Headlines
சாலை பணிகளை ஆய்வு மேற்கொண்ட

சாலை பணிகளை ஆய்வு மேற்கொண்ட நகரமன்ற தலைவர் ஏஜாஸ் அகமத்!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட 1 வது பகுதிஜட்ஜ்மனை மெயின் ரோட்டில் புதியதாக அமைக்கப்பட்டு வரும் சிமெண்ட் சாலை மற்றும் கால்வாய் அமைக்கும் பணிகளை நகரமன்ற தலைவர் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது 1 வது வார்டு நகரமன்ற உறுப்பினர் டி.ரஜியாவின் கணவர் முனாப், 2 வது வார்டு நகரமன்ற உறுப்பினர் ஷாஹெதாவின் கணவர் பாரூக் ஆகியோர் உடன் இருந்தனர்.

Read More
உடுமலை நாராயண கவிராயர் 125-வது பிறந்தநாள் விழா.!

உடுமலை நாராயண கவிராயர் 125-வது பிறந்தநாள் விழா.!

தமிழக அரசு சார்பில் மாவட்ட வருவாய் அதிகாரி கார்த்திகேயன் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.! திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பகுத்தறிவு கவிராயர் உடுமலை நாராயண கவிராயரின் 125 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று குட்டைதிடல் பகுதியில் உடுமலை நாராயண கவிராயரின் மணிமண்டபத்தில் அரசு சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் கார்த்திகேயன் கலந்து கொண்டு திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில்பொள்ளாச்சி எம்.பி.ஈஸ்வரசாமி , மடத்துக்குளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணன்…

Read More
நிதி நிர்வாக செயல்பாட்டில் குறைபாடு என குற்றச்சாட்டு.!

நிதி நிர்வாக செயல்பாட்டில் குறைபாடு என குற்றச்சாட்டு.!

போடிபட்டி ஊராட்சியில் தாசில்தார்தலைமையில் சிறப்பு கூட்டம் – தனித்தனியாக கருத்துப் பதிவு.! உடுமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட போடிபட்டி ஊராட்சியில் நிதி நிர்வாக செயல்பாட்டில் குறைபாடுகள் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன் அடிப்படையில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் குழு அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின் முடிவில் 6.1.2020 முதல் 31.3.2022 வரையிலான காலகட்டத்தில் செலவு சீட்டுகளை ஆய்வு செய்து குறைபாடுகள் இருப்பதாக அந்த குழு அறிக்கை அளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து உள்ளாட்சிகள் சட்டப்படி நடவடிக்கை…

Read More
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை

BREAKING | தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அக்டோபர் 6ம் தேதி வரை நீட்டிப்பு

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அக்டோபர் 6ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விடைத்தாள் திருத்த கூடுதல் அவகாசம் வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Read More
திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிரடி பணியிடமாற்றம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிரடி பணியிடமாற்றம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் நாட்றம்பள்ளி ஆகிய நான்கு வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் துணை வட்டாட்சியர்களாக பணியாற்றி வந்த 16 அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் அதிரடி பிறப்புத்துள்ளார். மேற்படி இடமாற்றம் செய்யப்பட்டுள்ள அதிகாரிகள் உடனுக்குடன் உரிய இடங்களில் உடனடியாக பணியில் சேர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது…

Read More