தமிழ்நாடு
திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்த, தவெக தலைவரும், நடிகருமான விஜய்யின், முன்னாள் மேனேஜர் பி.டி செல்வக்குமார்! விஜய்யின் அரசியல் நகர்வுகள் குறித்து, கடுமையாக விமர்சனம் செய்தார்!
திருநெல்வேலி,டிச.17:- நடிகர் விஜய்யின் மேனேஜர் பி.டி. செல்வக்குமார், இன்று (டிசம்பர்.17) காலையில், திருநெல்வேலியில் செய்தியாளர்களை, சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-“தமிழ்நாடு வெற்றிக்கழகத்தின் நிறுவனர் தலைவர் விஜய்யின் மேனேஜராக, தொடர்ந்தாற்போல் 28 வருடங்கள் பணியாற்றிய நான், ‘புலி’ திரைப்படத்தின் வருமான வரி சோதனையில் சிக்கி இருந்த போதும், எனக்கு உடல்நிலை சரியில்லாத போதும், விஜயிடமிருந்து சிறிதளவு கூட ஆதரவோ, தொலைபேசி அழைப்போ எதுவும் வரவில்லை!” என, குற்றம் சாட்டினார். இதனால், எதிர்காலத்திலும் விஜய் தன்னை கண்டுகொள்ளமாட்டார் என்று உணர்ந்த…
திருநெல்வேலியில் நடைபெற்ற, தமிழ் ஆட்சிமொழிச்சட்ட வாரவிழா, விழிப்புணர்வு பேரணி! அலுவலர் கொடி அசைத்து துவக்கி வைத்த, மாவட்ட வருவாய் அலுவலர்!
திருநெல்வேலி,டிச.17:- பாளையங்கோட்டை தெற்கு பஜார் லூர்து நாதன் சிலை முன்பிருந்து, தமிழ் ஆட்சிமொழிச்சட்ட வாரவிழா விழிப்புணர்வு பேரணியை, இன்று (டிசம்பர்.17) காலையில், மாவட்ட வருவாய் அலுவலர் மு. துரை, பச்சைக்கொடி அசைத்து துவக்கி வைத்தார். தமிழ் ஆட்சிமொழிச்சட்டம் இயற்றப்பட்ட 1956- ஆம் ஆண்டு டிசம்பர் 27-ஆம் தேதியினை நினைவு கூறிடும் வகையில், திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்மொழி ஆட்சிமொழிச்சட்ட வாரவிழா இன்று ( டிசம்பர்.17) முதல், ஒருவார காலம் கொண்டாடப்படுகிறது. முதல் நாளான இன்று ( டிசம்பர்.17) காலையில்,…
விழுப்புரம் மாவட்ட காவல்துறை மேற்கு காவல் நிலையம் புதுச்சேரி மது பானம் விற்றவர் கைது.
மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட GRP தெருவில் புதுச்சேரி மதுபானம் விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் உதவி ஆய்வாளர் திரு.நவநீதகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் தலைமையில் அப்பகுதிகளில் சென்று சோதனை மேற்கொண்டதில் அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த நபரை விசாரணை செய்ததில் புதுச்சேரியில் இருந்து மதுபானம் எடுத்துவந்து விற்பனை செய்வதாக கூறியதை அடுத்து எதிரியிடம் இருந்து 90 ml அளவு கொண்ட 100 பாட்டில்கள் கைப்பற்றப்பட்டு, விசாரணையில் எதிரி விழுப்புரம் நந்தனார் தெருவில் வசிக்கும்…
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள கல்தூண் தர்காவுக்கு சொந்தமான இடத்தில்தான் உள்ளது என்று திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் வக்பு வாரியம் தரப்பு வாதிட்டுள்ளது.
1920ம் ஆண்டு நீதிமன்ற உத்தரவுப்படி மலைமேல் உள்ள பகுதி தர்காவுக்கு சொந்தமானது. நெல்லித்தோப்பு முதல் மலை உச்சிவரை படிக்கட்டு உள்ள பகுதிகளும் தர்காவுக்கு சொந்தம் என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. தீபத்தூண் என கூறப்படும் தூண், தர்கா இடத்தில்தான் உள்ளது. மலை உச்சியில் தீபம் ஏற்றுவது கோவில் மரபு அல்ல என்பது 1862லேயே உறுதி செய்யப்பட்டுள்ளது. தனி நீதிபதி பழைய தீர்ப்புகளில் உறுதிசெய்யப்பட்ட தரவுகளை எல்லாம் கருத்தில் கொள்ளவே இல்லை. மலை உச்சியில் தர்கா இருப்பதால்தான் அது சிக்கந்தர்…
திருநெல்வேலி மாவட்டம் இடையன்குடியில், “என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி! பரப்புரை நிகழ்ச்சிகள்! மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் பங்கேற்பு!
திருநெல்வேலி,டிச.16: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் முகஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, சபாநாயகர் மு.அப்பாவு ஆசியுடன், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் முனைவர் ம.கிரகாம்பெல் வழிகாட்டுதலின்படி, ராதாபுரம் கிழக்கு ஒன்றியத்தில் “என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி!” தேர்தல் பரப்புரை நிகழ்ச்சிகள், இடையன்குடி ஊராட்சி வாக்குச்சாவடி எண்கள் 264 மற்றும் 265 பகுதிகளில், இன்று (டிசம்பர். 16) நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளுக்கு, திருநெல்வேலி மாவட்ட பஞ்சாயத்து மற்றும் மாவட்ட திட்டக்குழு தலைவரும், ராதாபுரம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளருமான வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமை வகித்தார்….
