இதழ்கள்
உடுமலை அருகே வெள்ளை செட்டிபாளையம் கிராமத்தில் கிராமசபை கூட்டத்தை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பொதுமக்கள்.
உடுமலை நவம்பர் 01. ஊருக்கு நடுவில் சுகாதாரகேடு ஏற்படுத்திவரும் கோழிப்பன்னையைஅகற்ற கோரி வீடுகளில் கருப்புகொடி கட்டி ஆர்பாட்டம். தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் எச்சரிக்கை திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குப்பம்பாளையம் ஊராட்சிகுட்பட்ட வெள்ளை செட்டிபாளையத்தில் அம்மன் பார்ம்ஸ் என்ற தனியார் கோழிப்பன்னை செயல்பட்டு வருகிறது ஊருக்கு நடுவே செயல்பட்டுவரும் இந்த கோழிப்பன்னையால் ஊர் முழுதும் துர்நாற்றமும் ஈக்கள் தொந்தரவும் அதிகரித்து வருவதோடு ஊர் மக்கள் அடிக்கடி நோய் வாய்ப்படுவதும் வாடிக்கையாகி வந்துள்ளது. இந்நிலையில் இந்த பிரச்சனை குறித்து…
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கன் உத்தரவின் பேரில் திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி , மடத்துக்குளம் வட்டாரம், கணியூர், ஸ்ரீ வெங்கடகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளியில் திராவிட மாடல் அரசின் ” நலம் காக்கும் ஸ்டாலின் ” மருத்துவ முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள் , மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அவர்கள் ஆகியோர் துவக்கிவைத்தனர்.. இந்நிகழ்வில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி அவர்கள், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் அவர்கள் , மடத்துக்குளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இரா.ஜெயராமகிருஷ்ணன் அவர்கள் , மடத்துக்குளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் திரு.சாகுல் அமிது, அரசு அதிகாரிகள், மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளை கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.. முகாமில் பீகார்…
உடுமலை: ரயில்வே ஸ்டேஷனில் கண்காணிப்பு கேமரா அமைக்க கோரிக்கை…
உடுமலைநவம்பர் 1. உடுமலை அக்.31-உடுமலை ரயில்வே ஸ்டேஷனில், கண்காணிப்பு கேமரா அமைக்க ரயில்வே துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோவை-திண்டுக்கல் அகல ரயில் பாதையில் உடுமலை ரயில்வே ஸ்டேஷன் உள்ளது. இதன் வழியாக கோவை-மதுரை, திருவனந்தபுரம்-ராமேஸ்வரம் பாலக்காடு-திருச்செந்தூர் பாலக்காடு- சென்னை திருநெல்வேலிக்கும் ரயில்கள் செல்கின்றன. இதனால் ஏராளமான பயணியர் ரயில்களில் செல்ல இங்கு வருகின்றனர் .இங்கு போதுமான அடிப்படை வசதிகள் இல்லாததால் அவர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே பயணியரின் பாதுகாப்பு கருதியும் சமூக விரோத…
சேலைகள் கட்டி வரப்புகளில் பாதுகாப்பு: காட்டுப்பன்றிகள் ஊடுருவலால் அலறல்
உடுமலை அக்டோபர் 31. உடுமலை:காட்டுப்பன்றிகள் தாக்குதலில், இருந்து பயிர்களை காப்பற்ற, சேலை கட்டுவதற்கு மட்டும், ஏக்கருக்கு, 5 ஆயிரம் ரூபாய் கூடுதலாக செலவிட வேண்டியுள்ளது என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.உடுமலை அருகே வனப்பகுதியிலிருந்து வெளியேறி, கிராமங்களில், காட்டுப்பன்றிகள் கூட்டம் முகாமிட்டுள்ளன. அனைத்து வகையான சாகுபடிகளிலும், காட்டுப்பன்றிகளால், சேதம் ஏற்பட்டு வருகிறது. அறுவடைக்கு தயாராகும் போது, ஏற்படும் சேதத்தால், பொருளாதார சேதத்தை விவசாயிகள் சந்திக்கின்றனர். குறிப்பாக, மக்காச்சோளம், சோளம், நிலக்கடலை சாகுபடியில், அதிக சேதம் ஏற்படுகிறது. காட்டுப்பன்றிகளை விரட்ட…
வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது…
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், இ.ஆ.ப., தலைமையில் 31.10.2025 நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கி.அரிதாஸ், வேளாண் இணை இயக்குநர் சீனிவாசன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் விஜயசக்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) பிரேமலதா, தோட்டக்கலை துணை இயக்குநர் அன்பழகன் உட்பட பலர் உள்ளனர்.
கள்ளத்தனமாக மதுபானம் விற்ற பெண் கைது..
விழுப்புரம் மாவட்டம்: திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேட்டுக்குப்பம் அருகே மது விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவல் ஆய்வாளர் அழகிரி மற்றும் காவலர்கள் தலைமையில் அப்பகுதிகளில் சென்று சோதனை மேற்க்கொண்டதில் தேவி(36) க/பெ சிவநாராயணன் என்பவர் கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்டவரை கைது செய்து அவரிடமிருந்து இருந்து 180 ml அளவு கொண்ட 140 பாட்டில்கள் மற்றும் பணம் ரூபாய் 2000 கைப்பற்றப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
மாணவர்களின் கற்றல் திறன் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்: நேரில் ஆய்வு..
விழுப்புரம்: விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட வழுதரெட்டியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களின் கற்றல் திறன் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், இ.ஆ.ப., இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன், உதவி திட்ட அலுவலர் நாகமணி, முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பெருமாள் உட்பட பலர் உள்ளனர்.
வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆலோசனை…
விழுப்புரம்: விழுப்புரம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து நடைபெற்ற வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், இ.ஆ.ப., இன்று ஆலோசனைகளை வழங்கினார். உடன் விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், விழுப்புரம் வருவாய் வட்டாட்சியர் மகாதேவன், விழுப்புரம் நகராட்சி ஆணையர் வசந்தி உட்பட பலர் உள்ளனர்.
இந்தியாவின் இரும்பு மனிதர் – பாரதரத்னா சர்தார் வல்லபபாய் படேல் அவர்களின் பிறந்தநாள் விழா..
இந்தியாவின் இரும்பு மனிதர் பாரதரத்னா சர்தார் வல்லபபாய் படேல் அவர்களின் 150-ஆவது பிறந்ததினம் நாடுமுழுவதும் கொண்டாடப்படும் நிலையில் பழம்பெரும் பள்ளியான மதுரைக்கல்லூரி மேனிலைப்பள்ளியில் பாரதரத்னா சர்தார் வல்லபபாய் படேல் அவர்களின் பிறந்தநாள் விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது. இவ்விழாவில் தலைமையாசிரியர் திரு.பாலாஜிராம் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினராக சமூக ஆர்வலர் திரு.இல.அமுதன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். உதவித்தலைமையாசிரியர் திரு.மகேஸ்வரன் அவர்கள் நன்றி கூறினார். மதுரை மாவட்ட…
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 17 வயது கல்லூரி மாணவி மரணம்..!
திண்டுக்கல் அய்யலூர் அருகே கஸ்பா அய்யலூரை சேர்ந்த 17- வயது சிறுமி இவர் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 24-ம் தேதி வயிற்று வலி காரணமாக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து வடமதுரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையில் பல மர்மங்கள் வெளிவரும் என நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து…
