தமிழ்நாடு
பழனி பங்குனி உத்திரத் திருவிழா: 5,000 பக்தர்களுக்கு ‘பழனி பாலன் நண்பர்கள் குழு’ சார்பில் அன்னதானம்…
பழனி, ஏப். 02:திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உலகப் புகழ்பெற்ற பங்குனி உத்திரத் திருவிழா தற்போது விமர்சையாக நடைபெற்று வருகிறது. முருகப் பெருமானைத் தரிசிக்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகப் பழனிக்கு வருகை தருகின்றனர். பிரம்மாண்ட அன்னதானம்:பக்தர்களின் வசதிக்காகவும், அவர்களின் பசியாற்றும் நோக்கிலும், ‘பழனி பாலன் நண்பர்கள் குழு’ சார்பில் பழனி கிரிவீதி பகுதியில் பிரம்மாண்ட அன்னதான நிகழ்வு நடைபெற்றது. இதில் பாதயாத்திரையாக வந்த 5,000-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு மூன்று வகையான சுவையான சாதங்கள் மற்றும்…
வேட்பாளர் அறிவிப்பில் தாமதம்: தேசியக் கட்சித் தொண்டர்களில் குழப்பம், தேர்தல் களத்தில் பின்னடைவு அச்சம்..!
தமிழ்நாடு, ஏப். 2: தமிழக சட்டமன்றத் தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில், சில தேசியக் கட்சிகள் இன்னும் பல தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவிக்காதது, கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிருப்தியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் பணிகள் நாளுக்கு நாள் வேகமெடுத்து வரும் சூழலில், “யார் வேட்பாளர்?” என்ற அடிப்படைத் தெளிவே இல்லாத நிலை உருவாகியிருப்பதால், நிலத்தடி மட்டத்தில் பணியாற்றும் தொண்டர்கள் மக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரிப்பதிலும், பிரச்சாரத் திட்டங்களை முன்னெடுப்பதிலும் சிரமம் அனுபவித்து…
கூட்டணிக் கட்சிகளுக்கு ‘டஃப்’ கொடுக்கும் திமுக: 2021-ல் அதிமுக வென்ற 29 தொகுதிகள் ஒதுக்கீடு – முழுமையான அலசல்!
வரவிருக்கும் 2026 சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலுக்கான திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தொகுதிப் பங்கீடு விவரங்கள் அரசியல் களத்தில் சூட்டைக் கிளப்பியுள்ளன. ஆளும் கட்சியான திமுக இம்முறை கையாண்டுள்ள தொகுதிப் பங்கீட்டு வியூகம் பலரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது. குறிப்பாக, கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக, பாமக மற்றும் பாஜக ஆகிய எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்ற 29 முக்கிய தொகுதிகளை, இம்முறை திமுக தனது கூட்டணிக் கட்சிகளின் வசம் ஒப்படைத்துள்ளது. கூட்டணிக் கட்சிகளிலேயே அதிகபட்சமாக காங்கிரஸ்…
பழனி PSKL Lilliputs Montessori பள்ளியின் 7-ஆம் ஆண்டு விழா: தமிழ்க் கலாச்சார முறைப்படி ‘VISHWA’26’ கோலாகலம்!
பழனி | மார்ச் 26, 2026 திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள PSKL Lilliputs Montessori பள்ளியின் 7-ஆம் ஆண்டு விழா, “VISHWA’26 – தமிழ் கலாச்சாரம்” என்ற கருப்பொருளில் (Theme) தனியார் மஹாலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. மங்களகரமான தொடக்கம்விழாவிற்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினரை மங்கள வாத்தியங்கள் முழங்க உற்சாகமாக வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து, குத்துவிளக்கேற்றி விழா முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டது. முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்புஇவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக திரு.ஏங்கள்ஸ்…
தேவாலய பாதுகாப்பில் காவல் துறை வெற்றி “மன அமைதியுடன் வழிபாடு செய்தோம்” – மாணவி பாராட்டு
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்ட காவல் துறையின் செயல்திறன் பொதுமக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்று வருகிறது. குறிப்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எஸ்.பி. ஸ்டாலின் தலைமையில் 2025 கிறிஸ்துமஸ் திருவிழா காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செயல்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், நாகர்கோவில் சேர்ந்த மாணவி என். நேத்ரா தேவி, “இந்த ஆண்டு மன அமைதியுடன் தேவாலயத்திற்கு சென்று வர முடிந்தது” எனக் கூறி, நேரில் சந்தித்து பாராட்டு பத்திரம் வழங்கினார். காவல் துறையின் விழிப்புணர்வு…
திமுக தான் என் மூச்சு… ஆனால் என் குரல் யாருக்காவது கேட்கிறதா?’ – அடிமட்ட தொண்டனின் கொந்தளிப்பு!
