தமிழ்நாடு
பழனியில் அரசு இடத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்ததாக அவதூறு பரப்பியவர்கள் மேல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என பாதிக்கப்பட்டவர் பரபரப்பு பேட்டி…
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தேவஸ்தானத்திற்கு சொந்தமான 100 கோடி மதிப்பிலான இடம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது. அதில் முக்கிய குற்றவாளியாக பத்திரப்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் ஜஸ்டின் மணிகண்டன் நூறு கோடி இடத்தை பத்திர பதிவு செய்த அதே நாளில் பழனியில் உள்ள இட்டேரி சாலையில் ரவிச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான 55 சென்ட் இடம் சௌந்தரபாண்டியன் என்பவருக்கு பதிவதாக அக்ரீமெண்ட் போடப்பட்டுள்ளது. முன்னதாக இந்த இடமானது பெரியப்பா நகரில் உள்ள குப்பை கிடங்கிற்கு பதிலாக 1974…
ஆயக்குடி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட விசிக கவுன்சிலர் மற்றும் பொதுமக்கள்…
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள ஆயக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட 16வது வார்டு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குப்பை கிடங்கினால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு டெங்கு மலேரியா உள்ளிட்ட பல்வேறு நோய் தொற்றுகள் ஏற்பட்டு வருகின்றன… இந்நிலையில் குப்பை கிடங்கு வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று அப்பகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கவுன்சிலர் சரஸ்வதி வாஞ்சிநாதன் தலைமையில் பேரூராட்சி அலுவலரிடம் 20க்கும் மேற்பட்ட முறை மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளனர்.ஆனாலும் இதுவரை எவ்வித பயணம் ஏற்படவில்லை. இதனை தொடர்ந்து…
ஏஐ மூலம் பெண்களுக்கு அவதூறு: எடப்பாடி மீது சி.வி. சண்முகம் கடும் குற்றச்சாட்டு.
விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் செய்தியாளர்களிடம் பேசியபோது, அதிமுகவில் பெண்கள் மீது நடைபெறும் அவதூறு பிரச்சாரங்களை கடுமையாக விமர்சித்தார். குறிப்பாக, எடப்பாடி பழனிசாமியை எதிர்க்கும் பெண் நிர்வாகிகளை குறிவைத்து ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பப்படுவதாக அவர் குற்றம்சாட்டினார். இது கட்சிக்குள் ஆபத்தான கலாச்சாரமாக உருவாகி வருவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த அவதூறு நடவடிக்கைகளை தடுக்க வேண்டிய கட்சித் தலைமையே இதை மறைமுகமாக ஊக்குவிக்கிறது எனவும் சண்முகம் குற்றம் சாட்டினார். பெண்களை அவமதிக்கும்…
திமுக விரித்த சிகப்பு கம்பளம்… தவெகவுக்கு தாவும் தர்மயுத்தம்?: எடப்பாடியைத் தொடர்ந்து ஸ்டாலினுக்கும் ‘கையெழுத்து’ போடப்போகிறாரா ஓபிஎஸ்?!
தமிழக அரசியலில் எப்போதுமே ஆச்சரியங்களுக்கும் திருப்பங்களுக்கும் பஞ்சமிருந்ததில்லை. ஆனால், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் பயணத்தை கவனிப்பவர்களுக்கு, ‘அடுத்து எந்தப் பக்கம் திரும்பப் போகிறார்?’ என்பதே பெரிய புதிராக உருவெடுத்துள்ளது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை மோதலில் எடப்பாடி பழனிசாமியால் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டு, கட்சியிலிருந்தும் முறைப்படி வெளியேற்றப்பட்டார் ஓபிஎஸ். வீழ்ந்துவிட்டதாகக் கருதப்பட்ட அந்தத் தருணத்தில், ஆளும் திமுக தரப்பு அவருக்குக் கைகொடுத்தது. “தாய் கழகத்துக்குத் திரும்பி விட்டேன்” என்று உருகி, அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் முன்னிலையில் இணைந்த ஓபிஎஸுக்கு,…
“உணவு பாதுகாப்பு என்பது அனைவரின் உரிமை” – திண்டுக்கல் மாவட்டத்தில் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு!
ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் குறைந்த விலையில் கிடைக்கும் உணவுகளை நம்பியே தங்களது அன்றாட வாழ்க்கையை நடத்துகின்றனர். அவர்களுக்கு வழங்கப்படும் உணவு பாதுகாப்பானதாகவும், தரமானதாகவும், சரியான எடையுடனும் இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். ஆனால், சமீபகாலமாகப் பல்வேறு உணவகங்களில் அனுமதிக்கப்படாத சமையல் பொருட்கள் மற்றும் செயற்கை நிறமிகள் பயன்படுத்தப்படுவதாகப் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இவற்றை அறிவியல் பூர்வமாகப் பரிசோதித்து, உணவு பாதுகாப்பு விதிமுறைகளை மீறுபவர்கள் மீது உணவு பாதுகாப்புத் துறை கடுமையான நடவடிக்கை எடுக்க…
பாஜகவின் நிழல் ஆட்சியா தவெக ஆட்சி? – அமைதியின் பின்னணியில் இருக்கும் அரசியல் கணக்குகள்!
தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய புயலை ஏற்படுத்தி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ள தவெக அரசு, ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் இன்று வரை பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது. “புதிய மாற்றம் வரும், தொழில்துறை செழிக்கும்” என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தவெக அரசு தனது செயல்பாடுகளில் வேகம் காட்டாமல் கோட்டை விட்டு வருவதாக அரசியல் விமர்சகர்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்கும் மிக முக்கியமானது புதிய தொழில் முதலீடுகள். ஆனால், தவெக ஆட்சி…
பழனி அருகே சினையாடு திருடி கொன்ற நபர் கைது: இருசக்கர வாகனத்துடன் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு!
பழனி, ஜூலை 29: பழனி அருகே வீட்டின் முன் கட்டப்பட்டிருந்த சினையாட்டைத் திருடிச் சென்று கொன்ற நபரை, ஆட்டின் உரிமையாளர் அவரது தம்பியுடன் சேர்ந்து துரத்திப் பிடித்து ஆயக்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். திண்டுக்கல் மாவட்டம், பழனி தாலுகா, பூலம்பட்டி அஞ்சல், வேப்பன்வலசு தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் கேப்டன் பிரபாகரன் (36). விவசாயக் கூலித் தொழிலாளியான இவர், தனது வீட்டில் 2 வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று (ஜூலை 28) இரவு சுமார் 09.00 மணியளவில், வீட்டின்…
பழனி கோவில் ரூ.100 கோடி நில மோசடி வழக்கு: சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் மேலும் ஒருவர் கைது!
பழனி, ஜூலை 29: பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்குச் சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை, வெறும் ரூ.2 கோடிக்கு போலி ஆவணங்கள் மூலமாக மோசடியாகப் பத்திரம் பதிவு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கு தொடர்பாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள கோவில் நில மோசடி குறித்து சி.பி.சி.ஐ.டி. (CBCID) போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நில ஆவண மோசடி வழக்கில்…
கன்னியாகுமரியில் மேலும் 10 இடங்களுக்கு விரிவாக்கம்: AI கண்காணிப்பால் சாலை பாதுகாப்பை வலுப்படுத்தும் காவல்துறை.
‘Zero Accident Kumari’ இலக்கை முன்னிறுத்தி KAAVAL AI திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை தொடங்கி வைத்தார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின், IPS. கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலை விபத்துகளை குறைத்து, போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்தும் நோக்கில், KAAVAL AI – Automatic Traffic Violation Detection System திட்டம் மேலும் 10 முக்கிய இடங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின், IPS, புதன்கிழமை (29.07.2026) வடசேரியில் நடைபெற்ற…
குடிபோதையில் விவசாயியைத் தாக்கிய நபர் கைது.!
மடத்துக்குளம் அருகே குத்தகைத் தோட்டத்தில் விவசாயம் செய்து வந்த நபரை, குடிபோதையில் தகராறு செய்து தாக்கிய நபரை கணியூர் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுகுறித்து காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்படுவதாவது:கணியூர் காவல்நிலைய எல்லையை ஒட்டியுள்ள காரத்தொழுவு முள்ளங்கி வலசு பகுதியைச் சேர்ந்தவர் கருணாகரன் (55), இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தைக் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இவரது தோட்டத்திற்கு அருகே அதே பகுதியைச் சேர்ந்த பொன்னுச்சாமி (45), என்பவர் விவசாயம் செய்து…
