மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பிரதமர் மோடி இன்று மாலை சாமி தரிசனம் செய்ய உள்ளதால் கோயில் முழுவதும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்தில் கொண்டுவரப் பட்டுள்ளது.
மதுரை விமான நிலையத்தில் இருந்து அவனியாபுரம் வழியாக கோயிலுக்கு வரும் பிரதமர் மோடி மாலை 4 மணிக்கு சாமி தரிசனம் செய்ய உள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக கோயில் அருகே திறந்து இருக்கும் அனைத்து கடைகளையும் மதியம் 12 மணிக்குள் அடைக்க போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
தென் மண்டல செய்தியாளர்: சின்னத்தம்பி