“கலைஞர் என் பேச்சு, தளபதி என் நாடித்துடிப்பு… ஆனால் அங்கீகாரம் எங்கே?” – உருக்கும் உண்மை வெளிப்பாடு திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிமட்ட தொண்டர்களிடையே கொந்தளிப்பு நிலை உருவாகி வருவதாக தகவல்கள் வெளியாகின்றன. “திமுக தான் என் மூச்சு… கலைஞர் தான் என் பேச்சு… தளபதி தான் என் நாடித்துடிப்பு…” என்று உயிரோடு இணைத்துப் பற்றிக்கொண்டு வாழும் ஒரு அடிமட்ட தொண்டன், இன்று தனது உள்ளக் குமுறலை வெளிப்படுத்தியுள்ளார். கட்சிக்காக பகலும் இரவும் பாராமல் உழைக்கும் தொண்டர்களின்…
கோவை மாவட்டம் கரும்பு கடை பகுதியில் ஈகைத் திருநாள் தொழுகை.
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவைக் கிளை சார்பில் ஈகைத் திருநாள் பெருநாள் தொழுகை இன்று காலை 7 மணிக்கு இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. கோவை மாவட்ட தலைவர் ஜனாப் PS. உமர் ஃபாரூக் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி அவர்கள் தொழுகையை நடத்தி வைத்தார். உலக அமைதி மற்றும் ஒருங்கிணைந்த முன்னேற்றத்திற்காக சிறப்பு பிரார்த்தனையையும் அவர் முன்னெடுத்தார்.நிகழ்வை அப்துல் ஹக்கீம் ஒருங்கிணைந்தார். இதில் ஆண்கள்-பெண்கள் என 15000 திற்கும்…
“நாங்கலாம் விசில் அடிக்கிறப்ப…” – நேரலை விவாதத்தில் பொறுமையிழந்து அமைச்சர் மனோ தங்கராஜ் ஆவேசம்!
நாகர்கோவில், மார்ச் 20 : தனியார் தொலைக்காட்சியில் நாகர்கோவில் நாகராஜா கோவில் பகுதியில் இன்று (மார்ச் 19) நடைபெற்ற அரசியல் விவாத நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்களாக இளைஞர்கள், அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர். விவாதத்தின் போது அமைச்சர் பேசத் தொடங்கியதும், கூட்டத்தில் இருந்த சில இளைஞர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகத் தொடர்ந்து விசில் அடித்தும், கிண்டல் செய்தும் இடையூறு…
பழனி அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியின் சார்பாக கல்லூரியின் 60 வது ஆண்டு கல்லூரி விளையாட்டு விழா
பழனி அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியின் சார்பாக கல்லூரியின் 60 வது ஆண்டு கல்லூரி விளையாட்டு விழா கல்லூரி தாளாளர் மற்றும் செயலாளர் வழிகாட்டல் படி கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் கல்லூரியின் முதல்வர் முனைவர் ப.த ரவிசங்கர் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். முன்னிலை வகித்தார். கல்லூரியின் தாளாளராக செயலாற்றி வரும் அருள்மிகு பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் இணை ஆணையர் செ. மாரிமுத்து அவர்கள் மற்றும் துணை ஆணையர் வெங்கடேஷ் விளையாட்டு விழாவிற்கு தலைமை தாங்கி…
உதவியாளர்களின் பிடியில் முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ்?” – சமூக ஊடகங்களில் வெளியிட்ட பகீர் வீடியோவால் கன்னியாகுமரியில் பரபரப்பு!
கன்னியாகுமரி: முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜின் பின்புல நிகழ்வுகளை பேசுவதாகக் கூறி இணையத்தில் வெளியாகியுள்ள ஒரு வீடியோ, கன்னியாகுமரி மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. அந்த வீடியோவில், முன்னாள் அமைச்சர் தன்னைச் சுற்றி ஒரு குறிப்பிட்ட நபர்களை மட்டுமே வைத்துள்ளதாகவும், உண்மையான கட்சித் தொண்டர்களுக்கும் அவருக்கும் இடையே பெரும் இடைவெளி இருப்பதாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. தன்னை ஜெய தங்கராஜ் அறிமுகப்படுத்திக்கொள்ளும் அந்த நபர், முன்னாள் அமைச்சர் பொதுமக்களுக்கோ, கட்சிக்காரர்களுக்கோ எளிதில் கிடைப்பதில்லை என்று…
