மடத்துக்குளம் அடுத்துள்ள ஜோத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் கண்ணீர் மல்க மனு ஒன்றை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வழங்கினர்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, கணியூர் அருகே உள்ள அரியநாச்சிபாளையத்தைச் சேர்ந்த கதிரேசன் என்பவர் ஏலச்சீட்டு நடத்தி வந்தார்.
ஏலச்சீட்டில் 50க்கும் மேற்பட்ட நபர்கள் பணம் செலுத்தி வந்தோம் ரூபாய் 50 ஆயிரம் முதல் 10 லட்சம் வரை சீட்டு மாத சீட்டு தினசரி சீட்டு என ஏலச்சீட்டு பிடித்து வந்தார்.
சீட்டு முதிர்வு தொகையை கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு தர வேண்டும். ஆனால் ஏலச்சீட்டு நடத்திய கதிரேசன் பணம் கொடுக்காமல் இழுத்தடித்து வந்தார்.
தற்போது மூன்று மாதங்களாக தலைமறைவாகி விட்டார் ரூ.4 கோடிக்கு மேல் மோசடி நடந்துள்ளது எங்கள் பணத்தை திரும்ப பெற்றுக் கொடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியுள்ளனர்.
இதற்கு முன்பு கணியூர் காவல் நிலையத்தில் புகார் மனு வழங்கியும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.
அதன் காரணமாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரிடம் நேரடியாக சந்தித்து மனு வழங்கியுள்ளோம்.
விரைவாக எங்கள் பணத்தை மீட்டுக் கொடுக்க வேண்டுமென அந்த பகுதி மக்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