திருநெல்வேலி மாநகராட்சியில் நடைபெற்ற, மக்கள் குறைதீர்க்கும் மனுநாள் முகாம்! துணை மேயர் பங்கேற்று, மாநகர மக்களிடமிருந்து, மனுக்கள் பெற்றார்!
திருநெல்வேலி,டிச.16:-திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலக கூட்டரங்கில் வைத்து, இன்று (டிசம்பர்.16) காலையில் “மக்கள் குறைதீர்க்கும் மனுநாள் முகாம்” நடைபெற்றது. துணைமேயர் கே.ஆர்.ராஜூ, இந்த முகாமில் பங்கேற்று, மாநகர மக்களிடமிருந்து, கோரிக்கை மனுக்களை பெற்றார். அதனை தொடர்ந்து, பெறப்பட்ட, மனுக்கள் மீது, உரிய நடடிவக்கைகளை எடுத்திடுமாறு, சம்பந்தப்பட்ட அலுவர்களிடம், துணை மேயர் கேட்டுக்கொண்டார். உதவி ஆணையாளர் மகாலெட்சுமி, அப்போது உடனிருந்தார். மாநகர மக்கள் கொடுத்த மனுக்களில் குறிப்பிட்டுள்ள, முக்கிய அம்சங்கள் வருமாறு:-14-வது வார்டு கவுன்சிலர் ஆர்.கீதா அளித்த மனுவில்,…
திருநெல்வேலியில் இம்மாதம் 21-ஆம் தேதி நடைபெறும் அரசு விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முடிவுற்ற திட்டங்களை துவக்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், 45,000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கியும், புதிய பேருந்துகளை இயக்கி வைத்தும் பேசுகிறார்! நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே. என். நேரு, நெல்லையில் பேட்டி!
திருநெல்வேலி,டிச.16:- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திருநெல்வேலயில் பங்கேற்கும் விழாக்கள் நடைபெறும் இடங்களை, சபாநாயகர் மு. அப்பாவு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. சுகுமார், மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி, பாளையங்கோட்டைஃதொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு. அப்துல் வகாப், மாநகராட்சி மேயர் கோ. ராம கிருஷ்ணன் ஆகியோர், இன்று (டிச.16) காலையில், நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர். அதன பின்னர், அமைச்சர் நேரு, செய்தியாளரகளிடம்…
எச்ஐவி பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலன்களுக்காக, திருநெல்வேலி மாவட்டம் கூடன்குளம் பகுதியில், நிதி திரட்டும் நிகழ்ச்சி!
திருநெல்வேலி,டிச.15:-நாகர்கோவில் புத்தேரியில் செயல்பட்டு வரும், “CBH மருத்துவமனை”யில் எச்ஐவி வைரசால் பாதிக்கப்பட்டுள்ள 160 குழந்தைகள், சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், எச்ஐவி பாதிக்கப்பட்ட அந்த குழந்தைகளின் நலன்கள், சிகிச்சைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றிற்காக, பொதுமக்களின் உதவியைப் பெறும் வகையில், திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், கூடன்குளம் கிழக்கு பேருந்து நிலையப் பகுதியில் நிதி திரட்டும் நிகழ்ச்சி, இன்று (டிசம்பர். 15) நடைபெற்றது. இந்த நிதி திரட்டும் நிகழ்ச்சி மற்றும் எச்ஐவி பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆகியன, கிழக்கு…
சைபர் பிரிவு மீட்ட மொபைல்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு₹58 லட்சம் மதிப்பிலான 335 மொபைல் போன்கள் மீட்பு – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுரை
கன்னியாகுமரி, திச 15. கன்னியாகுமரி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு மூலம் மீட்கப்பட்ட செல்போன்களை உரிய உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி இன்று (15.12.2025) காலை சரியாக 9.50 மணிக்கு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுமார் ₹58 லட்சம் மதிப்பிலான 335 மொபைல் போன்கள் மீட்கப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஆர். ஸ்டாலின், ஐபிஎஸ், அவர்களால் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர், பொதுமக்கள் அனைவரும் தங்களது மொபைல் போன்களின் IMEI எண்ணை அவசியமாக தெரிந்து…
கோவை மாநகராட்சி 43 வது வார்டுக்குட்பட்ட மாநகராட்சி பூங்காவை சீரமைக்கும் பணிகள் துவக்கம்
கோவை மாநகராட்சி 43- வது வார்டுக்குட்பட்ட R.K நாயுடு லே-அவுட்டில் அமைந்துள்ள மாநகராட்சி பூங்காவை சீரமைக்கும் பணிகளை சற்குரு ட்ரஸ்ட் நிர்வாகம் முன்னெடுத்திருக்கும் இப்பணிகளின் தொடக்க நிகழ்வாக அவினாசிலிங்கம் பல்கலை கழக மாணவிகள் பூங்காவின் சுவர்களுக்கு வர்ணம் பூசும் பணிகளை கல்வி, பூங்கா, மற்றும் விளையாட்டு மைதானங்கள் குழு.தலைவர்,கோவை மாநகராட்சி, வதிருமதி,நா.மாலதிஅவர்கள் துவக்கி வைத்தார். உடன் 43- வது வார்டின் மாமன்ற உறுப்பினர், திருமதி.மல்லிகா புருசோத்தமன்அவர்கள், மற்றும் சற்குரு ட்ரஸ்டின் நிறுவனர் திரு.V.S சுதாகர் அவர்கள்,மற்றும் R.K…
