இதழ்கள்
கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய விஜய் வசந்த் விநாயகர் சதுர்த்தி பண்டிகை வாழ்த்து.
ஆக் 26, கன்னியாகுமரி விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு என் உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். வினைகள் தீர்க்கும் விக்னேஸ்வரன் நமது வினைகளை போக்கி நல்ல தொடக்கங்களுக்கு அருள் புரிவாராக. அறிவும், அறிவுறுத்தலும், வெற்றியும் அருள்புரியும் விநாயகப் பெருமான், நம்மை எல்லாம் நல்லெண்ணப் பாதையில் நடத்தும் வழிகாட்டியாக விளங்குவாராக. இந்த புண்ணிய நாளில், அனைவரின் இல்லங்களிலும் அமைதி, ஆரோக்கியம், செழிப்பு மலர வேண்டும் என்று நான் இறைவனை வேண்டுகிறேன். எந்த இடரையும் அகற்றி,மனங்களில் மகிழ்ச்சியை வளர்த்து,சமூகத்தில் ஒற்றுமை, அன்பு,…
உங்களுடன் ஸ்டாலின் முகாம் பெரிய பிள்ளை வலசையில் துவக்கி வைப்பு.
தென்காசி ஆகஸ்ட் – 26 – தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்துள்ள பெரிய பிள்ளை வலசை ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் முகாமை துவக்கி வைத்து பொதுமக்களின்மனுக்களை உடனுக்குடன் துரித நடவடிக்கை எடுத்து மக்களுக்கு எளிய வகையில் அனைத்து அரசு அலுவலகங்களும் ஒரே இடத்தில் கிடைக்கப்படுவது மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக கூறி வருகின்றனர். காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் தமிழ்நாடு அரசின்…
பழனி அருகே பாலசமுத்திரம் RC துவக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் விரிவாக்க தொடக்க விழா நடைபெற்றது.
அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில், முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் விரிவாக்க தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐபி செந்தில்குமார் அவர்களின் அறிவுறுத்தலின்படி, ஒன்றிய செயலாளர் இரா.சௌந்தரபாண்டியன், பேரூர் செயலாளர் சோ.காளிமுத்து, பேரூர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சுப்புராம். பேரூராட்சி செயலர் மு.சித்திரைக்கனி, பேரூர் மாணவரணி அமைப்பாளர் K.நாகராஜ் ஆகியோர் மாணவ மாணவிகளுக்கு காலை உணவு வழங்கினர். இந்நிகழ்ச்சியில் அதிகாரிகள் கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இடத்தை காலி பண்னுங்க கொடுக்கிற இடத்துக்கு போங்கநகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள பேரூந்து நிலையம் , மார்க்கெட் ஏரியா விபி தெரு, TTK ரோடு, மவுண்ட் ரோடு பகுதியில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு மாற்றிடமாக பெட்போர்டு, சிம்ஸ்பார்க்,வண்டிச்சோலை ஓட்டுப்பட்டறை பிருந்தாவன் பள்ளி அருகில் உழவர் சந்தை பகுதியில் குறைந்த. வாடகையில் சாலையோர கடைகள் கொடுக்கப்பட உள்ளது. விரைவில் குன்னூரில் உள்ள அனைத்து சாலையோர கடைகளும் அகற்றப்படும் என குன்னூர் சாலையோர வியாபாரிகளிடம் குன்னூர் நகராட்சி ஆனையாளர் தெரிவித்தார்
கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பழனி அருகே பழைய ஆயக்குடியில் பொதுமக்களுக்கு அன்னதானமும் இனிப்புகளும் வழங்கப்பட்டது.
ஆயக்குடி நெப்போலியன் அவர்களின் தலைமையில் K.P.சித்தன் மற்றும் துரு விக்ரம் ஸ்போர்ட்ஸ் கிளப் நண்பர்கள் சார்பாகவும் பிறந்தநாள் விழா ஏற்பாடு செய்யப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் விரிசடி காலனியில் சாதிவெறி தாக்குதல்கள் – புகார் மனு அளிப்பு.
கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி பேரூராட்சிக்கு உட்பட்ட விரிசடி காலனியில் கடந்த சில நாட்களாக சாதிவெறி தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் நடந்த கொலைவெறி தாக்குதலில் பலத்த காயம் அடைந்த ஒருவர் ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நேற்று மீண்டும் கையில் கத்தியுடன் சுற்றித்திரிந்த ஜெயபால் என்ற இளஞ்சரை கண்ட அப்பகுதி மக்கள் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலரிடம் தெரிவித்துள்ளனர். எனினும் காவலர் அலட்சியமாக “கையில் கத்தியை சும்மா தானே வைத்திருந்தார், உங்களை…
வாணியம்பாடியில் பட்டபகலில் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ருபாய் 5 லட்சத்தை கொள்ளை அடித்து சென்ற வழக்கில் சென்னை இந்திரா நகர் பகுதியை சேர்ந்த ரத்தின குமார் என்பவர் கைது. ரூபாய் 5 லட்சம் பறிமுதல்.
வாணியம்பாடி,ஆக.25- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பாலப்பனூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் வாணியம்பாடி மலங்கு சாலையில் புதியதாக வீடு கட்டி வருகிறார். இந்நிலையில் வீடு கட்டும் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க கடந்த ஜூன் மாதம் 28 ஆம் தேதி ரூபாய் 5 லட்சத்திற்கான காசோலையை ஒப்பந்ததாரரான ஜெயபால் என்பவரிடம் அளித்துள்ளார். அதனை பெற்றுக்கொண்ட ஜெயபால், வாணியம்பாடி சி.எல். சாலையில் உள்ள வங்கிக்கு சென்று ரூபாய் 5 லட்சத்தை எடுத்துக் வந்து சுப்பிரமணியிடம் ஒப்படைத்துள்ளார். சுப்பிரமணி பணத்தை…
குமரி காவல்துறையில் அவசர பிரிவு வாகனங்கள் – எஸ்.பி. துவக்கம்
ஆக் 25, கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டத்தில் காவல்துறையின் அவசர பணிகளை வேகமாகச் செய்யும் நோக்கில் ‘குயிக் ரெஸ்பான்ஸ் டீம்’ (Quick Response Team) வாகனம் இன்று (ஆகஸ்ட் 25) அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வாகனத்தை கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மாவட்டத்தின் எந்தப் பகுதியில் பிரச்சனை ஏற்பட்டாலும், அதற்கு உடனடியாக சென்று நடவடிக்கை எடுக்கச் செய்வதற்காக இந்த வாகனம் பயன்படுத்தப்படவுள்ளது என காவல்துறை தெரிவித்துள்ளது. குமரி மாவட்ட செய்தியாளர் பாவலர் ரியாஸ்.
பேரூராட்சி அதிகாரிகளை கண்டித்து காத்திருப்பு போராட்டம்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் தெருவிளக்குகள் அமைத்து தராமல் கடந்த நான்கரை ஆண்டுகளாக அலட்சியம் காட்டி வரும் அதிகாரிகளை கண்டித்து, 25-க்கும் மேற்பட்ட பேரூராட்சி மன்றத் தலைவர்கள் இன்று (22.08.2025) நாகர்கோவிலில் உள்ள பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பொது நிதி அல்லது சிறப்பு நிதியிலோ தெருவிளக்குகளுக்கான நிதி ஒதுக்கப்படாமல் அதிகாரிகள் மெத்தனப்போக்கில் செயல்படுவதாகக் குற்றம் சாட்டிய அவர்கள், உடனடி நடவடிக்கை எடுத்து தெருவிளக்குகள் அமைக்க வேண்டும் என வலியுறுத்தினர். மாவட்ட செய்தியாளர்…
ரயில்வே நிறுத்தங்கள், ரயில் நீட்டிப்பு, அடிப்படை வசதிகள் – கோட்ட மேலாளரிடம் விஜய்வசந்த் எம்.பி. கோரிக்கை.
ஆக் 22, கன்னியாகுமரி திருவனந்தபுரம்: குமரி மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் ரயில் நிறுத்தங்கள், ரயில்களின் நீட்டிப்பு, ரயில் நிலையங்களில் அடிப்படை வசதிகள், ரயில்வே உட்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் குறித்து திருவனந்தபுரம் கோட்ட ரயில்வே மேலாளரிடம் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கோரிக்கை வைத்தார். புதிய கோட்ட மேலாளரை சந்திப்பு திருவனந்தபுரம் ரயில்வே கோட்ட மேலாளராக புதியதாக பொறுப்பேற்ற திவ்யகாந்த் சந்திராகர் அவர்களை மரியாதை நிமித்தமாக விஜய் வசந்த் சந்தித்தார். மக்கள் நலனுக்கான கோரிக்கைகள் இந்த…
