இதழ்கள்
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.
நாகர்கோவில் ஆக : 22 கன்னியாகுமரி மாவட்டம் – விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஏற்பட்ட மனக்குமுறல் குறித்து விரிவான அறிக்கை. அரசு வழக்கமாக மாதந்தோறும் ஒழுங்கு செய்வது போல, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் மாவட்டம் முழுவதிலிருந்தும் விவசாயிகள் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகளை முன்வைப்பதற்காக வந்திருந்தனர். முக்கிய புகார்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் ஆட்சியரின் புறக்கணிப்பு குற்றச்சாட்டு: கூட்டம் நடைபெற்றபோது, மாவட்ட ஆட்சியர் திருமதி….
நாகர்கோவில் அருகே மேலசூரங்குடி கோல்டன் சிட்டியில் வீட்டு பிரச்சனை காரணமாக இரண்டு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
ஆக்.21 – கன்னியாகுமரி இந்த மோதலில், கட்டை மற்றும் கல் கொண்டு தாக்கியதால், ஒருவருக்கு தலைக்காயம் ஏற்பட்டு மண்டை உடைப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவத்தால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது. உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தற்போது அந்தப்பகுதியில் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கேமராமேன் ஜெனீருடன் குமரி மாவட்ட செய்தியாளர் பாவலர் ரியாஸ்.
கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு ஆவணித் திருவிழா தொடக்கம்.
ஆக 22, கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு வைகுண்டசாமி தலைமை பகுதியில் ஆவணித் திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிட்டு, பள்ளியறை திறத்து அய்யாவுக்கு பணி விடை நடைபெற்றது. அதன் பின்னர் கொடிப்பட்டம் திருக்கொடியேற்றம் சிறப்பாக நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். மொத்தம் 11 நாட்கள் நடைபெறவுள்ள இவ்விழாவில், எட்டாம் நாள் கலிவேட்டையும் மற்றும் 11ஆம் நாள் தேரோட்டமும் மிக விமர்சையாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தினமும்…
கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி அருகே மருமகனை கல்லால் தாக்கி கொலை செய்த மாமனார் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
காதல் திருமணம் செய்த மனைவியை அழைத்துச் செல்ல வந்த சிபின் (25) என்பவருக்கும் மாமனார் ஞானசேகரனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, மாடியில் இருந்து ஹாலோ பிளாக் கல்லை தூக்கி வீசியதாக கூறப்படுகிறது. தலையில் பலத்த காயமடைந்த சிபின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவத்துக்கு தொடர்பாக போலீசார் ஞானசேகரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாவட்ட செய்தியாளர் பாவலர் ரியாஸ்.
கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் மீனவர்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு.
ஆக் 22, கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் கடற்கரை மீனவ கிராமத்தில், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் இன்று (ஆகஸ்ட் 22) ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதி மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க செல்லாமல் தங்களின் குடும்பத்தினருடன் பேரணியாக வந்து கடற்கரை வளாகத்தில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. மீனவர்களின் நலனை…
பழனி வட்டம், அமரபூண்டி ஊராட்சியில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி பெற்றுக்கொண்டார்.
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், அமரபூண்டி ஊராட்சியில் இன்று(21.08.2025) நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் கலந்துகொண்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இம்முகாமில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பேசியதாவது:- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்….
உங்களுடன் ஸ்டாலின் முகாம்.
மாநகர் மாவட்ட திமுக, சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி, நந்தா நகர் பகுதி,கோத்தாரி நகர் விநாயகர் கோவில் திருமணமண்டபத்தில் நடைபெற்ற, கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம், வார்டு எண் 58 க்கான, மாண்புமிகு.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின், “எல்லோர்க்கும் எல்லாம்” 13+ அரசுத் துறைகள்,43+ சேவைகள், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பங்கள்,மருத்துவ முகாம்களுடன், “உங்களுடன் ஸ்டாலின் முகாமில்” மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் ex.எம்எல்ஏ., அவர்கள் பங்கேற்று,பார்வையிட்டார். கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவர்…
தவெக மாநாட்டிற்கு வந்த தொண்டர் உயிரிழப்பு.
சென்னையை சேர்ந்த பிரபாகரன் (வயது 33) மாநாட்டிருக்கு செல்வதற்கு முன்பாக மயக்கமடைந்து உயிரிழந்தார். நேற்று இரவு சென்னையில் இருந்து நண்பர்களுடன் வேனில் புறப்பட்ட பிரபாகரன் சற்று முன்னதாக மதுரை சக்கிமங்கலம் அருகே வேனை நிறுத்தி விட்டு சிறுநீர் கழிக்க சென்றார். சிறுநீர் கழிக்க சென்ற பிரபாகரனை காணவில்லை என நண்பர்கள் தேடிச்சென்ற பொழுது பிரபாகரன் மயக்க நிலையில் காணப்பட்டார். இதனை அடுத்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் பிரபாகரன் அனுமதிக்கப்பட்ட போது அவர்…
நாகர்கோவிலில் “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாம்.
ஆக் 21, கன்னியாகுமரி நாகர்கோவில் மாநகராட்சி சார்பில், பொதுமக்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்து தீர்வு காணும் நோக்கில் மாண்புமிகு தமிழக முதல்வர், கழகத் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி நடத்தப்பட்ட “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாம், வடசேரி அண்ணா விளையாட்டு அரங்கம் எதிர்புறத்தில் உள்ள S.K.M. மஹாலில் நடைபெற்றது. இம்முகாமில் நாகர்கோவில் மாநகராட்சி 14 மற்றும் 15–வது வார்டு பகுதிகளிலிருந்து பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது மனுக்களை சமர்ப்பித்தனர். குமரி கிழக்கு மாவட்ட செயலகரும், மாநகராட்சி…
கோவை வடவள்ளி பகுதி கல்வீரம்பாளையம். 37, 38 வது வார்டு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்.
வடவள்ளி பகுதி கல்வீரம்பாளையம். 37, 38 வது வார்டு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 13 அரசு துறைகளின் சார்பில் 43 சேவைகள் வழங்கப்பட்டன. நடைபெற்றுக் கொண்டிருக்கும் சிறப்பு முகாமிற்கு வ. ம. சண்முகசுந்தரம் மற்றும் அரசு உயர் அதிகாரிகளும் மற்றும் கழக நிர்வாகிகளும் கலந்துகொண்டு இந்த முகாமை சிறப்பாக துவக்கி வைத்ததோடு மக்களோடு சேர்ந்து கழக உடன்பிறப்புகள் அனைவரும் மக்களுக்கு சேவைகள் செய்து வருகின்றன. வடவள்ளி 37, 38 வது பகுதி மக்கள் மிகவும் ஆர்வத்துடன்…
