Headlines

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உத்தரவை நிறைவேற்றததால் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை:

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உத்தரவை நிறைவேற்றததால் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை:

மலை உச்சியில் பூஜை செய்ய நீதிமன்றம் கூறும் 5 பேரை அனுமதிக்க வேண்டும் என்ற முந்தைய விசாரணை உத்தரவு குறித்து ஆலோசித்து வருவதாக அரசுத் தரப்பு பதில்.

புதிய வழிபாடுகளை நடைமுறைப்படுத்துவது குறித்து அறங்காவலர்கள் ஆலோசனைதான் கூற முடியும்; முடிவு எடுக்க முடியாது என கோயில் தரப்பில் வாதம்..

எப்போது நடைமுறைப்படுத்தப்படும் என்று கேட்டுச் சொல்லுங்கள்? நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து எத்தனை மாதம் ஆனது? என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கேள்வி.?

உச்சிப் பிள்ளையார் கோவிலில் தான் கார்த்திகை தீபம் ஏற்றுவதாக கோயில் பட்டர்கள் தெரிவிக்கின்றனர் – கோயில் தரப்பு வாதம்..

மலை மீது பூஜை செய்வது தொடர்பாக உடனடியாக எந்த முடிவும் எடுக்க முடியாது. 2 வார கால அவகாசம் அளியுங்கள், ஆலோசனை செய்து நீதிமன்றத்தில் தெரிவிக்கிறோம் – கோயில் தரப்பு

அப்படி என்றால், அறங்காவலர் குழுவினரையும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சேர்க்கவா? – நீதிபதி கேள்வி?

இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கே, விசாரணைக்கு உகந்தது அல்ல; இதில் கூடுதலாக யாரையும் சேர்க்க இயலாது – காவல்துறை தரப்பு வழக்கறிஞர்.

“நான் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றச் சொல்லவில்லை. அதன் முதல் படியாக, 5 நபர்கள் மலை உச்சிக்கு சென்று அந்தத் தூணுக்கு வழிபாடு செய்வதற்கு அனுமதிக்க முடியுமா? முடியாதா? என்பதுதான் எனது கேள்வி – நீதிபதி

“இந்த விவகாரத்தில் என்ன செய்ய முடியும்? என்பது குறித்து ஆலோசிக்க 2 வார கால அவகாசம் கொடுங்கள்; ஆலோசித்து நீதிமன்றத்தில் தெரிவிக்கின்றோம்” – மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதம்.

உத்தரவை நிறைவேற்றுவதில் எனது தனிப்பட்ட உத்தரவாகப் பார்க்க வேண்டாம்; நீதிமன்ற உத்தரவாக நிறைவேற்றுங்கள்.

தற்போது தீபம் ஏற்ற வேண்டாம்; குறைந்தபட்சம் ஐந்து நிமிடம் வழிபாடு செய்வதற்கு அனுமதி கொடுங்கள் – நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்.

வழக்கு விசாரணை மார்ச் 18ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *