தமிழ்நாடு
பழனியில் அப்துல் கலாம் 93 வது பிறந்த நாளை முன்னிட்டு நம்பிக்கை சிறகுகள் அறக்கட்டளை சார்பாக மரம் நடு விழா…
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நம்பிக்கை சிறகுகள் அறக்கட்டளை சார்பாக முன்னாள் குடியரசுத் தலைவர் APJ அப்துல் கலாமின் 93வது பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றன. தொடர்ந்து பேருந்து நிலையத்திலிருந்து இரயில்வே நிலையம் வரை 200 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றன. இந்நிகழ்வில் நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி வனிகர் சங்க மாவட்ட தலைவர் ஜே பி சரவணன், சரவனபொய்கை கந்தவிலாஸ் பாஸ்கரன், மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் மற்றும் நம்பிக்கை சிறகுகள் அறக்கட்டளை…
கள்ளக்குறிச்சி மாவட்ட மரவள்ளி கிழங்கு பயிரிடும் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மரவள்ளி கிழங்கு கொள்முதல் விலையை குறைத்து இருப்பதை கண்டித்தும், மரவள்ளி கிழங்குக்கு நியாயமான விலை கிடைத்திடவும், கள்ளக்குறிச்சியில் சேகோ பேக்டரி அமைத்து தரக்கோரியும் மனு அளித்தனர். மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஒரு பாயிண்ட்டுக்கு ரூபாய் 350 முதல் 400 வரை நிர்ணயிக்கப்பட்டு, ஒரு டன் கிடங்கு கொள்முதல் பத்தாயிரம் முதல் 12 ஆயிரம் வரை பெற்று வந்தனர் . இந்த நிலையில் தற்போது ஒரு பாயின்டின் விலை…
திருப்பத்தூர் மாவட்ட அரசு காஜியாக மௌலவி. சையத் அப்துல் ரஹ்மான் மாதனி அவர்கள் தேர்வு.
திருப்பத்தூர் மாவட்ட அரசு காஜியாக மௌலவி. சையத் அப்துல் ரஹ்மான் மாதனி அவர்களை தமிழக அரசு G.O. (D). 59/2024 ன்படி தேர்வு செய்துள்ளது அதனை தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சி தலைவர் திரு.க.தர்ப்பகராஜ்.இ.ஆ.ப., அவர்களை மாவட்ட அரசு காஜி மௌலவி. சையத் அப்துல் ரஹ்மான் மாதனி அவர்கள் மரியாதை நிமித்தமாக காஜி கமிட்டி குழுவுடன் சந்தித்து சால்வை போர்த்தி நினைவாக தமிழ் குர்ஆன் வழங்கினார் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மாவட்ட அரசு காஜி…
வியக்க வைக்கும் மாமனிதர் சந்திரசேகர்.
தென்காசி மாவட்டம் முக்கூடலைச் சேர்ந்தவர் சந்திரசேகர். சமூக ஆர்வலரான இவர் பனை விதை நடும் நிகழ்வில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு இதுவரை தம் சொந்த முயற்சியில் 1 லட்சத்து 50 ஆயிரம் பனை விதைகளை நட்டுள்ளார். எவ்விதமான உதவியும் எதிர்பார்த்து செய்யாமல் தனது மன மகிழ்விற்காக இப்பணிகளை செய்து வருகிறேன் என்று கூறி வரும் இவர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறார் பனை விதை நடுதலில் அவரின் ஆர்வம் காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது பொதுமக்களின் நலனுக்காக பனைமரம்…
பழனி மலைக்கோவிலுக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சாமி தரிசனம்.
பழனி மலைக்கோவிலுக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். அதேபோல பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜனும் வருகை புரிந்தார். தனித்தனியாக வந்த இருவரும் மலைக்கோவிலுக்கு மேலே சென்று சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து தமிழிசை சௌந்தரராஜன் பழனியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :- விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாத தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய், விஜயதசமிக்கு வாழ்த்து சொன்னது வரவேற்கத்தக்கது. இந்து மக்கள்…
பழனியில் நம்பிக்கை சிறகுகள் அறக்கட்டளை சார்பாக விருதுகள் வழங்கும் விழா..
