென்றிலிங்கபுரம் ஆகிய இரு கிராமங்களில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட அருந்ததியர் இன மக்கள் சுடுகாடு, தண்ணீர் மற்றும் அடிப்படை தேவை வேண்டி திராவிடத் தமிழர் கட்சி சார்பில் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. மாவட்டத் தலைவர் லெட்சுமணன் தலைமையில் மாவட்ட செயலாளர் சங்கை மதன் முன்னிலை வகித்தனர் திராவிடத் தமிழர் கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் சங்கை மதன் கூறும் போது ;-இந்தியா சுதந்திரம் வாங்கி 78 ஆண்டு காலம்…
