Headlines
குமரி மலைகள், குவாரிகள் மற்றும் சுற்றுச்சூழல்: எழும் கேள்விகள்

குமரி மலைகள், குவாரிகள் மற்றும் சுற்றுச்சூழல்: எழும் கேள்விகள்?

குவாரிகள் மீண்டும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து கவலை அதிகரிப்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் மூடப்பட்டிருந்த சில குவாரிகள் மீண்டும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டதாகக் கூறப்படும் தகவல்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, மலைப்பகுதிகளில் நடைபெறும் கனிமவளச் சுரங்கப் பணிகள் நீண்டகால சுற்றுச்சூழல் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சம் மீண்டும் எழுந்துள்ளது. குவாரிகள் திறக்கப்பட்டதற்கான காரணமாக மாவட்டத்தின் கட்டுமானத் தேவைகளுக்கு கனிமவளம் அவசியம் என்ற விளக்கம் முன்வைக்கப்படுவதாகக்…

Read More
கர்மவீரர் காமராஜருக்கு மரியாதை; ஆற்றூரில் தமிழக வெற்றிக் கழகத்தினர் பிறந்தநாள் விழா

கர்மவீரர் காமராஜருக்கு மரியாதை; ஆற்றூரில் தமிழக வெற்றிக் கழகத்தினர் பிறந்தநாள் விழா

மலர்தூவி அஞ்சலி செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கன்னியாகுமரி மத்திய மாவட்ட செயலாளர் எஸ். கிருஷ்ணகுமார் தலைமையில், ஆற்றூர் பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கர்மவீரர் காமராஜரின் 124-வது பிறந்த நாள் நினைவு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், கர்மவீரர் காமராஜரின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, அவரது பொதுச்சேவையையும் கல்வி வளர்ச்சிக்கான பங்களிப்பையும் நினைவுகூரும் வகையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட நிர்வாகிகள்,…

Read More
திற்பரப்பில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த பன்றிப் பண்ணை நிரந்தரமாக மூடப்பட்டது.

திற்பரப்பில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த பன்றிப் பண்ணை நிரந்தரமாக மூடப்பட்டது.

தமிழக வெற்றிக் கழக நிர்வாகியின் முயற்சிக்குப் பிறகு நிர்வாக நடவடிக்கை; வட்டாட்சியர் அலுவலகத்தின் உதவியுடன் சீல் வைக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு பகுதியில் பொதுமக்களுக்கு நீண்டகாலமாக இடையூறாக இருந்து வந்ததாகக் கூறப்பட்ட பன்றிப் பண்ணை, செவ்வாய்க்கிழமை (14.07.2026) நிர்வாக நடவடிக்கையின் மூலம் சீல் வைக்கப்பட்டு நிரந்தரமாக மூடப்பட்டது. இந்த நடவடிக்கை, தமிழக வெற்றிக் கழகத்தின் மத்திய மாவட்ட செயலாளர் எஸ். கிருஷ்ணகுமார் மேற்கொண்ட தொடர் முயற்சிகளின் பின்னர், திருவட்டார் வட்டாட்சியர் அலுவலகத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தப்…

Read More
அரசுப் பேருந்து பாதுகாப்பு: பராமரிப்பு குறைபாடுகள் குறித்து மீண்டும் எழும் கேள்விகள்

அரசுப் பேருந்து பாதுகாப்பு: பராமரிப்பு குறைபாடுகள் குறித்து மீண்டும் எழும் கேள்விகள்.

கன்னியாகுமரியில் பேருந்து கதவுகளின் செயல்பாடு குறித்து பொதுமக்கள் கவலை; பாதுகாப்பு ஆய்வை வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் இயக்கப்படும் சில தமிழக அரசுப் பேருந்துகளின் பராமரிப்பு நிலை மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கவலை தெரிவித்துள்ளனர். குறிப்பாக, சில பேருந்துகளில் தானியங்கி கதவுகள் முறையாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் மீண்டும் முன்வைக்கப்பட்டுள்ளன. பயணிகள் கூறுவதன்படி, சில பேருந்துகளில் கதவுகள் முழுமையாக மூடப்படாமல் அல்லது திறந்த நிலையிலேயே இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதுபோன்ற நிலை,…

Read More
அங்கன்வாடி ஊழியர்கள் குறித்து சமூக வலைத்தள பதிவு: பெண் ஒருவர் கைது

அங்கன்வாடி ஊழியர்கள் குறித்து சமூக வலைத்தள பதிவு: பெண் ஒருவர் கைது

கன்னியாகுமரி சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை; புகாரின் அடிப்படையில் விசாரணை தீவிரம் கன்னியாகுமரி மாவட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு மற்றும் தரக்குறைவான கருத்துகள் பதிவிட்டதாகக் கூறப்படும் புகாரின் பேரில், 36 வயதுடைய பெண் ஒருவரை சைபர் கிரைம் போலீசார் செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர். அங்கன்வாடி ஊழியர்கள் அரசாங்கம் வழங்கும் பொருட்களை குழந்தைகளுக்கு வழங்காமல், அவற்றை தனிப்பட்ட முறையில் பயன்படுத்தி லாபம் அடைவதாக சமூக வலைத்தளங்களில் பதிவுகள் வெளியிடப்பட்டதாக அங்கன்வாடி ஊழியர்களின் கூட்டமைப்பு காவல்துறையில்…

Read More
திண்டுக்கல்லில் ஆட்டோ ஓட்டுநர்கள் நல சங்க முப்பெரும் விழா கோலாகலம்: 666 ஓட்டுநர்களுக்கு இலவச சீருடை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி அசத்தல்!