திண்டுக்கல் மாவட்டம் பழனி இரயிலடி சாலையில் உள்ள தனியார் திருமண மஹாலில் நம்பிக்கை சிறகுகள் அறக்கட்டளை சார்பாக உணவு ஊட்டும் விவசாயத்துக்கு உயிரூட்டுவோம் என்ற தலைப்பில் விவசாய பெருமகனார்களுக்கு விருதுகள் வழங்கும் விழா நிகழ்ச்சி நடைபெற்றன. தொடர்ந்து இந்நிகழ்வில் விவசாய தொழில் செய்து வரும் அனைத்து விவசாயிகளையும் பெருமைப்படுத்தும் விதமாக பொன்னாடை போர்த்தி கேடயம் வழங்கி கௌரவப்படுத்தினர். மேலும் இவ்விழாவின் சிறப்பு அழைப்பாளராக தமிழக திரைப்படத்துறை நகைச்சுவை நடிகர் தாமு கலந்து கொண்டு விவசாயத்தைப் பற்றியும் விவசாயிகள்…
தினபூமி பத்திரிகை உரிமையாளர் சாலை விபத்தில் உயிரிழப்பு!
மதுரை கே.கே.நகரைச் சேர்ந்தவர் மணிமாறன்(65). தினபூமி நாளிதழ் உரிமையாளர். இவரது மகன் ரமேஷ்45). இவர்கள் இருவரும் இன்று திருநெல்வேலியில் இருந்து மதுரைக்கு காரில் சென்றனர். காரை ரமேஷ் ஓட்டினார். நான்குவழிச்சாலையில் நாலாட்டின்புதூர் மேம்பாலத்தை கடந்து வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் நடுவே உள்ள தடுப்பில் மோதி, அதையும் கடந்து எதிர்புறம் உள்ள சாலைக்கு சென்று, எதிரே வந்த சுமை வாகனத்தின் மோதியது. விபத்தில் சம்பவ இடத்திலேயே மணிமாறன் உயிரிழந்தார். தகவல் அறிந்து அங்கு சென்ற நாலாட்டின்புதூர்…
தென்காசி மாவட்டத்தில் வனவிலங்குகள் ஊருக்குள் உலா வருவது வாடிக்கையாகிவிட்டது பொதுமக்கள் அச்சம்!
தென்காசி அக்டோபர் 14-தென்காசி மாவட்டம் கடையம் அடுத்துள்ள கல்யாணிபுரம் பகுதியில் கரடி தாக்கியதில் ராசம்மாள் என்பவர் காயம் அடைந்தார். அதிகாலையில் வீட்டின் அருகே கரடி தாக்கியதில் காயமடைந்தவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். சமீப காலமாக தென்காசி மாவட்ட பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் யானைகள் மற்றும் கரடி சிறுத்தை அடிக்கடி ஊருக்குள் போவது வாடிக்கையாகிவிட்டது யானைகளின் கூட்டம் வடகரை அச்சன்புதூர் மேக்கரை பகுதிகளில் முகாமிட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்ட காவல்துறைசார்பில் 2-வது நாளாக போலீசார் நடத்திய அதிரடி சோதனையில்452 கிலோ குட்கா போதை பொருட்கள் மற்றும் 2 வாகனங்கள் பறிமுதல். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா நடவடிக்கை.
வாணியம்பாடி, அக்.14- திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா உத்தரவின் பேரில் தொடர்ந்து 2-வது நாளாக நேற்று துணை காவல் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் தலைமையில் தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டு பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் உமராபாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேல் சாணங்குப்பம் பகுதியில் பாண்டியன் ( வயது 45) என்பவர் நடத்தி வந்த கடையில் மேற்கொண்ட சோதனையில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 268…
ஆம்பூரில் மனிதநேய மக்கள் கட்சி இளைஞர் அணி சார்பில் போதைக்கு எதிராக இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி.
வாணியம்பாடி, அக்.14- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் மனிதநேய மக்கள் கட்சி இளைஞர் அணி சார்பில் போதைக்கு எதிராக இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணிக்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் முன்னா(எ) பர்க்கத்துல்லா தலைமை வகித்தார். நகர தலைவர் எஸ்.தப்ரேஸ் அஹமத் அனைவரையும் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட தலைவர் வி.ஆர்.நஜீர் அஹமத், இஸ்லாமிய பிரச்சார பேரவை மாநில பொருளாளர் சி.கே.சனாவுல்லா, இளைஞரணி மாநில துணை செயலாளர் இம்ரான் ஆகியோர் கலந்து கொண்டு பேரணியை…
