இதழ்கள்
பராமரிப்பின்றி பழுதடைந்த சமூகக் கழிப்பிடம்: வீணாகும் பொதுமக்களின் வரிப்பணம் – குமாரகோவில் ஊராட்சி நிர்வாகம் மீது புகார்…
கன்னியாகுமரி, பிப் 4:கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் தொகுதிக்குட்பட்ட குமாரகோவில் ஊராட்சியில் பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைக்காகக் கட்டப்பட்ட சமூகக் கழிப்பிடம், தற்போது முறையான பராமரிப்பின்றி முற்றிலும் சிதிலமடைந்து காணப்படுகிறது. கடந்த 2015-2016 ஆம் ஆண்டு தூய்மை இந்தியா திட்டத்தின் (Swachh Bharat Mission) கீழ் சுமார் 4 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இது கட்டப்பட்டது. பயன்பாட்டிற்கு வந்த சில காலத்திலேயே முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால், தற்போது இந்தக் கழிப்பிடம் கடும் சேதமடைந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில்…
பழனியில் காலாவதியான உணவுப்பொருட்கள் விற்பனை! அதிகாரிகள் அலட்சியம்! நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.!
பழனி RF ரோட்டில் செயல்பட்டு வரும் குமரன் பேக்ஸ் அண்ட் ஸ்வீட்ஸ் – ல் விற்பனை செய்யப்படும் பிரட் பாக்கெட்டில் விலை மற்றும் தயாரிப்பு தேதி (expired date) இல்லாமல் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. பழனி நகரம் ஆன்மிக நகரம் என்பதால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகனை தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். பழனியில் உள்ள பேக்கரி , டீ கடைகள் , உணவு விற்பனை செய்யும் உணவகங்கள் என பல இடங்களில் சுகாதாரம் இல்லாமல்…
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று தனி நீதிபதி சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு…
சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இன்று நீதி அரசர் ஜிஆர் சுவாமிநாதன் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் ஆஜராக மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் , மதுரை மாநகர் காவல் ஆணையர் லோகநாதன் மதுரை மாநகர் தெற்கு காவல் துணை ஆணையர் இனிகோ திவ்யன் கோவில் இணை ஆணையர் யக்ஞ நாராயணன் உள்ளிட்டோர் ஆஜராயினர். இதில் ஆஜரான மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற முடியவில்லை. அதற்காக நிபந்தனையற்ற…
மதுரை : ரிசர்வ் லைன் பகுதியில் உள்ள ரவுண்டானாதால் விபத்துகள் மற்றும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது…
மதுரையில் ரிசர்வ் லைன் பகுதியில் உள்ள நான்கு முனை சந்திப்பில் உள்ள மிகப்பெரிய ரவுண்டானத்தால் அப்பகுதியில் போக்குவரத்து நெருக்கடியும் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது சில சமயங்களில் வாகன ஓட்டிகளுக்கு காயங்களும் ஏற்படுகிறது. அப்பகுதி அருகே பள்ளிகள் இருப்பதால் காலையும், மாலையும் பள்ளி வாகனங்கள் செல்வத்தில் மிகவும் சிரமங்கள் ஏற்படுகிறது. குறுகிய சாலையில் மிகப்பெரிய ரவுண்டானம் இருப்பதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும், விபத்துக்களும் ஏற்படுகிறது. ரவுண்டான அளவை குறைக்க வேண்டும் என்று அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும்…
மாணவச் செல்வங்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா…
02-02-2026, கோவை:கோவைமாநகராட்சி மத்திய மண்டலம், 80-வது வார்டுக்கு உட்பட்ட ஒக்கிலியர் காலனி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில், தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் 80-வது வார்டு மாமன்ற உறுப்பினரும், பொது சுகாதாரக் குழுத் தலைவருமான திரு.பெ.மாரிசெல்வன் அவர்கள் கலந்துகொண்டு, மாணவ-மாணவிகளுக்குப் புதிய மிதிவண்டிகளை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில் தமிழக முதல்வர் அவர்களின் பொற்கால ஆட்சியில்,கோவை 80-வது வார்டில் மட்டும் இதுவரை 967 மாணவச் செல்வங்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கியுள்ளது. என்று கோவை…
நாடகம் போடுறாரு ஓபிஎஸ்: ரூம் அரசியல் பண்றாரு நடிகர் விஜய்; ஒரே மைக்கில் 2 பேரையும் பொளந்த செல்லூர் ராஜூ
மதுரை: அறையில் இருந்து கொண்டு விஜய் அரசியல் செய்வதாக செல்லூர் ராஜூ தெரிவித்தார்.* மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பெத்தானியாபுரம் பகுதியில் சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட புதிய ரேஷன் கடையை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று திறந்து வைத்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: நடிகர்கள் வரக்கூடாது என சொல்லவில்லை. ஆனால் களத்திற்கு சென்று மக்களை சந்தித்து மக்களின் அபிமானத்தை பெற வேண்டும். யார் வேண்டுமானால் வரலாம். சகோதரர் விஜய்யை நாங்களாக திட்டவில்லை….
