Headlines
டிஜிட்டல் பரிவர்த்தனையைப் புறக்கணித்த ‘SK பியூல்’ சிஎன்ஜி பெட்ரோல் பங்க்: திண்டுக்கல்லில் வாகன ஓட்டிகள் கடும் அவதி!

டிஜிட்டல் பரிவர்த்தனையைப் புறக்கணித்த ‘SK பியூல்’ சிஎன்ஜி பெட்ரோல் பங்க்: திண்டுக்கல்லில் வாகன ஓட்டிகள் கடும் அவதி!

​திண்டுக்கல்:மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் கூகுள் பே (Google Pay), போன் பே (PhonePe) போன்ற யுபிஐ (UPI) டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன. பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்களுக்குப் பெரும் பயனுள்ளதாக இருக்கும் இத்தகைய டிஜிட்டல் பணப்பரிமாற்ற முறையை, திண்டுக்கல்லில் உள்ள ‘SK பியூல்’ (SK Fuel) சிஎன்ஜி பெட்ரோல் பங்க் நிர்வாகம் முற்றிலுமாகப் புறக்கணித்துள்ளது. பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ​பங்க் மேனேஜருடன் வாக்குவாதம்:இந்த பெட்ரோல் பங்க்கில் டிஜிட்டல்…

Read More
கோவையில் முதலமைச்சர் பிறந்த நாளை ஒட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.

கோவையில் முதலமைச்சர் பிறந்த நாளை ஒட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.

முதலமைச்சர் திரு, ச. ஜோசப்விஜய் அவர்களின், 52- வது பிறந்த நாளை ஒட்டி கோவை மாவட்டம் 35-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் பிற்படுத்தப்பட்டோர் துறை அமைச்சர் திரு. V. சம்பத்குமார் அவர்கள், பள்ளி குழந்தைகளுக்கான நோட் புத்தகங்களையும் துப்புறவு பணியாளர்களுகு, நலத்திட்ட உதவிகளும் வழங்கினார். உடன் வார்டு செயலாளர், திரு,நாராயணன், கட்சி நிர்வாகிகள், மற்றும்பொதுமக்கள்,கலந்து கொண்டனர். கோவை மாவட்ட செய்தியாளர் : சம்பத்குமார்

Read More
சர்வதேச யோகா தினம்: கன்னியாகுமரி ஆயுதப்படை காவலர்களுக்கு சிறப்பு பயிற்சி

சர்வதேச யோகா தினம்: கன்னியாகுமரி ஆயுதப்படை காவலர்களுக்கு சிறப்பு பயிற்சி.

உடல், மனநலத்தை மேம்படுத்தும் நோக்கில் மாவட்ட காவல்துறை முன்னெடுப்பு சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை காவலர்களுக்கு சிறப்பு யோகா பயிற்சி நிகழ்ச்சி சனிக்கிழமை (ஜூன் 20) மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஆர். ஸ்டாலின், ஐபிஎஸ் அவர்களின் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், காவல்துறையினரின் உடல் மற்றும் மனநலத்தை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு யோகாசனங்கள் மற்றும் சுவாசப் பயிற்சிகள் வழங்கப்பட்டன. தினசரி காவல் பணிகளில் நீண்ட…

Read More
உள்ளூர் வேலைவாய்ப்பு கோரி கூடங்குளத்தில் சாலை மறியல்

உள்ளூர் வேலைவாய்ப்பு கோரி கூடங்குளத்தில் சாலை மறியல்.

NPCIL ஆட்சேர்ப்பில் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலைய நுழைவுவாயில் முன்பு, நிரந்தர பணியிடங்களில் உள்ளூர் பகுதி மக்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டி, பொதுமக்கள் இன்று காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் பங்கேற்றவர்கள், அணுமின் நிலையம் அமைந்துள்ள கூடங்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த தகுதியான இளைஞர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு பதிலாக வட மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். அணுமின் நிலையம் செயல்பட்டு…

Read More
717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டும் ஆலன்கோட்டையில் தொடரும் அவலம்? – நடவடிக்கை எடுக்குமா நிர்வாகம்!

717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டும் ஆலன்கோட்டையில் தொடரும் அவலம்? – நடவடிக்கை எடுக்குமா நிர்வாகம்!

பேருந்து நிறுத்தத்தில் போதையில் அநாகரிகமாக கிடக்கும் நபர்கள்; பெண்கள், மாணவிகள் அச்சம் தமிழகத்தில் புதிய ஆட்சியை அமைத்துள்ள முதலமைச்சர் விஜய், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் முதற்கட்டமாக மாநிலம் முழுவதும் 717 அரசு டாஸ்மாக் (TASMAC) மதுபானக் கடைகளை மூட அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவின் அடிப்படையில், ஜூன் மாத முதல் வாரத்திற்குள் குறிப்பிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் மற்றும் பெண்களின் நலனை கருத்தில் கொண்டு, வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள்…

Read More
கண்காணிப்பில் புதிய கட்டம்: கன்னியாகுமரியில் KAAVAL AI கேமரா அமைப்பு தொடக்கம்

கண்காணிப்பில் புதிய கட்டம்: கன்னியாகுமரியில் KAAVAL AI கேமரா அமைப்பு தொடக்கம்.

போக்குவரத்து விதிமுறை மீறல்களை தன்னிச்சையாக கண்டறியும் தொழில்நுட்பம் அறிமுகம் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக ரவுண்டானா பகுதியில், போக்குவரத்து விதிமுறை மீறல்களை தன்னிச்சையாக கண்டறியும் KAAVAL AI – Automatic Traffic Violation Detection System என்ற நவீன கண்காணிப்பு கேமரா அமைப்பை, கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் இரா. ஸ்டாலின், ஐபிஎஸ், செவ்வாய்க்கிழமை (09 ஜூன் 2026) காலை தொடங்கி வைத்தார். செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அடிப்படையில் செயல்படும் இந்த அமைப்பு, சாலைப்…

Read More
காலத்தைப் பதிவு செய்த ‘வேர்களைத்தேடி’ மாலிக்தினார் பைத்துல்மாலின் தோற்றமும் வளர்ச்சியும் நூலாக வெளியீடு

காலத்தைப் பதிவு செய்த ‘வேர்களைத்தேடி’ மாலிக்தினார் பைத்துல்மாலின் தோற்றமும் வளர்ச்சியும் நூலாக வெளியீடு.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சமூக மற்றும் கல்விசார் பணிகளில் ஈடுபட்டு வரும் மாலிக்தினார் பைத்துல்மாலின் தோற்றம் மற்றும் வளர்ச்சி வரலாற்றைப் பதிவு செய்யும் “வேர்களைத்தேடி – மாலிக்தினார் பைத்துல்மால் தோற்றமும் வளர்ச்சியும்” என்ற நூல் வெளியீட்டு விழா, பைத்துல்மால் மாலிக்தினார் சமூக நலக் கூடத்தில் நடைபெற்றது. இப்ராஹிம் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நூலின் ஆசிரியர் இப்ராஹிம் சாகுல் ஹமீது முன்னிலை வகித்தார். திருவை முஸ்லிம் ஆர்ட்ஸ் கல்லூரி தாளாளர் முகமது அலி தலைமை தாங்கி, நூலை…

Read More
மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளரை சந்தித்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள்

மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளரை சந்தித்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள்.

கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்துடன் ஒத்துழைப்பை வலியுறுத்தி மரியாதை நிமித்த சந்திப்பு கன்னியாகுமரி மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியர் பிரதாப் IAS மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் ஆர். ஸ்டாலின், IPS ஆகியோரை தமிழக வெற்றிக் கழகத்தின் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர். தமிழக வெற்றிக் கழக தலைவர் மற்றும் முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்தச் சந்திப்புகளில், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர். மாதவன் மற்றும்…

Read More
மார்ஷல் நேசமணிக்கு அரசு மரியாதை நினைவு தினத்தில் அரசியல் மற்றும் நிர்வாகத் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்

மார்ஷல் நேசமணிக்கு அரசு மரியாதை நினைவு தினத்தில் அரசியல் மற்றும் நிர்வாகத் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

கன்னியாகுமரி மாவட்டத்தின் அரசியல் மற்றும் சமூக வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கும் மார்ஷல் நேசமணியின் நினைவு தினத்தையொட்டி, நாகர்கோவில் வேப்பமூடு பகுதியில் அமைந்துள்ள அவரது மணிமண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை அரசு மரியாதையுடன் அஞ்சலி செலுத்தப்பட்டது. மணிமண்டபத்தில் உள்ள மார்ஷல் நேசமணியின் திருவுருவச் சிலைக்கு தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ் குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதாப் ஐஏஎஸ், நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மேரி பிரின்ஸி லதா மற்றும் பத்மநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் செல்லசுவாமி உள்ளிட்டோர்…

Read More
மார்ஷல் நேசமணிக்கு அரசு மரியாதை நினைவு தினத்தில் அரசியல் மற்றும் நிர்வாகத் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்

மார்ஷல் நேசமணிக்கு அரசு மரியாதை நினைவு தினத்தில் அரசியல் மற்றும் நிர்வாகத் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

கன்னியாகுமரி மாவட்டத்தின் அரசியல் மற்றும் சமூக வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கும் மார்ஷல் நேசமணியின் நினைவு தினத்தையொட்டி, நாகர்கோவில் வேப்பமூடு பகுதியில் அமைந்துள்ள அவரது மணிமண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை அரசு மரியாதையுடன் அஞ்சலி செலுத்தப்பட்டது. மணிமண்டபத்தில் உள்ள மார்ஷல் நேசமணியின் திருவுருவச் சிலைக்கு தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ் குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதாப் ஐஏஎஸ், நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மேரி பிரின்ஸி லதா மற்றும் பத்மநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் செல்லசுவாமி உள்ளிட்டோர்…

Read More