தமிழ்நாடு
திருநெல்வேலி மாவட்டத்தில், ஜாதி சார்ந்த பிரச்சனைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்தும் நோக்கில், மாவட்ட காவல்துறையினரால் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் விளைவாக, குறிப்பிடத்தக்க அளவில் குற்றங்கள் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளன! மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிலம்பரசன் தகவல்!
திருநெல்வேலி, அக். 2:-திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை. சிலம்பரன், இன்று ( அக்டோபர். 2) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் குறிப்பிட் டிருப்பதாவது:-“சமீப காலங்களில், சமூக ஊடகங்கள் வாயிலாக, சில இளைஞர்கள் தங்களது சமுதாயத்தை உயர்த்தும் விதமாகவும், பிற சமுதாயங்களை தரம் தாழ்த்தும் விதமாகவும், உள்ளடக்கங்களை பகிர்ந்து வருகின்றனர். இது, சமூகத்தில் ஜாதிய உணர்வுகளை தூண்டும் அபாயத்தை உருவாக்கி, பொதுமக்களிடையே தவறான புரிதல்கள் மற்றும் குழப்பங்களை ஏற்படுத்தும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. சமூக அமைதிக்கு இடையூறாக…
உடுமலையில் உள்ள பல்வேறு கோவில் மற்றும் பள்ளிகளில் இன்று விஜயதசமி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு குழந்தைகளுக்கு எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி நடந்தது.
அக் 02. உடுமலை திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள பல்வேறு கோவில்களில் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது இதன் ஒரு கட்டமாக இன்று 10 நாள் நிகழ்ச்சி விஜயதாசமியாக கொண்டாடப்பட்டு வருகிறது. மகிஷாசுரன் எனும் அரக்கனை தேவி பல்வேறு அவதாரங்கள் எடுத்து போரிட்டு இறுதியில் 10-ம் நாளில் மகிஷாசுரனை அளித்தார் என்பது புராண கால வரலாறு,வெற்றியின் நாளாக கருதப்படும் விஜயதசமி நாளில் தொடங்கப்படும் எந்த காரியமும் வெற்றியில் முடியும் என்பது மக்களில் நம்பிக்கை, அதன் படி…
சாலையோர கடைகளினால் விபத்து ஏற்படும் அபாயம்….
பெரிய விபத்து ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்படுவதற்கு முன்பாக காவல்துறையினர் அல்லதுதேசிய நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?…. என்று பொதுமக்கள் கேள்வி..? நீலகிரி மாவட்டம் கேத்தி ராஜ்குமார் நகர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து பலர் கடைகளை அமைத்து சுற்றுலா பயணிகளை தொந்தரவு செய்வதும் அல்லாமல் சுற்றுலா பயணிகள் அவர்கள் வரும் வாகனத்தை நிறுத்தி இயற்கை ரசிக்கக் கூடிய இடத்தை ஆக்கிரமித்து உள்ளதால் இங்கு பெரும் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது இதனால் அங்கு விபத்துகள் நடந்த வண்ணம் உள்ளது….
முதலமைச்சர் கோப்பை 2025 சென்னை போட்டியில் பங்கேற்கும் மாணவ மாணவிகளுக்கு பேருந்து பயணத்தை துவக்கி வைத்தல்..
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் சார்பில் கோவையில் நடைபெற்ற தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை 2025 விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவி மாணவிகள் சென்னையில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க பயணம் மேற்கொள்ளும் மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து பேருந்து பயணத்தை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கணபதி ராஜ்குமார் அவர்கள் கொடியாசித்து துவக்கி வைத்தார். அப்போது உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர். கோவை மாநகராட்சி மேயர் திருமதி ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள் மற்றும் துறை சார்ந்த…
கடலூர் : இரண்டு கார் மோதி விபத்து..!
கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஆர்டியோ ஆபீஸ் ஆருகே இரண்டு கார் மோதி விபகுக்குள்ளானது. இந்த விபத்தில் உள்ளே இருந்தவர்களுக்கு எந்தவித்த பாதிப்பும் இல்லை. கார் விபத்தில் பாதிப்பு இல்லாததினால் இரண்டு தரபிணறும் பேச்சி வார்த்தை நடத்துகிண்டனர். பண்ருட்டி செய்தியாளர் – R. விக்னேஷ்.
