அரசியல்
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றலாம் என வழக்கு வந்த போது நான் பதவியில் இருந்திருந்தால் தீபம் ஏற்ற அனுமதித்திருப்பேன்: பொன்.மாணிக்கவேல் பேட்டி.
தீர்ப்பு வந்தபோது இந்த இடத்தில் நான் இருந்திருந்தால், ‘நான் சட்டத்தின் வேலைக்காரன். அரசாங்கத்தின் வாய்மொழி அறிவுறுத்தல்கள் சட்டவிரோதமாக இருக்கும் வரை அரசாங்கத்தின் வேலைக்காரன் அல்ல’ என, நீதிமன்ற உத்தரவு கிடைத்தவுடன், முதல்வர், உள்துறை அமைச்சருக்கு மெயில் அனுப்பியிருப்பேன். உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்காதவர்கள் போலீசே கிடையாது. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், எனக்கு எதிராக ஒன்னே முக்கால் மணி நேரம் வழக்கறிஞராக வாதாடியவர். எனினும், அவரது நேர்மையான பணிக்கு, அவருக்கு ஆதரவாக 2,000 கையெழுத்து என்றாலும் போடுவேன். பிரதமர் மோடி,…
“தீபாவளிக்கு வாழ்த்து சொல்லாத, முதலமைச்ருக்கு ‘மதச்சார்பின்மை’ பற்றி பேசுவதற்கு, துளியேனும் தகுதியில்லை!”- திருநெல்வேலி பேட்டியில், தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், கடுந்தாக்கு!
திருநெல்வேலி,டிச.21:- திருநெல்வேலியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரைக்கு, பதில் அளிக்கும் வகையில், பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், இன்று (டிசம்பர். 21) செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது முதல்வர் முன்வைத்த குற்றச்சாட்டுகளை, திட்டவட்டமாக மறுத்த அவர், தமிழக அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார். தொடர்ந்து பேசிய நயினார் நாகேந்திரன், “மேடைகளில் மதச்சார்பின்மை குறித்தும், மகாத்மா காந்தி குறித்தும் முதல்வர் ஸ்டாலின் பேசி வருகிறார். ஆனால், அவர் உண்மையில் மதச்சார்பின்மையை கடை பிடிக்கிறாரா? என்பதை நான் ஒரு…
மாநில மகளிரணி மாநாடு நடைபெற இருக்கும்திடலின் ஏற்பாடுகளை பார்வையிடல்..
நேற்று 21/12/2025. மாலை 4 மணி. வரும் 29/12/2025 அன்று திருப்பூர் மாவட்டம் கோடங்கிபாளையத்தில்,திரு.V.செந்தில்பாலாஜி அவர்களின் சிறப்பான முன்னெடுப்பில் பிரமாண்டமான ஏற்பாடுகளுடன் மிகச்சிறப்பாக நடைபெற இருக்கும் மாநில மகளிரணி மாநாடு நடைபெற இருக்கும் மாபெரும் திடலையும் அங்கு நடைபெற்றுக்கொண்டிருக்கும் பணிகளையும் பார்வையிட மாண்புமிகு அமைச்சர்கள் திரு.முத்துசாமி அவர்கள், மற்றும் திருமதி.கயல்விழி செல்வராஜ் அவர்கள், மற்றும்,கோவை ஒருங்கிணைந்த மாவட்டக்கழக செயலாளர்கள்,மற்றும் திருப்பூர் மாவட்டக்கழக செயலாளர்கள்,ஆகியோருடன் இணைந்து மாநில துணை செயலாளர். மகளிர் தொண்டரணி.பொறுப்பாளர்.கோவை.நா.மாலதி ஒருங்கிணைந்த திருப்பூர் மாவட்டங்கள் மற்றும்…
திருநெல்வேலி மாவட்டத்தில், சூறைக்காற்றால் சேதமடைந்த, வாழை பயிர்களுக்காக விவசாயிகளுக்கு, இழப்பீட்டுத்தொகை வழங்க வேண்டும்!பாளையங் கோட்டையில் நடைபெற்ற, புரட்சி பாரதம் கட்சியின் தென்மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் தீர்மானம்!
திருநெல்வேலி,டிச.17:- பாளையங்கோட்டை சமாதானபுரம் பகுதியில் அமைந்துள்ள, “ஆதி- திராவிடர் மகாஜன சங்கம்” (A.D.M.S.) கூட்ட அரங்கில், இன்று (டிசம்பர்.17) மாலையில், “புரட்சி பாரதம்” கட்சியின், தென் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்ற “கலந்தாய்வு கூட்டம்” நடைபெற்றது. மாவட்ட செயலாளர் “களக்காடு” ஏ.கே. நெல்சன் தலைமையும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் குட்டி பாண்டியன் முன்னிலையும், வகித்தனர். திருநெல்வேலி மத்திய மாவட்ட செயலாளர் கண்ணன், அனைவரையும் வரவேற்று பேசினார். மாநில பொதுச் செயலாளர் ருசேந்திரன், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, பயனுள்ள…
திருநெல்வேலி மாவட்டம் இடையன்குடியில், “என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி! பரப்புரை நிகழ்ச்சிகள்! மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் பங்கேற்பு!
