Headlines

காவலர் வீரவணக்க நாள்: வீரமரணமடைந்த காவலர்களுக்கு மரியாதைமாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். ஆர். ஸ்டாலின் IPS தலைமையில் நிகழ்வு

காவலர் வீரவணக்க நாள்: வீரமரணமடைந்த காவலர்களுக்கு மரியாதை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். ஆர். ஸ்டாலின் IPS தலைமையில் நிகழ்வு

அக் 21 கன்னியாகுமரி

1959 ஆம் ஆண்டு அக்டோபர் 21 அன்று லடாக் பகுதியில் ஹாட் ஸ்பிரிங்ஸ் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் மேற்கொண்ட திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் 10 பேர் உயிரிழந்தனர். இந்த வீர மரணத்தை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21 ஆம் தேதி காவலர் வீரவணக்க நாள் நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

அதனை முன்னிட்டு இன்று கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை காவல் வளாகத்தில் வீரவணக்க நாள் அனுசரிப்பு நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஆர். ஸ்டாலின் IPS அவர்கள் தலைமை வகித்து வீரமரணமடைந்த காவலர்களுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்வில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. மதியழகன், நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திரு. லலித் குமார் IPS, தக்கலை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. பார்த்திபன், மார்த்தாண்டம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. நல்லசிவம், கன்னியாகுமரி உட்கோட்டம் மற்றும் ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) திரு. ஜெயச்சந்திரன், DCRB காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பிச்சையா, SJ&HR காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சிவசங்கரன், தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. சாய்லட்சுமி, ஆயுதப்படை காவல் ஆய்வாளர் திரு. அருண் மற்றும் பல காவல் உதவி ஆய்வாளர்கள், காவல் ஆளினர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் இறுதியில் 21 குண்டுகள் முழங்க நாட்டிற்காக இன்னுயிர் நீத்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

“தங்கள் உயிரை தியாகம் செய்து மக்களின் உயிரை காத்த காவலர்களின் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் நாம் என்றும் நினைவுகூர வேண்டும்,” என காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஆர். ஸ்டாலின் IPS தெரிவித்தார்.

தமிழக விடியல் செய்திகளுக்காக கேமராமேன் ஜெனீருடன்
குமரி மாவட்ட தலைமை நிருபர் பாவலர் ரியாஸ்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *