கோவை மாவட்ட செங்கல் லாரி உரிமையாளர் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த மூன்று நாள் வேலைநிறுத்தப் போராட்டம் நேற்றுடன் (ஜூலை 8) நிறைவடைந்தது. வெளி மாவட்டங்களில் இருந்து கோவைக்கு வரும் லாரிகளில், அனுமதிக்கப்பட்ட குறிப்பிட்ட அளவிலான பாரத்தை மட்டுமே (Overloading தவிர்த்து) ஏற்ற வேண்டும் என்று வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

இவ்வாறு சரியான அளவில் பாரம் ஏற்றி வரும்போது, செங்கல் விலையில் சிறிதளவு உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது என்றும், இதற்குப் பொதுமக்கள் முழு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, கடந்த ஜூலை 6-ஆம் தேதி தொடங்கிய இந்த வேலைநிறுத்தப் போராட்டம், நேற்று (ஜூலை 8) வெற்றிகரமாக நிறைவு பெற்றது. நடைபெற்ற போராட்டத்தில் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகளான
திரு. கங்காதரன் (கோவை பிரிக்ஸ், ஒண்டிபுதூர்)
திரு. SAT வினோத் குமார் (அங்காள பரமேஸ்வரி ட்ரான்ஸ்போர்ட், ஒண்டிபுதூர்)
திருமதி. சரண்யா & திரு. ஹரி (HAS டிரேடர்ஸ், கோவை புதூர்)
திரு. கணேஷ் (வேல்முருகன் ட்ரான்ஸ்போர்ட், காளப்பட்டி)
திரு. பிரபாகரன் (VK சிமெண்ட், குரும்பபாளையம்)
திரு. ஆனந்த் (பண்ணாரி அம்மன் ட்ரான்ஸ்போர்ட், மேட்டுப்பாளையம்)
திரு. வடிவேல் (பகவதி அம்மன் ட்ரான்ஸ்போர்ட், அன்னூர்)
திரு. பரத் (பிரிக்ஸ் பாயிண்ட், நீலாம்பூர்)
திரு. பாபு (சாய்பாபா ட்ரான்ஸ்போர்ட், ஆலந்துறை)
திரு. லோகநாதன் (வேல்முருகன் ட்ரான்ஸ்போர்ட், மேட்டுப்பாளையம்)
திரு. கோபி (அங்காள பரமேஸ்வரி டிரான்ஸ்போர்ட், மேட்டுப்பாளையம்)
திரு. தினேஷ்குமார் (அய்யாசாமி டிரான்ஸ்போர்ட், சின்ன தடாகம்)
திரு. செந்தில் (ஆனைமலை அம்மன் டிரான்ஸ்போர்ட், கவுண்டம்பாளையம்)
திரு. தமிழ்செல்வன் & திரு. தமிழரசன் (SPM & SVK டிரான்ஸ்போர்ட், சின்ன தடாகம்)
உள்ளிட்ட ஏராளமான லாரி உரிமையாளர்களும், ஓட்டுநர்களும் திரளாகக் கலந்துகொண்டு தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.