திருநெல்வேலி,டிச.16: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் முகஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, சபாநாயகர் மு.அப்பாவு ஆசியுடன், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் முனைவர் ம.கிரகாம்பெல் வழிகாட்டுதலின்படி, ராதாபுரம் கிழக்கு ஒன்றியத்தில் “என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி!” தேர்தல் பரப்புரை நிகழ்ச்சிகள், இடையன்குடி ஊராட்சி வாக்குச்சாவடி எண்கள் 264 மற்றும் 265 பகுதிகளில், இன்று (டிசம்பர். 16) நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளுக்கு, திருநெல்வேலி மாவட்ட பஞ்சாயத்து மற்றும் மாவட்ட திட்டக்குழு தலைவரும், ராதாபுரம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளருமான வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமை வகித்தார்….
திருநெல்வேலி ரெட்டியார்பட்டியில், 60 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள, ‘பொருநை அருங்காட்சியகம்` 21- ஆம் தேதி திறப்பு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக, திறந்து வைக்கிறார்! பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.. வேலு, நெல்லையில் பேட்டி!
திருநெல்வேலி,டிச.15:- தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு, இன்று ( டிசம்பர்.15) சபாநாயகர் மு. அப்பாவு, மாவடட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. சுகுமார், தமிழ்நாடு நிதித்துறையின் அரசு முதன்மை செயலாளர் த. உதய சந்திரன் ஆகியோருடன், திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அவர் கூறியதாவது:- “திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டியில், 13 ஏக்கர் பரப்பளவில் 54,000 சதர அடியில், மொத்தம் 60 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள, “பொருநை அருங்காட்சியகம்” (Porunai Museum) ஙட்டடங்களை,…
நேர்முக உதவியாளரா இல்லை மறைமுக எதிர்கட்சிகாரரா ?
திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்ற தொகுதி உறுப்பினரான ஐ.பி.செந்தில்குமாரின் நேர்முக உதவியாளராக இருந்து வருபவர் லோகு என்ற லோகநாதன். பழனி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அரசு மற்றும் திமுக கட்சி சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அதன்படி நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் மக்கள் பிரதிநிதியான எம்.எல்.ஏ செந்தில்குமார் கலந்து கொண்டு மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறார். அரசு மற்றும் திமுக கட்சியின் முக்கிய நிகழ்ச்சிகள் நடத்துவது தொடர்பாக செய்தியாளர்களுக்கு தகவல் வழங்க வேண்டியது சம்பந்தப்பட்ட நேர்முக…
பழனியில் அன்னை சோனியா காந்தியின் பிறந்தநாள் விழா…
திண்டுக்கல் மாவட்டம் பழனி வ.உ.சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள காந்தி சிலை முன்பு இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கத்தின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள் அன்னை சோனியா காந்தியின் திருவுருவப்படம் வைத்து பிறந்தநாள் விழா நிகழ்ச்சி நடைபெற்றன. இந்நிகழ்வின் தலைமையாக நகர தலைவர் முத்து விஜயன் மண்டல தலைவர் வீரமணி வரவேற்புரையாக மாநில பொறுப்பாளர் சாய்ரா பானு பேராசிரியர் கனகராஜ் மாவட்டத் துணை தலைவர் முருகானந்தம்…
விழுப்புரத்தில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து இடதுசாரிகள்,விசிக ஆர்ப்பாட்டம்…
விழுப்புரம், டிச.8- விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில் திங்கள்கிழமை இடதுசாரிகள் மற்றும் விசிக சார்பில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்.சுப்பிரமணியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆ.சௌரிராஜன், விடுதலை சிறுத்தை கட்சி ரா.பெரியார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்.எல்) டி. பிராங்க்ளின் ஆகியோர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன், விடுதலை…
விழுப்புரம் கோட்ட போக்குவரத்துத் தொழிலாளா் குடும்பங்களுக்கு ரூ. 8.25 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டது…
விழுப்புரம் கோட்டத்தில் பணியாற்றி உயிரிழந்த தொழிலாளா் குடும்பங்களுக்கு ஓராண்டில் ரூ.8.25 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் க.குணசேகரன் தெரிவித்தாா். விழுப்புரத்திலுள்ள தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வில் 3 தொழிலாளா் குடும்பங்களுக்கு நிதியுதவியை வழங்கி, மேலும் அவா் பேசியது: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் பணியாளா்கள் தங்கள் பணிக்காலத்தின் போதும், பணியில் இல்லாத போதும் உயிரிழந்தால், அவா்களின் குடும்பங்களுக்கு உதவிடும் வகையில் பணியாளா்களிடமிருந்து பிடித்தம் செய்யப்படும் தொகையிலிருந்து நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது….
