தமிழ்நாடு
நாகர்கோவில்: எவர்கிரீன் ரோட்டரி – குமரி மாவட்ட காவல் துறை இணைந்து பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
நாகர்கோவில் எவர்கிரீன் ரோட்டரி சங்கமும், கன்னியாகுமரி மாவட்ட காவல் துறையும் இணைந்து, பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வு குறித்த சிறப்பு நிகழ்ச்சியை எஸ்.எம்.ஆர்.வி. ஐ.டி.ஐ வளாகத்தில் நடத்தினர். அச்சங்கத்தின் தலைவர் சுபா செந்தில் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் இரா. ஸ்டாலின், ஐ.பி.எஸ். அவர்களின் அறிவுறுத்தலின்படி, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. மதியழகன் மற்றும் AHTU விங் அதிகாரி தாமஸ் லைஸா ஆகியோர் கலந்து கொண்டு மாணவிகளுக்கு விரிவான…
ஊருக்கு ஒரு காவலர் திட்டம் வெற்றி நடை.
மருத்துவர் இரா. ஸ்டாலின் எஸ்.பி. அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நாகர்கோவில் மாநகர தொகுதி மாவட்ட செயலாளரும், ரஹ்மத் கார்டன் ஊர் ஜமாஅத் தலைவருமான ஷேக் முகமது பாராட்டு கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் இரா. ஸ்டாலின் தலைமையில் செயல்படுத்தப்பட்டு வரும் ‘ஊருக்கு ஒரு காவலர்’ திட்டம், மாவட்டம் முழுவதும் சிறப்பாக நடைமுறையில் இருந்து வருகிறது. பொதுமக்கள் பாதுகாப்பை முதன்மை நோக்கமாகக் கொண்டு செயல்படும் இந்தத் திட்டம், ஊர் மட்டத்தில் நேரடி கண்காணிப்பை உறுதி செய்து,…
திண்டுக்கல் அருகே விதிகளை மீறி செயல்படும் கல் குவாரி மீது உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்.
திண்டுக்கல் ரெட்டியார் சத்திரம் பகுதி கிழக்கு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு உட்பட்ட தாடிக்கொம்பு அடுத்துள்ள கோவில்பட்டி, குருநாத நாயக்கனூரில் விதிகளை மீறி கல்குவாரி ஒன்று ஐந்து ஆண்டுகளுக்கு கடின பாறைகளை உடைத்து கற்களாக மாற்றும் உரிமத்தை மணிக்கண்ணன் மகன் சங்கர் என்பவர் பெற்றுள்ளார். பொதுவாக அரசு ஒப்பந்தம் பெரும் தொழில்களில் அனைத்து விதிகளையும் பின்பற்ற முடியாது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் பொதுமக்களுக்கு விரோதமாகவும் ஆபத்தான முறையில் எந்த ஒரு விதியையும் பின்பற்றாமல் விதிகளை மீறி இந்தக் கல்குவாரி…
கன்னியாகுமரி–திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதை பணிகள் தீவிரம் – இரண்டு ஆண்டுகளில் நிறைவு.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகர்கோவில் மாநகர தொகுதி மாவட்ட செயலாளர் சேக் முகமது விடுத்துள்ள வரவேற்பு அறிக்கையில் தெரிவித்திருப்பது கன்னியாகுமரி–திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதை,கன்னியாகுமரி ரயில் நிலைய மேம்பாடு,அமிருத் பாரத் ரயில் சேவை – வரவேற்பு கன்னியாகுமரி–திருவனந்தபுரம் இடையே இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதும், இரண்டு ஆண்டுகளில் நிறைவு பெற உள்ளதாகவும் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என். சிங் அறிவித்துள்ள செய்தியை நாகர்கோவில் மாநகர தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மகிழ்ச்சியுடன்…
வல்லம் செய்யது மசூது திவான் ஒலி காட்டுப்பள்ளி வாசல் கொடி ஏற்றும் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
தென்காசி ஜனவரி 21 தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்துள்ள வல்லம் காட்டுப் பகுதியில் அமைந்துள்ள செய்யது மசூது திவான் ஒலி காட்டுப்பள்ளி வாசல் கந்தூரி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. வல்லம் முஸ்லிம் ஜமாத்துக்கு பாத்தியப்பட்ட காட்டு பள்ளிவாசல் கொடியேற்ற நிகழ்வு பச்சை களை ஊர்வலம் மேல தாளங்கள் முழங்க நிறைபிறை கோடியானது வல்லம் பெரிய பள்ளிவாசலில் இருந்து தொடங்கி பிரதான பாதைகளில் வலம் வந்து சிறிய பள்ளிவாசலான சேகுவர்ஷா தர்காவில் கொடி ஏற்றப்பட்டு பின்னர் ஊர்வலமாக காட்டு…
மதுரை : எல்ஐசி தீ – திடீர் திருப்பம்
மதுரை எல்ஐசி அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பான வழக்கில் அதிரடி திருப்பம். கல்யாணி நம்பி என்ற பெண் மேலாளர் தீ விபத்தில் உயிரிழந்ததாக கருதப்பட்ட நிலையில் அவர் கொலை செய்யப்பட்டது அம்பலம். பெண் மேலாளரை கொன்றதாக அலுவலக உதவி மேலாளர் ராமகிருஷ்ணன் என்பவர் கைது மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி
கோட்டார் இளங்கடை ஈத்கா மைதானத்தில் சிறுவர் பூங்கா – மேயர் ரெ.மகேஷ் திறப்பு.
நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட கோட்டார் இளங்கடை முஸ்லீம் சமுதாய ஈத்கா மைதானத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்காவின் திறப்பு விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. குழந்தைகளுக்கான புதிய விளையாட்டு உலகம் நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி மேயரும், குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளருமான திரு. ரெ.மகேஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, ரிப்பன் வெட்டி பூங்காவை திறந்து வைத்தார். பின்னர் விழாவில் அவர் உரையாற்றுகையில், “இப்பூங்கா அப்பகுதி சிறுவர்களின் விளையாட்டுத் திறனை வளர்க்கவும், மனமகிழ்ச்சியுடன் நேரத்தை கழிக்கவும் பெரிதும்…
நாகர்கோவில் செட்டிக்குளம் நடைபாதை ஆக்கிரமிப்பு: கண்டும் காணாமல் ஆய்வு செய்யும் மேயர்?
நாகர்கோவில், ஜனவரி 19 : மாநகராட்சியின் முக்கிய சந்திப்பான செட்டிக்குளம் – சவேரியார் கோவில் பகுதியில்,சமீபத்தில் அவசரம் அவசரமாக நடைபாதைகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. இந்தப் பணிகள் மிக விரைவாக முடிக்கப்பட்டதன் நோக்கம் பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதே என்று கருதப்பட்ட நிலையில், தற்போதைய களநிலவரம் அதற்கு மாறாக உள்ளது. குறிப்பாக, மாநகராட்சி மேயர் மகேஷ் அவர்கள் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போது, அவரது முன்னிலையிலேயே பல இடங்களில் நடைபாதைகள் வணிகப் பொருட்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது…
கோவையில் 50- ஆண்டுகாலமாக பள்ளிக்கூடம் நடத்தி தனது விசுவாசத்தை சொந்த மாநிலமான கேரளாவுக்கு காட்டிய நிர்வாகம்.
தமிழ்நாட்டில் கோவையில்50 ஆண்டு காலமாக நடந்து வரும் பள்ளி அவிலா கான்வென்ட் மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்டரி ஸ்கூல் மாணவிகள் மட்டுமே படிக்கும் இந்த பள்ளியில் பல ஆண்டுகளாக பேண்ட் இசை குழு பல போட்டிகளில் பங்கு பெற்று பல பரிசுகளை பெற்றுள்ளது. இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் தென்னிந்திய அளவில் தெலுங்கானாவில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையேயான பேண்ட் வாத்திய போட்டியில் தமிழகத்தை சேர்ந்த அவிலா பள்ளி முதலிடம் பெற்றது. போட்டி நடந்து 20 நாட்களுக்கு பிறகு…
மாநகராட்சிக்கு மாமூலா? விதிகளுக்குச் சவால் விடும் உணவகங்கள்: நாகர்கோவிலில் தொடரும் விதிமீறல்கள்!
நாகர்கோவில், ஜனவரி 18: நாகர்கோவில் மாநகராட்சிப் பகுதிகளில் செயல்படும் சில தனியார் உணவகங்கள், அரசு விதிமுறைகளையும் போக்குவரத்துச் சட்டங்களையும் துச்சமாக மதித்துச் செயல்படுவது பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, வடசேரி பேருந்து நிலையம் மற்றும் நீதிமன்ற சாலைப் பகுதிகளில் உணவகங்களின் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரசுப் பலகைக்கே சவால்!வடசேரி பேருந்து நிலையப் பகுதியில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள ஒரு உணவகம், மாநகராட்சியின் விதிகளை வெளிப்படையாகவே மீறி வருகிறது. அந்தப் பகுதியில்…