திண்டுக்கல்லில் ஆட்டோ ஓட்டுநர்கள் நல சங்க முப்பெரும் விழா கோலாகலம்: 666 ஓட்டுநர்களுக்கு இலவச சீருடை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி அசத்தல்!

திண்டுக்கல்: திண்டுக்கல்லில், திண்டுக்கல் டவுன் ஆட்டோ ஓட்டுநர்கள் நல சங்கத்தின் 3-ஆம் ஆண்டு விழா, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இலவச சீருடை வழங்கும் விழா மற்றும் சங்கத் தலைவர் கே. ரெத்தினத்தின் 66-வது பிறந்தநாள் விழா ஆகிய முப்பெரும் விழா மிகக் கோலாகலமாக நடைபெற்றது. திண்டுக்கல் சலங்கை ஒலி நடனப்பள்ளி மாணவிகளின் சிறப்பான வரவேற்பு நடனத்துடன் விழா இனிதே தொடங்கியது. முனைவர் காதர் பாட்சா அனைவரையும் வரவேற்றுப் பேசினார். இவ்விழாவிற்கு திண்டுக்கல் மாநகர ஆட்டோ ஓட்டுநர்கள் நல அறக்கட்டளை…

Read More
பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார்

பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார்

தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்’ எனப் பரவலாக அறியப்பட்ட புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகி, 2026 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி தனது 88 ஆவதுவயதில் காலமானார் . வயது முதிர்வு தொடர்பான நோய்கள் காரணமாகமைசூரில் உள்ள அப்போலோ மருத்துவமனையில்அவர் உயிர் நீத்தார் . தொழில் சிறப்பம்சங்கள்மகத்தான படைப்பு:ஆறு தசாப்தங்கள் நீடித்த தனது இசைப்பயணத்தில் , தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி உட்பட 17க்கும் மேற்பட்ட மொழிகளில்ஏறக்குறைய 48,000 பாடல்களை அவர் பதிவு…

Read More
கோவை மாவட்ட செங்கல் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் 3 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நிறைவு!

கோவை மாவட்ட செங்கல் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் 3 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நிறைவு!

கோவை மாவட்ட செங்கல் லாரி உரிமையாளர் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த மூன்று நாள் வேலைநிறுத்தப் போராட்டம் நேற்றுடன் (ஜூலை 8) நிறைவடைந்தது. வெளி மாவட்டங்களில் இருந்து கோவைக்கு வரும் லாரிகளில், அனுமதிக்கப்பட்ட குறிப்பிட்ட அளவிலான பாரத்தை மட்டுமே (Overloading தவிர்த்து) ஏற்ற வேண்டும் என்று வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது. இவ்வாறு சரியான அளவில் பாரம் ஏற்றி வரும்போது, செங்கல் விலையில் சிறிதளவு உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது என்றும், இதற்குப் பொதுமக்கள் முழு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும்…

Read More
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் வீதிநாடகம்: ஜி.வி.ஜி கல்லூரி மாணவிகள் அசத்தல்!

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் வீதிநாடகம்: ஜி.வி.ஜி கல்லூரி மாணவிகள் அசத்தல்!

உடுமலை ஸ்ரீ ஜி.வி.ஜி. விசாலாட்சி மகளிர் கல்லூரி நாட்டுநலப்பணித் திட்டம் (NSS) மற்றும் கணியூர் காவல் நிலையம் இணைந்து, கணியூர் பேருந்து நிலையத்தில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் வீதிநாடகத்தை நடத்தினர். திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி சிருஷ்டி சிங், IPS அவர்களின் உத்தரவின்படியும், உடுமலைப்பேட்டை காவல் துணைக் கண்காணிப்பாளர் திருமதி தையல் நாயகி DSP அவர்களின் மேற்பார்வையிலும் இந்நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடைபெற்றது. கணியூர் காவல் உதவி ஆய்வாளர் திரு. கார்த்திக்குமார், காவலர்கள் திரு….

Read More
விழிப்புணர்வின் பலன்: மூன்று மாணவிகள் புகார் அளிக்க வழிவகுத்த காவல் அதிகாரிக்கு பாராட்டு

விழிப்புணர்வின் பலன்: மூன்று மாணவிகள் புகார் அளிக்க வழிவகுத்த காவல் அதிகாரிக்கு பாராட்டு.

09 ஜூலை; நெல்லை நியூஸ் திருநெல்வேலியில் சிங்கப்பெண் சிறப்புப் படையின் செயல்பாட்டை பாராட்டிய சரக டிஐஜி திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் சிங்கப்பெண் சிறப்புப் படை மேற்கொண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியாக, மூன்று மாணவிகள் தங்களுக்கு நேர்ந்த குற்றச் சம்பவங்களை வெளிக்கொண்டு வந்து காவல்துறையை அணுகியுள்ளனர். இந்த முயற்சிக்கு முக்கிய பங்காற்றிய சிங்கப்பெண் அதிரடிப்படை உதவி ஆய்வாளர் ஜெசி மேனகாவை நெல்லை சரக காவல்துறை டிஐஜி திருநாவுக்கரசு நேரில் அழைத்து பாராட்டினார். மாணவிகள் தங்களுக்கெதிராக நடைபெற்ற…

Read More