திருநெல்வேலியில், அண்ணல் மகாத்மா காந்தியடிகளின் 157-வது பிறந்தநாள்.! பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலை வளாகத்தில், கூட்டாக தூய்மைப்பணிகளை மேற்கொண்ட, மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள்.!
திருநெல்வேலி, அக்டோபர். 2:- “அண்ணல்” மகாத்மா காந்தியடிகளின், 157-வது பிறந்த நாளை முன்னட்டு, திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளரும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான டாக்டர் மோனிகா ராணா உத்தரவின்பேரில், இன்று ( அக்டோபர். 2) மேலப்பாளையம் மண்டலம், பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலை காவலர்கள் குடியிருப்புப் பகுதியில், மாநகர் நல அலுவலர் (CITY HEALTH OFFICER) பொறுப்பு வகிக்கும் டாக்டர்.ராணி தலைமையில், மத்திய சிறைச்சாலை கண்காணிப்பாளர் செந்தாமரை கண்ணன் முன்னிலையில், மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் 100 பேர் சிறைக்காவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள்…
நாகர்கோவில் ஹோலி கிராஸ் மகளிர் கல்லூரியில், தமிழ் துறை சார்பில் மாணவிகளுக்கான சான்றிதழ் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது..
கன்னியாகுமரி, அக். 02 – இந்த விழாவில் திராவிட முன்னேற்ற கழகத்தின் கழக அமைப்பு சாரா ஓட்டுநர் அணியின் மாநில துணை செயலாளரும், ராதாபுரம் சட்டமன்ற தொகுதி பார்வையாளருமான வழக்கறிஞர் மு. சிவராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும், இந்நிகழ்வில் தமிழ் துறையின் விரிவுரையாளர்கள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் பெருமளவில் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினருடன் இணைந்து டாக்டர் திரு. வேல்ராஜ் நிகழ்வில் பங்கேற்று மாணவிகளை வாழ்த்திப் பேசினார்….
தென்காசியில் புதியதோர் உதயம்அமிசோ எழில்முகில் பேமிலி ஸ்டோர் திறப்பு விழா.
தென்காசி: அக்- 01 தென்காசி மாவட்டத்தில் தென்காசி நகரில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு மிக அருகில் புதியதோர் உதயமாக அமிசோ எழில் முகில் பேமிலி ஸ்டோர் திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமிசோ பிராண்ட் நிர்வாகி ஹரி கிருஷ்ணன் தலைமை வகித்தார்.தலைமை ஆசிரியர்கள் கவிதா, கற்பகம் , ஆரோக்கிய சாமி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை அமிஷோ எழில் முகில் பேமிலி ஸ்டோர் நிர்வாகி இளமுருகன் வரவேற்றார். அலங்கார் லாட்ஜ் உரிமையாளர் தொழிலதிபர்…
திருப்பூர் மாவட்டம்; காங்கேயம் தொழில்நுட்பக் கல்லூரியின் (KIT), பெருமையுடன் மகாத்மியம்’25 என்ற பண்பாட்டு மற்றும் கல்வி விழா சிறப்பாக நடைபெற்றது.
வரவேற்புரை ஆற்றிய முதல்வர் டாக்டர் ராம்குமார் எஸ். மகாத்மியம் 25 நிகழ்வின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, மதிப்புகளை வளர்த்தல், பாரம்பரியத்தை கௌரவித்தல் மற்றும் கூட்டு சாதனைகளை கொண்டாடும் ஒரு தளமாக இதை சுட்டிக்காட்டினார் தொடர்ந்து காங்கேயம் தொழில்நுட்பக் கல்லூரியின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் மஹேந்திர கவுடா ஆர்.வி. அவர்கள், இளம் மனங்களை வலுப்படுத்த கல்வியின் பங்கை வலியுறுத்தி. தலைமைத்துவம், படைப்பாற்றல் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வளர்க்க கல்வி நிறுவனங்களின் பொறுப்பை நினைவூட்டினார். அதன்பின், இரண்டாம் ஆண்டு AI…
உடுமலை அருகே எரிசனம்பட்டி ஊராட்சியில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே எரிசனம்பட்டி பஸ் நிறுத்தம் முன்பு கடந்த செப்டம்பர் 27 அன்று தவெக கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக எரிசனம்பட்டி வியாபாரிகள் சங்கம் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. மேலும் இந்த நிகழ்வில் உயிர் இழந்தவர்களுக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுஇதில் எரிசனம்பட்டி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து…
