தமிழ்நாடு
வல்லம் அன்னை தெரேசா ஆர் சி மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதி வண்டி வழங்கும் விழா.
தென்காசி ஜனவரி 8 தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்துள்ள அன்னை தெரேசா ஆர் சி மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 110 மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை மூலமாக வழங்கப்படும் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தென்காசி மேற்கு ஒன்றிய செயலாளர் வல்லம் திவான் ஒலி தலைமை வகித்தார் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆரோக்கியராஜ் வருகை தந்த அனைவரையும் வரவேற்று பேசினார் இப்பள்ளியானது வல்லம் பகுதியில் அதிகமான மாணவ மாணவிகளை கல்விப்…
கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 80-வது வார்டில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்.
தமிழர் திருநாளாம் தைப் பொங்கலை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக கோவை மாநகராட்சி மத்திய மண்டலம், 80-வது வார்டுக்கு உட்பட்ட அனைத்து நியாய விலைக் கடைகளிலும் பொதுமக்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் விழா மேள தாளங்கள் முழங்க,பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில், கோவை மாநகராட்சி பொது சுகாதாரக் குழுத் தலைவரும், 80-வது வார்டு மாமன்ற…
தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் விழாவை பழனியில் சட்டமன்ற உறுப்பினர் ஐ.பெ.செந்தில்குமார் துவக்கிவைத்தார்.
பழனி, ஜனவரி : 08, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். அரிசி குடும்ப அட்டைதார்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புடன், ரூ_3000 ரொக்கம் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்ததை தொடர்ந்து. பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பெ.செந்தில்குமார் அவர்கள் தலைமையில், திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்றத் தொகுதி திண்டுக்கல் சாலையில் உள்ள அமுதம் அங்காடி நியாய விலை கடை எண் 2ல் அரிசி குடும்ப அட்டைதார்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3000 வழங்கி துவங்கி வைத்தார். இந்நிகழ்வில்…
தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் விழா திருமலாபுரத்தில் துவக்கி வைப்பு.
தென்காசி ஜனவரி 8. தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்துள்ள தேன் பொத்தை ஊராட்சிக்கு உட்பட்டதிருமலாபுரம் பகுதியில் அமைந்துள்ள நியாய விலை கடையில் தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது இந்நிகழ்வில் 8 ஊராட்சி மன்ற தலைவி பார்வதி கனி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தென்காசி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் வல்லம் திவான் ஒலி கலந்து கொண்டு பொங்கல் தொகுப்பாக கரும்பு பச்சரிசி சர்க்கரை வேஷ்டி சேலை ரூபாய் 3000 அடங்கிய தொகுப்பை…
மதுரையில் பொங்கல் பரிசுத்தொகுப்பு!
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜன.08) சென்னையில்தொடங்கிவைக்கிறார் இதனை தொடர்ந்து மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள நியாய விலைக் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது. பயனாளிகள் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தார்கள். 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 710 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு…
திருநெல்வேலி செட்டிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பசுமை பள்ளி திட்டம் – எவர்கிரீன் ரோட்டரி சங்கம் சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி.
திருநெல்வேலி செட்டிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், எவர்கிரீன் ரோட்டரி சங்கத்தின் சார்பில் பசுமை பள்ளி திட்டம் கீழ் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி எவர்கிரீன் சங்கத்தின் தலைவர் ரொட்டேரியன் திருமதி சுபா செந்தில் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ரொட்டேரியன் திரு செந்தில் அவர்கள் கலந்து கொண்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம் குறித்து மாணவிகளுக்கு எடுத்துரைத்தார். மேலும், சங்கத்தின் செயலாளர் ரொட்டேரியன் அன்டின் விஜிலா மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் பேசில் காகரின்…
மாண்புமிகுதமிழ்நாடுமுதலமைச்சர்திரு.மு.க.ஸ்டாலின்அவர்கள்இன்று (7.1.2026) திண்டுக்கல்மாவட்டம், வேலுநாச்சியார்வளாகத்தில்நடைபெற்றஅரசுவிழாவில், முடிவுற்றபணிகளைதிறந்துவைத்து, புதியதிட்டப்பணிகளுக்குஅடிக்கல்நாட்டி, பல்வேறுதுறைகளின்சார்பில்பயனாளிகளுக்குஅரசுநலத்திட்டஉதவிகளைவழங்கி, ஆற்றியஉரை.
திண்டுக்கல் மாவட்ட அரசு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்துக் கொண்டிருக்கக்கூடிய மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் திரு. ஐ. பெரியசாமி அவர்களே, திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்களே, திரு. பெரியகருப்பன் அவர்களே, திரு. சக்கரபாணி அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அருமை சகோதரி ஜோதி மணி அவர்களே, திரு. சச்சிதானந்தம் அவர்களே, சட்டமன்ற உறுப்பினர்கள் அன்புக்குரிய தம்பி செந்தில்குமார் அவர்களே, திரு. காந்திராஜன் அவர்களே, வாரியத்தின் தலைவர் ரங்கநாதன் அவர்களே, மாநகராட்சி மேயர் திருமதி இளமதி அவர்களே, கூடுதல் தலைமைச் செயலாளர்…
திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில்ரூ.1,594.90 கோடி செலவிலான 111 முடிவுற்ற திட்டப் பணிகளைதிறந்து வைத்து, 212 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி,2,62,864 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளைமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள்வழங்கினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (7.1.2026) திண்டுக்கல் மாவட்டம், வேலுநாச்சியார் வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில், 337 கோடியே 84 இலட்சம் ரூபாய் செலவிலான 111 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 174 கோடியே 20 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான212 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு துறைகளின் சார்பில் 2,62,864 பயனாளிகளுக்கு 1082 கோடியே 86 இலட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். திண்டுக்கல் மாவட்டத்தில் திறந்து வைக்கப்பட்ட முடிவுற்ற…
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் புதிய மாவட்ட செயலாளர்கள் அறிவிப்பு.
நாகர்கோவிலில் அம்பேத்கர், காமராஜர், பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் புதிய 3 மாவட்ட செயலாளர்கள் மற்றும் மகளிர் விடுதலை இயக்க மாநில துணைச் செயலாளர் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, இன்று மாலை நாகர்கோவில் நகரில் அண்ணல் அம்பேத்கர், கர்மவீரர் காமராஜர் மற்றும் பெரியார் திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வீரவணக்கம் முழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் நாகர்கோவில் மாநகர தொகுதி மாவட்ட செயலாளர் டாக்டர் ஷேக் முகமது, குளச்சல் தொகுதி மாவட்ட…
ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம் பழனி பெரியகலையம்புத்தூர் ஐ கோர்ட் பத்ரகாளியம்மன் கோவிலில் நடைபெற்றது.
பழனியை அடுத்துள்ள நெய்க்காரப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பெரியகலையம்புத்தூரில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். அங்குள்ள ஐ கோர்ட் பத்திரகாளியம்மன் கோவில் வாடிவாசலில் பாரம்பரிய முறைப்படி காளைகளை அவிழ்த்துவிடப்பட்டு இந்த ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான ஜல்லிக்கட்டுப் போட்டி மாவட்ட ஆட்சியரின் அனுமதியுடன் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம் பெரியகலையம்புத்தூர் ஐ கோர்ட் பத்ரகாளியம்மன் கோவிலில் நேற்று நடந்தது….