கோவை,கணபதி, ராஜவீதி, பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தின் கட்டணமில்லா வைஃபை வசதி.
கணபதி ராஜவீதி பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பாராளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தின் கட்டணமில்லா வைஃபை வசதி கோவை பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் கோவை மாநகர் மாவட்ட அவை தலைவர் அண்ணன் கணபதி ராஜ்குமார் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. பவன்குமார் க. கிரியபனவர் இ.ஆ.ப, வணக்கத்திற்குரிய கோவை மாநகராட்சி மேயர் திருமதி. ரங்கநாயகி ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையாளர் திரு. சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு….
PSGR கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் இலவச மடிக்கணினிகள் வழங்கும் விழா..
கோவை 10,00,000 மாணவர்கள் பயனடையும் வகையில் திராவிட மாடல் அரசின் கல்வி முன்னேற்றத் திட்டத்தின் கீழ் *மடிக்கணினிகள் வழங்கும் விழா. கோவை PSGR கிருஷ்ணம்மாள் மகளிர்கல்லூரியில் இலவச மடிக்கணினிகள் வழங்கும் விழா நடைபெற்றது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு. க. ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசின் கல்வி கொள்கையை முன்னெடுத்து, இந்நிகழ்வில் கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர் இரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் இணைந்து மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார்கள்….
கட்டுமானப் பணி சுணக்கம்: பொதுமக்கள் குற்றச்சாட்டு!
பத்துகாணி,ஜனவரி 30: கன்னியாகுமரி மாவட்டம் பத்துகாணி பகுதியில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையக் கட்டுமானப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இப்பகுதியில் இயங்கி வந்த பழைய மருத்துவமனைக் கட்டிடம் பழுதடைந்து இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து, அதனை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன. இருப்பினும், இந்தப் பணிகள் முறையாக நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அழுத்தம் கொடுக்கும் காலங்களில் மட்டும் பணிகள்…
மதுரையில் போஸ்டர் யுத்தம்!
மதுரை வடக்கு தொகுதி காங்.,’ என்ற பெயரில், தொகுதி முழுவதும் ‘காங்., வேட்பாளருக்கு ஓட்டளியுங்கள்’ என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இது தி.மு.க.,வினரை கொந்தளிக்க வைத்துள்ளது. மதுரை நகர் காங்., தலைவர் நல்லமணி கூறுகையில், “இந்த போஸ்டருக்கும் நகர் காங்கிரசுக்கும் தொடர்பில்லை” என்றார். தி.மு.க.,வினர் கூறியதாவது: காங்கிரசை தளபதி எம்.எல்.ஏ., விமர்சித்த விவகாரத்தில் கட்சி கட்டுப்பாட்டை மதித்து தி.மு.க.,வினர் அமைதி காக்கின்றனர். ஆனால் எங்களை உசுப்பேத்தும் வகையில் காங்கிரசார் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். தளபதி வீட்டை இளைஞர் காங்.,…
